என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு வழங்கினார்.

    தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.
    • 145 படைப்புகளை மாணவ-மாணவிகள் சமர்ப்பித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் 30-ம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு நாகை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் ஆரிப் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வராஜ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாநாட்டு கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் தொடக்கவுரை ஆற்றினார்.

    நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மாநாட்டை தொடக்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின், தாசில்தார் ஜெய்சீலன், தனி வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் 61 பள்ளிகளை சேர்ந்த 267 மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    இதில் 145 படைப்புகளை மாணவ- மாணவிகள் சமர்ப்பித்தனர். அதில் சிறந்த 15 படைப்புகள் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×