என் மலர்
நீங்கள் தேடியது "Appreciation ceremony"
- பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து.
- மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
கோவை:
தமிழக பா.ஜ.க மாநில தலைவராக நெல்லை தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.
பா.ஜ.க மாநில தலைவராக பதவியேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நயினார் நாகேந்திரன் தலைவராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக நாளை (19-ந்தேதி) கோவைக்கு வருகை தர உள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிதாக பதவியேற்ற நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக அவர் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வரும் அவருக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் சார்பில் மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
வரவேற்பை ஏற்றுக்கொண்டதும், அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு விழா நடைபெறும் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு செல்கிறார்.
அங்கு நடக்கும் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
விழாவுக்கு கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் பலர் பங்கேற்று பேச உள்ளனர்.
- பாளை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து.
- பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
நெல்லை:
பாளை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து. இவர் பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமித்து மக்கள் சிரமமின்றி செல்வதற்கு வழிவகை செய்துள்ளார்.
மேலும் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் நடத்தி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். இவரது பணியை சோலைக்குள் நெல்லை அமைப்பினர் பொன்னாடை அணிவித்து, மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினர்.
இதுகுறித்து சோலைக்குள் நெல்லை அமைப்பின் தலைவர் நாகராஜன் கூறும் போது,
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பதவி ஏற்ற பிறகு பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தார். போக்குவரத்து காவலர்கள் இல்லாத போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீர் செய்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தான் பணிபுரியும் ஒவ்வொரு இடத்திலும் முடிந்தவரை மரங்களை நட்டு அந்த இடத்தை பசுமையாக மாற்றியவர். ஊனமுற்றவர்களை எங்கு கண்டாலும் அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்பவர். இவரை சோலைக்குள் நெல்லை அமைப்பின் சார்பில் பாராட்டுகிறோம் என்றார். நிகழ்ச்சியில் சோலைக்குள் நெல்லை அமைப்பை சார்ந்த மீனாட்சி சுந்தரம், விநாயகம், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
- போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா மாநில அளவில் நான்காம் இடம் பெற்று கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றார்
கரூர்:
கரூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா மாநில அளவில் நான்காம் இடம் பெற்று கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றார். மாணவி தனனி 15வது இடம் பெற்றார். மேலும், ஹேமஸ்ரீ, திகழ், அஸ்வந்த், பத்ரிநாத், சர்வேஸ் ஆகியோர் தகுதி சான்று பெற்றனர்.
தொடர்ந்து, பள்ளியில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. இதில், மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வீரமலை, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டினர். விழாவில் தலைமை ஆசிரியர் சாகுல் அமீது உட்பட பலர் பங்கேற்றனர்.
- நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி மனோ ஸ்ரீக்கு ரொக்கப்பரிசுவழங்கினார்.
ஆலங்குளம்:
தமிழ்நாடு அரசின் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு, மாநில அளவில் முதலிடம் பிடித்த நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, ஆலங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், நெட்டூர் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்துகொண்டு, கலைத் திருவிழாவில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளித்து, வாழ்த்திப் பேசினார். மேலும், ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி மனோ ஸ்ரீக்கு ரொக்கப் பரிசும் வழங்கினார்.
விழாவின் சிறப்பு அம்சமாக, மாநில அளவிலான கலைத் திருவிழாவில் முதலிடம் பெற்ற இளங்குமரன் தலைமையிலான மாணவர்கள் அசோக்குமார், மகராஜா, சமேஷ் ஸ்ரீராம், ஞானபிரகாஷ் ஆகியோரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், தொழிலதிபர்கள் இசக்கிதுரை, மணிகண்டன், தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சேக்முகமது, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுப்பையாபுரம் முத்துலெட்சுமி, அய்யனார்குளம் நீதிராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன், நெட்டூர் ஊராட்சி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், பேச்சித்துரை, கிளைச் செயலாளர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்தையா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அருணாசலம், மேலாண்மைக் குழு கல்வி ஆர்வலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகளை முதுகலை ஆசிரியர் ஷேக் அப்துல்காதர் தொகுத்து வழங்கினார். முதுகலை ஆசிரியர் பொன்னுச்செல்வி நன்றி கூறினார்.
- சேலியமேடு அரசு நடுநிலைப் பள்ளியின் 4 வகுப்பறைகளுக்கு கரும் பலகைகள் வழங்கப்பட்டது.
- பக்கிரிசாமி, பழனிசாமி, ஜீவரத்தினம் ஆதிநாராய ணன், லட்சுமி, ரமணி, பத்மா, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு 1977-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் குமரவேலு தலைமையில் பள்ளி அளவில் 425 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி ரோஷினிக்கு ரூ.5 ஆயிரமும் , 410 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்த மாணவி அபிநயாவுக்கு ரூ.3 ஆயிரமும், 400 மதிப்பெண் பெற்று 3-வது இடம் பிடித்த மாணவி அனுப்பிரியாவுக்கு ரூ.2 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சேலியமேடு அரசு நடுநிலைப் பள்ளியின் 4 வகுப்பறைகளுக்கு கரும் பலகைகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன், பிரான்ஸ் கண்ணபிரான், நிர்வாகிகள் பாலசுந்தரம், தட்சிணா மூர்த்தி, அய்யனார், கனகராசு, புவனேஸ்வரன், தமிழ்வளவன் சுப்பிரமணி, விஸ்வநாதன், முரளி, கிருஷ்ணமூர்த்தி, நாகமுத்து, பக்கிரிசாமி, பழனிசாமி, ஜீவரத்தினம் ஆதிநாராய ணன், லட்சுமி, ரமணி, பத்மா, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வருகிற 11-ந் தேதி நடக்கிறது
- ஐயப்ப பக்தர்கள் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்
ராணிப்பேட்டை:
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் வேலூர் மண்டலத்தில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா மற்றும் குரு வந்தனம் அழைப்பு நிகழ்ச்சி வருகிற ஜூன் 11-ந்தேதி ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள ரமணி சங்கர் மஹாலில் நடைபெறகிறது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகள் சேவா சமாஜத்தின் நிர்வாகிகள், குருமார்கள், ஐயப்ப பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாநில நிர்வாகிகள், குருமார்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர், ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு தேசிய கமிட்டி நிர்வாகிகள், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ தேசிய பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஐயப்ப பக்தர்கள் என 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த தகவலை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வட தமிழ்நாட்டின் மாநில தலைவரும் சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவில் குருசாமியுமான ஜெயச்சந்திரன் ெதரிவித்துள்ளார்.
- ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.
- சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருப்பூர் :
திருப்பூர் கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் செயலாளர் எக்ஸ்லான். கே. ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். மணிப்பூர், மேகலாயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் 10 ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி காவ்யா மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி பிரதிக்ஷாவிற்கும் சிறப்பிடம் பெற்ற பிற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் தலைவர் வீனஸ். குமாரசாமி நன்றி கூறினார்.
- 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் உமாதேவி வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவரும், காவல் ஆணைய உறுப்பினருமான முன்னாள் டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், 'பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து படிப்புகளுக்குமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. வாய்ப்பை பயன்படுத்தி கொண்டவர்கள் அடுத்த கட்டத்திற்கு உயருகின்றனர். வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதே இடத்திலேயே நின்று விடுகின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன், சார்பு ஆய்வாளர் சங்கர நாராயணன், நத்தம்பட்டி சார்பு ஆய்வாளர் பண்டிலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- த.மு.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.
- 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவன் ராகுலை பாராட்டி கேடயம் வழங்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி 2-ம் வகுப்பு மாணவி ஆதிபா இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இனணயத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தமிழ் நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை 19 நொடிகளிலும், இந்தியா வில் உள்ள 28 மாநிலங்களை 16 நொடிகளிலும், 247 தமிழ் எழுத்துக்களை 53 நொடி களிலும் கூறி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டில் இட ம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் த.மு.மு.க. தலைமை பிரதி நிதி மண்டலம் ஜெயினு லாப்தீன் தலைமையில் மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் நடைபெற்றது.
கிளை தலை வர் காதர் வரவேற்றார். ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராஜ், பரக்கத் அலி, மைதீன், பொருளா ளர் ஹம்மாது, கவுன்சிலர் பானு உட்பட பலர் கலந்து கொண்ட னர். தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார். இதே போல் 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவன் ராகுலை பாராட்டி கேடயம் வழங்கினர்.
- ஏர்வாடி தர்ஹா நகர் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் நன்றி பாராட்டு விழா நடந்தது.
- அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றி யம், ஏர்வாடி ஊராட்சிக்குட் பட்ட தர்ஹா நகர் (தண்ணீர் பந்தல்) பகுதியில் அமைந் துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–யில் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் தினமான நேற்று நன்றி பாராட்டு விழா நடை பெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளிக்கு புதிதாக இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு உறுது ணையாக இருந்த தற்கும், மாணவர்கள் நிழலில் அமர்ந்து கல்வி பயில இரண்டு பள்ளிக் கட்டிடங்க ளுக்கு இடையில் உள்ள பகுதிக்கு ஊராட்சியின் மூலம் செட் அமைத்து கொடுத்ததற்கும், பள்ளி வளாகத்தில் வெண்ணி லப்பகுதி முழுவதும் ஊராட் சியின் மூலம் இண்டர்லாக் தளம் அமைத்து கொடுத்த தற்கும் நன்றி தெரிவிக்கப்பட் டது.
ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் கே.எம்.வி.செய்யது அப்பாஸ், ஊராட்சி மன்ற துணைத்த லைவர் ஜாஹிர் அப்பாஸ், இப்பள்ளியில் பயிலும் சுமார் 140 மாணவ, மாணவி களுக்கும் இலவசமாக 2 செட் பள்ளி சீருடை, இரண்டு செட் சாக்ஸ், இரு ஜோடி ஷூ ஆகியவைகளை வழங்கிய மலேசியாவை சேர்ந்த குட் பீப்புள் கிளப் என்ற தொண்டு அமைப்பை சேர்ந்த நாகூர் மற்றும் அவரின் மனைவிக்கும்,
மலேசிய குட் பீப்புள் கிளப் தொண்டு நிறுவ னத்தை இப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இந்த இலவச சீருடை சேவையை செய்ய தூண்டு தலாக செயல்பட்ட பள்ளி யின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரக்கத் ஹோட்டல் உரிமையாளர் ஆசிக், பள்ளியின் வளர்ச்சி யில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஏர்வாடி கல்வி தொண்டு அறக் கட்டளை தலைவர் ஏர்பாத் பாதுஷா, சமூக சேவகர் நல்லா (எ) நல்ல இபுராஹிம் ஆகியோருக்கும் பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக் கப்பட்டு அனை வருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரி சாக புத்தகம் வழங்கப்பட் டது.
இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசி ரியர் கழகத் தலைவர் துல் கருணை பாட்ஷா, பள்ளி யின் தலைமை ஆசிரியை ஜோதி மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- செய்யது ஹமீதா கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.
கீழக்கரை
முகம்மது சதக் அறக்கட்டளையின் பொன் விழாவினை முன்னிட்டு கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் தவசலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஹமிதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாசர் வாழ்த்த பேசினார்.
கீழக்கரை அல்பைனா பள்ளி ஆசிரியை முகமது ஜெய்லானி, சாயல்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மொத்தம் 50 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ், பொன்விழா கேடயம் ஆகியவை வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார். பேராசிரியை ஜக்கினா ஆமினா, சுபேர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.
- திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கபடி போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை யாசிரியர் வெங்கடசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன், அபிநயா அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 78 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருமால்வளவன் நன்றி கூறினார்.
பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.
விழாவில் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.