search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
    X

    மாணவன் ஒருவருக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய காட்சி.


    நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

    • நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி மனோ ஸ்ரீக்கு ரொக்கப்பரிசுவழங்கினார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு அரசின் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு, மாநில அளவில் முதலிடம் பிடித்த நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, ஆலங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், நெட்டூர் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார்.


    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்துகொண்டு, கலைத் திருவிழாவில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளித்து, வாழ்த்திப் பேசினார். மேலும், ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி மனோ ஸ்ரீக்கு ரொக்கப் பரிசும் வழங்கினார்.

    விழாவின் சிறப்பு அம்சமாக, மாநில அளவிலான கலைத் திருவிழாவில் முதலிடம் பெற்ற இளங்குமரன் தலைமையிலான மாணவர்கள் அசோக்குமார், மகராஜா, சமேஷ் ஸ்ரீராம், ஞானபிரகாஷ் ஆகியோரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், தொழிலதிபர்கள் இசக்கிதுரை, மணிகண்டன், தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சேக்முகமது, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுப்பையாபுரம் முத்துலெட்சுமி, அய்யனார்குளம் நீதிராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன், நெட்டூர் ஊராட்சி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், பேச்சித்துரை, கிளைச் செயலாளர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்தையா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அருணாசலம், மேலாண்மைக் குழு கல்வி ஆர்வலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிகளை முதுகலை ஆசிரியர் ஷேக் அப்துல்காதர் தொகுத்து வழங்கினார். முதுகலை ஆசிரியர் பொன்னுச்செல்வி நன்றி கூறினார்.

    Next Story
    ×