search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shield"

    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
    • தலைமை ஆசிரியர் வசந்தா, ஆசிரியர் ரீட்டாசகாயமேரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

    ஊட்டி,

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநிலம் முழுவதும் உள்ள சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து கேடயம் வழங்கினார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஒன்றியத்தில் உள்ள பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ரீட்டாசகாயமேரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கோமதி தலைமை ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். வட்டார கல்வி அலுவலர் வனிதா பாராட்டினார். தலைமை ஆசிரியருடன் ஆசிரியர்கள் சுந்தரம், ரீட்டா சகாயமேரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    கேடயம் பெற்ற பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், பாராட்டினர். 

    • மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு குழு அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
    • சிறந்த பள்ளிகளுக்கான பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் இருந்து மாவட்டம் தோறும் மூன்று பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பள்ளிகளுக்கான பரிசு, கேடயம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 2022-23 கல்வி ஆண்டுக்கான மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு குழு அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்த மூன்று பள்ளிகளில் ஒன்றாக சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து நடுநிலை பள்ளி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    இந்த பள்ளிக்கான பரிசு மற்றும் கேடயம் சென்னையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் வழங்கினார்.

    அப்போது அப்பள்ளியை சேர்ந்த சக ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியர் பாலமுருகன் பரிசை பெற்றுக்கொண்டார்.

    இந்த விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் பரிசு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை, பள்ளி செயலர் சொக்கலிங்கம் மற்றும் பிற பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • த.மு.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.
    • 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவன் ராகுலை பாராட்டி கேடயம் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி 2-ம் வகுப்பு மாணவி ஆதிபா இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இனணயத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தமிழ் நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை 19 நொடிகளிலும், இந்தியா வில் உள்ள 28 மாநிலங்களை 16 நொடிகளிலும், 247 தமிழ் எழுத்துக்களை 53 நொடி களிலும் கூறி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டில் இட ம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் த.மு.மு.க. தலைமை பிரதி நிதி மண்டலம் ஜெயினு லாப்தீன் தலைமையில் மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் நடைபெற்றது.

    கிளை தலை வர் காதர் வரவேற்றார். ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராஜ், பரக்கத் அலி, மைதீன், பொருளா ளர் ஹம்மாது, கவுன்சிலர் பானு உட்பட பலர் கலந்து கொண்ட னர். தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார். இதே போல் 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவன் ராகுலை பாராட்டி கேடயம் வழங்கினர்.

    • 2021-22-ம் கல்வி ஆண்டில் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
    • 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தொடக்ககல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2021-22-ம் கல்வி ஆண்டில் 114 பள்ளி களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

    அதன் தொடர்ச்சியாக, 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. பள்ளியில் இக்குழுவினர் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சி, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட 15 பிரிவுகளில் தலா 10 மதிப்பெண் என 150 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும். இதில் 135 முதல் 150 வரை, 112 முதல் 135 வரை, 112-க்கு கீழ் என 3 பிரிவுகளில் தர மதிப்பீடு வழங்கி, சிறந்த 3 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும்.

    இப்பணிகளை துரிதமாக முடித்து, பரிந்துரை பட்டியலை வரும் ஏப்.26-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கபட்டன.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னனுத்துறை, மின்னனு மற்றும் தகவல் தொடர்பு துறை இணைந்து நடத்திய பொறியியல் கருத்தரங்கம் இ-வொர்டக்ஸ் 2023 நடைபெற்றது.

    இதில் பட்டுக்கோட்டை ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி டீன் பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    ஏ.ஆர்.ஜெ கல்வி குழுமத் துணை தலைவர் மற்றும் தாளாளர் ஜீவகன் அய்யாநாதன் தலைமை தாங்கினார்.

    ஏ.ஆர்.ஜெ கல்விக்குழும தலைவர் ராஜகுமாரி அய்யாநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

    பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடேசன் பாராட்டுரை வழங்கினார்.

    வாண்டையார் பொறியியல் கல்லூரி டீன் மற்றும் பேராசிரியர் டாக்டர் சரஸ்வதி, ஏ.வி.சி பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் தனசேகர் நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றார்.

    முன்னதாக மின் மற்றும் மின்னனு துறை தலைவரும் உதவி பேராசிரியருமான பவித்ராதேவி வரவேற்புரை வழங்கினார்.

    உதவி பேராசிரியர் உமாசத்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்–படுத்தினார்.

    நிகழ்ச்சியின் நினைவாக கருத்தரங்கம் பற்றிய புத்தகம் ஒன்றினை மாணவர்களின் கலை ஆற்றல்களை நிறைத்து மின்னனு மற்றும் தகவல் தொடர்புதுறை உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர் அகல்யா அனைத்து விருந்தினர்களுடன் இணைந்து வெளியிட்டனர்.

    இந்த கருத்தரங்கில் 12 கல்லூரிகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியாளர்களாக பங்கு பெற்றனர்.

    இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கபட்டன.

    முடிவில் மின்னனு மற்றும் தகவல் தொடர்பு துறை உதவி பேராசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.
    • சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியின் 20-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கினார்.

    விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளருமான நிவேதா எம்.முருகன், ஒன்றிய குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், கமலஜோதி தேவேந்திரன், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோ ர்கள் கலந்து கொண்டனர்.

    சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • அரசு பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்துக்கு கலெக்டர் கேடயம் வழங்கினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி துறை சாா்பில் அரசுப் பணியாளா்களுக்கு தமிழ் ஆட்சி மொழிப் பயிலரங்கம் நடைபெற்றது.

    இப்பயிலரங்கத்துக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். இதில், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி வரலாறும் சட்டமும், கணினிப்பயிற்சி, ஆட்சிமொழி அரசாணை களும் செயலா க்கமும், மொழிபெயா்ப்பும் கலை ச்சொல்லாக்கமும், ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும் மற்றும் தமிழில் குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் ஆகிய தலைப்புகளில் அரசுப் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும், 2020 ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாகத் தெரிவு செய்யப்பட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்துக்கு ஆட்சியா் கேடயம் வழங்கினாா். இக்கேடயத்தை அந்த அலுவலகம் சாா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன் பெற்றுக் கொண்டாா்.

    இக்கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநா் எழிலரசு, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சபீா்பானு, மன்னா் சரபோஜி அரசுக் க ல்லூரி உதவிப் பேராசிரியா் அமுதா, அரசா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • ஆடு, மாடு, கோழிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது.
    • கன்று வளர்த்த விவசாயிகள் 3 பேருக்கு கேடயம்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் அக்கரைவட்டம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது

    முகாமில் 1100 க்கும் மேற்பட்ட மாடு, ஆடு, கோழி, போன்ற கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள், வழங்கப்பட்டு கால்நடைகளை பராமரிப்பது குறித்தும் சிறப்பான மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவர்கள், கலியபெருமாள், தினேஷ்குமார், கால்நடை ஆய்வாளர், செல்வேந்திரன், ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலோசனை வழங்கினர்,

    மேலும், கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் காண ஏற்பாடுகளை அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர், கண்ணையன், சிறப்பாக செய்திருந்தார் முகாமில் சிறந்த கிடேரி கன்று வளர்க்கும் விவசாயிகள் 3 பேருக்கு பரிசு பொருள், சிறந்த கால்நடை விவசாயிகள் 3 பேருக்கு கேடயம் வழங்கப்பட்டது,

    இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் இரா, கண்ணையன் நன்றி கூறினார்.

    • பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் உட்பட சிலரிடமிருந்து நடப்பாண்டு ரூ.3 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில அளவில் அதிக நிதி திரட்டிய நூலகங்களில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு முதலிடம் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு மாநில அளவில் முதலிடம் பெற்றதற்கான கேடயத்தையும், பெரம்பலூர் மாவட்ட மைய நூலகருக்கும் 2022-ம் ஆண்டுக்கு நல் நூல்கர் விருதான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதையும் வழங்கி பாராட்டினார்.

    • பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார்.
    • இல்லம் தேடி கல்வி மற்றும் பொது நூலக இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு தொடக்க க்கல்வி துறை சார்பில் 2021-22-ம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான விருதுக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஊரக ஒன்றியம், தோழகிரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.

    பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார்.

    இதனை தஞ்சாவூர் ஊரக ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியர் ரீட்டாமேரி, ஆசிரியர் சுமதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    இந்த விருது பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. முன்னிலையில் வழங்கப்பட்டது.

    இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர், சிறப்பு பணி அலுவலர் இல்லம் தேடி கல்வி மற்றும் பொது நூலக இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.
    • 145 படைப்புகளை மாணவ-மாணவிகள் சமர்ப்பித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் 30-ம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு நாகை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் ஆரிப் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வராஜ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாநாட்டு கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் தொடக்கவுரை ஆற்றினார்.

    நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மாநாட்டை தொடக்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின், தாசில்தார் ஜெய்சீலன், தனி வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் 61 பள்ளிகளை சேர்ந்த 267 மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    இதில் 145 படைப்புகளை மாணவ- மாணவிகள் சமர்ப்பித்தனர். அதில் சிறந்த 15 படைப்புகள் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 8 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
    • திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4 ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் போலிஸ் மற்றும் பொதுமக்கள் நட்புறவு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுமைதாநத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமைவகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு.லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், விவேகானந்தா கல்விநிறுவனங்களின் தலைவர் கே.வி.இராதாகிருஷ்ணன், செயலர் அனிதாராதாகிருஷ்ணன், பப்ளிக் பள்ளி இயக்குனர் அலெக்சாண்டர், மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டியை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கிவைத்தார்.இதில் 8அணிகள் பங்கேற்று விளையாடினர்.மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அணியும், திருவெண்காடு யூத் கிளப் அணியும் இறுதிபோட்டியில் விளையாடினர்.இதில் 25க்கு23,25க்கு 18 என்ற நேர் செட் கணக்கில் திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். காவல்துறை அணி இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். வெற்றிபெற்ற அணிக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா கோப்பையை வழங்கினார்.

    ×