search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தின்போது போலீசாருக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சி.
    X
    போராட்டத்தின்போது போலீசாருக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சி.

    தமிழக முதல்-அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 50 பேர் கைது

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழக முதலமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமைதி வழியில் போராடி வரும் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக்கொன்ற தமிழக காவல்துறையை கண்டித்தும், இந்த படுகொலைக்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுவை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் பெருமாள், இளைஞரணி தலைவர் சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் ஜெகன், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் முருகன், மணவெளி தொகுதி தலைவர் கிருஷ்ணன், புதுவை மாணவர் கூட் டமைப்பு சாமிநாதன்,

    அம்பேத்கார் தொண்டர் படை பாவாடைராயன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப் பிரியன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

    அப்போது இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்டம் உருவானது. போலீசார் போராட்டக்காரர்களிடம் இருந்து உருவ பொம்மையை பறித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய 50 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×