என் மலர்
நீங்கள் தேடியது "Conducted by Hamida College"
- செய்யது ஹமீதா கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.
கீழக்கரை
முகம்மது சதக் அறக்கட்டளையின் பொன் விழாவினை முன்னிட்டு கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் தவசலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஹமிதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாசர் வாழ்த்த பேசினார்.
கீழக்கரை அல்பைனா பள்ளி ஆசிரியை முகமது ஜெய்லானி, சாயல்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மொத்தம் 50 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ், பொன்விழா கேடயம் ஆகியவை வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார். பேராசிரியை ஜக்கினா ஆமினா, சுபேர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.






