என் மலர்
செய்திகள்

கமல்ஹாசன் உருவ பொம்மையை எரித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
ஜோலார்பேட்டையில் கமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பு
ஜோலார்பேட்டையில் கமல்ஹாசன் உருவ பொம்மையை எரித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை:
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கூட்ரோட்டில் இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாய் கழுத்தில் கமல் உருவ படத்தை தொங்கவிட்டிருந்தனர். மேலும் கமல் உருவ பொம்மையை எரித்தனர். கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியை தடைசெய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போராட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story