சிறந்த பள்ளிக்கான கேடயம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் தலைமை ஆசிரியர் வசந்தா, ஆசிரியர் ரீட்டாசகாயமேரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்
சிறந்த பள்ளிக்கான கேடயம்
Published on

ஊட்டி,

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநிலம் முழுவதும் உள்ள சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து கேடயம் வழங்கினார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஒன்றியத்தில் உள்ள பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ரீட்டாசகாயமேரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கோமதி தலைமை ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். வட்டார கல்வி அலுவலர் வனிதா பாராட்டினார். தலைமை ஆசிரியருடன் ஆசிரியர்கள் சுந்தரம், ரீட்டா சகாயமேரி ஆகியோர் உடன் இருந்தனர்.

கேடயம் பெற்ற பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், பாராட்டினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com