என் மலர்
நீங்கள் தேடியது "Effigy burning"
- பண்ருட்டி அருகே பா.ஜ.க. தலைவர் உருவபொம்மையை தி.மு.க.வினர் எரித்தனர்.
- அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
கடலூரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதையும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சரை ஒருமையில் பேசியதை கண்டித்தும் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையில் அண்ணாகிராம ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சாம்பசிவம் தலைமையில் தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். உருவ பொம்மை எரிப்பதற்கு அவர்கள் ஊர்வலமாக சென்னை சாலையில் வந்தனர்.
இதையடுத்து அண்ணாமலை உருவ பொம்மையை தி.மு.க.வினர் தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள் மற்றும் தி.மு.க.வினர் உருவ பொம்மையை காலணியால் தாக்கி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- அண்ணாமலையின் உருவபொம்மையை அதிமுகவினர் நடுரோட்டில் எரித்தனர்.
- தடுக்க முயன்ற போது போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மானாமதுரை:
கடந்த இரண்டு நாட்கள் முன்பு அண்ணாமலை எதிர்கட்சியான அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசியதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், அதிமுக நிர்வாகிகள் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் அண்ணாமலையின் உருவபொம்மையை நடு ரோட்டில் வைத்து எரித்தும், காலணிகளால் அடித்தும் அதிமுகவினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
அப்போது இதை தடுக்க முயன்ற போது போலீசாருக்கு, அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அண்ணாமலை உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர்.
அப்போது போலீசாருக்கு, அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ராணிப்பேட்டை, அருப்புக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலும் அண்ணாமலையை எதிர்த்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அமித்ஷா படத்தை கால்களால் மிதித்து அவமரியாதை செய்தனர்.
- அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்:
ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை கண்டித்து ஒசூர் தொகுதி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் எம்.ஜி.ரோடில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெற்றது.
இந்த நிலையில், மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென அமித் ஷாவின் உருவ படத்தை தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர், கட்சியினரிடமிருந்து படத்தை கைப்பற்ற முயன்றார்.
ஆனால் கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டு, சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தி, அமித் ஷாவின் படத்தை முழுவதுமாக எரித்தனர்.
மேலும், அவரது படத்தை கீழே போட்டு கால்களால் மிதித்து அவமரியாதை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செந்தமிழ், ஜீபி கிருஷ்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கூட்ரோட்டில் இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாய் கழுத்தில் கமல் உருவ படத்தை தொங்கவிட்டிருந்தனர். மேலும் கமல் உருவ பொம்மையை எரித்தனர். கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியை தடைசெய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போராட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமைதி வழியில் போராடி வரும் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக்கொன்ற தமிழக காவல்துறையை கண்டித்தும், இந்த படுகொலைக்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுவை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் பெருமாள், இளைஞரணி தலைவர் சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் ஜெகன், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் முருகன், மணவெளி தொகுதி தலைவர் கிருஷ்ணன், புதுவை மாணவர் கூட் டமைப்பு சாமிநாதன்,
அம்பேத்கார் தொண்டர் படை பாவாடைராயன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப் பிரியன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
அப்போது இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்டம் உருவானது. போலீசார் போராட்டக்காரர்களிடம் இருந்து உருவ பொம்மையை பறித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய 50 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.






