search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadaikutty Singam"

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, சினிமாவுக்கு வந்த போது எதுவுமே தெரியாது என்று பட விழாவில் கூறியிருக்கிறார். #Karthi
    ஆசிப் குரேஷி இயக்கத்தில் உதயா, பிரபு, நாசர், கோவை சரளா நடித்துள்ள உத்தரவு மகாராஜா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், அருண்விஜய், விவேக், மனோபாலா, பசுபதி, ரோகிணி, லிசி, சங்கீதா, இயக்குனர்கள் ஆர்கே செல்வமணி, ஆர்வி.உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கார்த்தி பேசும்போது ’உதயா எப்போதுமே ஒரு படத்தை பார்த்தால் அந்த படத்தை டீட்டெய்ல்டாக விமர்சனம் செய்வார். முதல்முறையாக உதயாவின் அப்பா உதயாவை பாராட்டி இருக்கிறார். அப்பா பாராட்டினால் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம் என்று அர்த்தம்.

    இந்த படம் பெரிய ரிஸ்க் என்பது டிரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. இங்கு பேசியவர்கள் என் தந்தை எங்களை சினிமாவுக்குள் எளிதாக கொண்டுவந்து விட்டதாக பேசினார்கள். அப்படி இல்லை. எல்லாவற்றிற்குமே காத்திருப்பு இருக்கிறது.

    சிறுத்தைக்கு பின் நிறைய படங்கள் நடித்துவிட்டேன். கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்தவர்கள் சிறுத்தைக்கு பிறகு இது நன்றாக இருக்கிறது என்கிறார்கள். நான் சினிமாவுக்குள் வந்தபோது டான்ஸ், சண்டை எதுவும் தெரியாது. உள்ளே வந்துதான் கற்றுக்கொள்ள தொடங்கினேன்’ என்றார்.
    தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சூரி, தன்னுடைய சொந்த ஊர் கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடியிருக்கிறார். #Soori
    இன்றைய தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. சந்தானம் ஹீரோ ஆனபிறகு புதிய படங்களில் அவரது ‘காமெடி’ இடத்தை சூரி நிரப்பி வருகிறார்.

    ‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட இவர் கதாநாயர்களுடன் கைகோர்த்த படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.

    மேலும் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவருடைய காமெடியும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்னும் பல படங்களில் இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கிறது.



    இந்நிலையில் தன்னுடைய சொந்த ஊரின் கோவில் திருவிழாவில் கலந்துக் கொண்ட சூரி, சொந்தபந்தங்களுடன் ஒயிலாட்டம் ஆடியிருக்கிறார். மேலும் அந்த வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார்.
    விவசாய நிலங்களை அழித்து ரோடு போடுபவர்களுக்கு கடைக்குட்டி சிங்கம் படத்தை காட்ட வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். #Satyaraj
    கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2டி ராஜ்சேகர் பாண்டியன், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், சரவணன், சூரி, மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீமன், மனோஜ் குமார், நாயகி சயீஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா பினு, பானு ப்ரியா, மௌனிகா, ஜீவிதா, இந்துமதி, கலை இயக்குனர் வீர சமர், எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் சத்யராஜ் பேசும்போது, ‘இந்த படத்தை முதலில் மக்கள் மீது அக்கரைக்கொண்டு நாட்டை பாதுக்காக்கிறோம் என்றும், விவசாய நிலங்களை அழித்து, சொகுசாக ரோட்டில் செல்வதற்காக மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு படத்தை முதலில் போட்டு காட்ட வேண்டும். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2டி நிறுவனம் விவசாயிகளுக்கு உதவியுள்ளது தான். 

    படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்குஒருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது. நான் முதலிலிருந்து கூறியது போலவே இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுள்ளது’ என்றார்.
    கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. #KadaikuttySingam
    கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் விவசாயம் மற்றும் குடும்பத்தின் ஒற்றுமையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா இன்று நடந்தது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.



    இதில் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடியை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார். மேலும் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. #KadaikuttySingam

    தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். #Karthi #SriReddy
    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். சொந்த பந்தங்களின் ஒற்றுமை, விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருவாக கொண்டு படம் உருவாகி இருக்கிறது.

    படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் ஒவ்வொரு ஊராக திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

    நேற்று கார்த்தி, பாண்டிராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் புதுக்கோட்டை சென்றனர். அங்குள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த ரசிகர்களை சந்தித்தனர்.  



    இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் கார்த்தி கூறியதாவது:-

    துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது பெருமைக்குரியது. அதேபோல் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று கவனம் செலுத்தி திட்டத்தை வகுக்க வேண்டும் என்று துணைக் குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.

    ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். #KadaikuttySingam #Karthi #SriReddy

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் சின்னபாபு படத்தின் வெற்றி விழாவுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி ரசிகர்களை வியக்க வைத்தார். #Karthi #KadaikuttySingam
    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். சத்யராஜ், பிரியா பவானிசங்கர், அர்த்தனா, சூரி, விஜி சந்திரசேகர், இளவரசு, மாரிமுத்து, சரவணன், ஸ்ரீமன், பானுப்ரியா, மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என நட்சத்திரப் பட்டாளங்களே நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக மக்கள் குடும்பத்துடன் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்கின்றனர். 

    இந்த படம் தெலுங்கில் சின்னபாபு என்ற பெயரில் வெளியாகியது. தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் கார்த்தி ஐதராபாத் சென்றார். அப்போது மழையின் காரணமாக அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், சரியான நேரத்திற்கு விழாவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 



    இதையடுத்து நடிகர் கார்த்தி மற்றும் படத்தின் தெலுங்கு வெளியீட்டாளர் உள்ளிட்ட பலரும் ஆட்டோ பிடித்து விழா நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். கார்த்தி ஆட்டோவில் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை கார்த்தி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karthi #KadaikuttySingam

    கார்த்தி விவசாயியாக நடித்திருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படம் ரிலீசாகியிருக்கும் நிலையில், விவசாயம் செய்யப்படாத நிலங்களில் சாலை போடலாம், விவசாயத்தை அழிக்கும் எதுவும் செய்யக்கூடாது என்று கார்த்தி கூறியிருக்கிறார். #Karthi
    கார்த்தி விவசாயியாக நடித்து இருக்கும் “கடைக்குட்டி சிங்கம்” படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதையொட்டி கார்த்தி அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு:-

    கேள்வி:- விவசாயியாக நடிக்க பெரிய ஹீரோக்கள் தயங்குவார்கள். நீங்கள் எப்படி நடித்தீர்கள்?

    பதில்:- எனக்கு விவசாயியாக நடிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. அதை கடைக்குட்டி சிங்கம் படம் பூர்த்தி செய்திருக்கிறது. இது முழுக்க முழுக்க குடும்ப படம். ஒரு குடும்ப கதையில் விவசாயத்தையும் நுழைத்து இருக்கிறோம். இந்த படத்துக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து இனி விவசாய மற்றும் குடும்ப படங்கள் வரும். இப்போதே டைரக்டர் பாண்டிராஜிடம் சில பெரிய ஹீரோக்கள் தங்களுக்கும் விவசாயக் கதை பண்ண சொல்லி கேட்டு இருக்கிறார்கள்.

    கேள்வி:- தமிழ்நாட்டில் விவசாயிகள் விவசாயத்தை விட்டே வெளியேறும் சூழல் உருவாகி உள்ளதே?

    பதில்:- விவசாயிகளின் குரல் இப்போது மீடியாக்களில் அதிகம் ஒலிக்கிறது. ஆரோக்கியமான, நல்ல லாபம் தரக்கூடிய விவசாயம் செய்யும் இடங்கள் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கின்றன. நாங்களே படத்தில் விவசாயம் பற்றி பாசிட்டிவான வி‌ஷயங்கள் தான் கூறி இருக்கிறோம். இப்போது நிறைய ஐடி இளைஞர்கள் விவசாயம் பார்க்க வருகிறார்கள்.



    தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலை உருவாகி வருகிறது. இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. என் பள்ளிப்பருவத்தில் நான் பார்த்தவை எல்லாம் கல்லூரிக் காலத்தில் பார்க்க முடியவில்லை. இப்போது அப்படி இல்லை. மாற்றம் உருவாகி வருகிறது.

    கேள்வி:- விவசாயிகளின் தற்போதைய தேவையாக என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- அவர்களது விளை பொருட்களை விற்க சரியான சந்தையை சொல்வேன். விளைந்த பொருளை விற்பதுதான் அவர்களுக்கு இருக்கும் பெரிய சவால். சில கல்லூரி மாணவர்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி ஆன் லைன் மூலம் விற்பனை செய்து தருகிறார்கள்.

    எனவே விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இடைத்தரகர்கள் இல்லை. இது எல்லாம் பெரிய அளவில் செயல்படுத்தப் படவேண்டும். இதற்கு அரசு மனது வைத்தால் போதும். இளைஞர்களும் இந்த வி‌ஷயத்தை கையில் எடுத்து அந்தந்த ஊர்களில் சந்தைகளை உருவாக்க வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் விவசாயம் மீண்டும் தழைக்கும். இங்கே தேவை இருக்கிறது. ஆர்கானிக் என்று சொன்னால் விலையை பற்றி கவலைப்படாமல் வாங்கும் மக்கள் இருக்கிறார்கள்.

    கேள்வி:- குடும்ப படங்கள் வருவது குறைந்து விட்டதே?

    பதில்:- வன்முறை, ஆபாசம் இல்லாமல் குழந்தைகளுடன் பார்க்க கூடிய படங்கள் நிறைய வரவேண்டும். சில படங்களில் வன்முறை காட்சிகள் தவிர்க்க முடியாது. இங்கே பொழுதுபோக்கு தான் இலக்கு. ஆனால் அதில் சின்னதாக மெசேஜும் சொன்னால் எளிதாக எடுத்துக்கொள்வார்கள்.



    கேள்வி:- சமீபகாலமாக விவசாயிகளின் போராட்டங்கள் அதிகரித்துள்ளதே?

    பதில்:- மக்கள் கேட்டு வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று தெரிகிறது. முன்பு பல வி‌ஷயங்கள் மறைக்கப்பட்டு விடும். ஆனால் சமூகவலைதள காலத்தில் எல்லாம் உடனுக்குடன் மக்கள் கவனத்துக்கு வந்து விடுகிறது. எனவே மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்களை இப்படி கேட்டு போராடும் நிலைக்கு தள்ளக்கூடாது.

    கேள்வி:- பசுமைச்சாலை வி‌ஷயத்தில் அ.தி.மு.க. அரசை விமர்சித்தது ஏன்?

    பதில்:- நான் அரசை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை. மக்களின் நிலையை சொன்னேன். பசுமைச் சாலையை எடுத்துக் கொண்டால் அதற்கு அரசை மட்டும் குறை கூற முடியாது. நிறைய வி‌ஷயம் தெரிந்த அதிகாரிகள், அலுவலர்கள் இருக்கிறார்கள்.



    ஆனால் இன்னும் மக்களுக்கு சில வி‌ஷயங்கள் விளக்கப்படவில்லை. தமிழ் நாட்டில் 35 சதவீதத்துக்கு குறைவாகத் தான் பசுமை இருக்கிறது. இவ்வளவு குறைவாக இருக்கும் போது நாம் பசுமையை உருவாக்காமல், அதிகரிக்காமல், ஏன் அழிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

    இதை அழிப்பதால் என்ன நன்மை கிடைக்க இருக்கிறது என்பதை மக்களிடம் புரிய வைக்க வேண்டும். ஒரு வி‌ஷயத்தை இழந்து இன்னொரு வி‌ஷயம் கிடைக்கும்போது அது ஏன் என்பதை விளக்க வேண்டும். அதை செய்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் ஏன் அதற்குள் இத்தனை குழப்பம் என்று தெரியவில்லை.

    விவசாயம் செய்யப்படாத நிலங்களில் சாலை போடலாம். விவசாயத்தை அழிக்கும் எதுவும் செய்யக்கூடாது.

    கேள்வி:- நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா?

    பதில்:- நிச்சயம் போட்டியிடுவோம். கையில் எடுத்த பணிகள் மீதம் இருக்கிறது. பொதுக்குழு வரவிருக்கிறது. அதில் பேசி முடிவு எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KadaikuttySingam #Karthi

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #KKS #KadaiKuttySingam #Karthi
    விவசாயத்தின் முக்கியத்துவம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம், சொந்த பந்தங்களின் பிணைப்பை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது. 

    சத்யராஜுக்கும், விஜி சந்திரசேகருக்கும் தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறக்கின்றன. ஒருகட்டத்தில் விஜியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிடுவதால், தனக்கு பிறகு குடும்பத்தை காக்க ஒரு ஆண் சிங்கம் வேண்டும் என்று இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் சத்யராஜ். சத்யராஜின் மனைவி விஜி, தனது தங்கை பானுப்பிரியாவையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளச் சொல்ல, சத்யராஜும் பானுப்பிரியாவை திருமணம் செய்கிறார். அவர்களுக்கும் ஒரு  பெண் குழந்தை பிறக்கிறது. 



    இதற்கிடையே இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லப்பட்ட சத்யராஜின் முதல் மனைவி விஜி, கார்த்தியை பெற்றெடுக்கிறார். அதேநேரத்தில் சத்யராஜ் - விஜியின் மகள் வயிற்றுப் பிள்ளையாக சூரி பிறக்கிறார். இருவரும் மாமன், மச்சானாக வளர்கின்றனர். 

    10-வது படிப்பை முடித்த கார்த்தி விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு விவசாயியாக வலம் வருகிறார். விவசாயத்தில் நல்ல வருமானம் ஈட்டும் கார்த்தி, தனது 5 அக்காள்கள் மீதும் அதீத பாசம் கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்து வருகிறார். இதற்கிடையே பொன்வண்ணனின் மகளான நாயகி சாயிஷா மீது காதல் கொள்கிறார். 



    ஆனால் கார்த்தியை திருமணம் செய்து கொள்ள கார்த்தியின் அக்கா மகள்களான பிரியா பவானி சங்கரும், அர்த்தனாவும் போட்டி போடுகின்றனர். அவர்கள் இருவரையும் விட்டு, சாயிஷாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் கார்த்தி. 

    வீட்டில் இரு பெண்கள் இருக்க, கார்த்தி வேறு ஒரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என்ற பிரச்சனையில் பங்காளிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு குடும்பம் இரண்டாக உடைகிறது. இதேநேரத்தில் சாயிஷாவின் முறைமாமனும் கார்த்தியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.



    இவ்வாறாக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, காதல் இதையெல்லாம் கார்த்தி எப்படி சமாளித்தார்? கார்த்தி - சாயிஷா இணைந்தார்களா? பிரிந்த அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    கார்த்தி ஒரு சிறப்பான விவசாயியாக, நல்ல தம்பியாக, குடும்ப பொறுப்புள்ள பிள்ளையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், தான் ஒரு விவசாயி என்று மாறுதட்டி சொல்லும் இடங்களிலும் உணர்ச்சிவசப்படுத்துகிறார். சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.



    இதுவரை மாடர்ன் பெண்ணாகவே நடித்து வந்த சாயிஷா, இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார். கார்த்தி - சாயிஷா இடையேயான காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பிரியா பவானி சங்கர், அர்த்தனா இருவரும் போட்டி போடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குடும்பத் தலைவனாக சத்யராஜ், வயதான தோற்றத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் விஜி, பானுப்பிரியாவும் ரசிக்க வைத்துள்ளனர். சூரி காமெடியில் திருப்திபடுத்தியிருக்கிறார். 

    இதுதவிர சரவணன், இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி, சவுந்தரராஜன் என ஒவ்வொருவரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்து தங்கள் பங்கினை சரியாக செய்துள்ளனர். 



    அழிந்து வரும் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயியின் அருமை, கூட்டுக்குடும்பம், குடும்பத்தின் பலம் என்னவென்பதை பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். கல்வி தான் முக்கியம் என்று அனைவரும் வழக்காடும் இந்த சமயத்தில், நான் விவசாயி, என் பெயருக்கு பக்கத்தில் விவசாயி என்று போடுவது தான் பெருமை, அதுவே தனது விருப்பமும் என்று சொல்லும் கார்த்தியின் கதாபாத்திரத்தின் மூலம் விவசாயியை முன்னிலைப்படுத்தி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். முதல் பாதி விறுவிறுப்பாக செல்ல, இரண்டாது பாதி பிரச்சனையுடன் சற்றே விறுவிறுப்பு குறைந்து திரைக்கதை நகர்கிறது.

    டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. பின்னணி இசையில் கிராமத்து சாயலுக்கு ஏற்றபடி கிராமத்து கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் இயற்கை நிலங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

    மொத்தத்தில் `கடைக்குட்டி சிங்கம்' எல்லோருக்கும் துணை. #KadaiKuttySingam #KKS #Karthi #Sayyeshaa

    மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் தான் திருட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன், ஊரை கூட்டி சந்தோ‌ஷமாக செய்துகொள்வேன் என்று கூறினார். #PriyaBhavaniShankar
    பிரியா பவானி சங்கர், செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாகி சினிமாவில் கதாநாயகியாக வளர்ந்து இருக்கிறார். மேயாத மான் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் அக்கா மகளாக நடிக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...

    நான் பார்த்த எல்லா வேலைகளுமே எனக்கு திருப்தி தந்தவை தான். என்னை பொறுத்தவரை எல்லாமே ஒன்று தான். இது பெரியது, இது சிறியது என்று பார்ப்பதில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் ரசிகர்கள் தான். சீரியலில் நடிக்க தொடங்கியபோதே என்னை ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு நன்றி.

    மேயாத மான் படத்துக்கு கிடைத்த வரவேற்பை எதிர்பார்த்தீர்களா?

    எதிர்பார்த்ததால் தான் நடித்தேன். அதனால் தான் அந்த படத்தில் நடிக்கவே சம்மதித்தேன். அதற்கு முன்பு நிறைய வாய்ப்புகள் வந்தன. அந்த படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கதை கேட்கும்போதே தெரிந்தது.



    விஜய்யிடம் இருந்து வாழ்த்து வந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

    ஆமாம். என்னாலேயே அதை நம்ப முடியவில்லை. படம் வெளியாகி 8 மாதங்கள் ஆகிறது. அதனால் எஸ்.எம்.எஸ் வந்தபோது அவரிடம் இருந்து வந்ததா என்று சந்தேகம் இருந்தது. பின்னர் எல்லோரும் பகிர்ந்த பிறகே உண்மை தெரிந்தது. திடீர் என்று கிடைத்த இன்ப அதிர்ச்சி அது.

    மிகப்பெரிய குழுவில் பணிபுரிந்தேன். படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கும்.

    எல்லாமே வதந்தி தான். நான் திருட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன். திருமணம் செய்வதாக இருந்தால் ஊரை கூட்டி சந்தோ‌ஷமாக செய்துகொள்வேன். சீரியலில் நடிப்பதை நிறுத்தியபோது நான் திருமணத்துக்காக தான் நிறுத்தியதாக நினைத்துக் கொண்டார்கள் போல. நான் இதற்கு எல்லாம் விளக்கம் தருவதில்லை. எனவே செய்தி பரவி விட்டது.

    எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படம் முடிந்துவிட்டது. இன்னும் சில படங்களின் அறிவிப்பு வரும்.

    படங்களின் எண்ணிக்கை முக்கியம் இல்லை. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து படத்தை பார்க்கும் போதும் சலிப்பு வரக்கூடாது. அதே நேரத்தில் என் பெற்றோருடன் அமர்ந்து பார்க்கும் படியான படங்களில் தான் நடிப்பேன். #PriyaBhavaniShankar

    கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தனது சமூக வலைத்தளத்தில் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். #Karthi
    கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.  சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இதில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் இந்த வாரம் ஜூலை 13ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தனது பேஸ்புக் மூலம் ரசிகர்களுடன் பேசினார்.

    அதில், ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்களுக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும்’ என்றார். மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். 

    நேரடி தெலுங்கு படம் எப்போது?
    கதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் நடிப்பேன்.

    மீண்டும் போலீஸ் படத்தில் நடிப்பீர்களா?
    நல்ல கதை அமைந்தால் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பேன்.

    சூர்யாவுடன் எப்போது நடிப்பீர்கள்?
    நானும் அண்ணாவும் சேர்ந்து நடித்தால் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள். அந்த அளவிற்கு நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்போம். பாண்டிராஜ் கூட கதை உருவாக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

    இமான் இசை பற்றி?
    இமானுடன் முதல் முறையாக இணைந்திருக்கிறேன். சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார்.

    விஜய் பற்றி?
    நான் நடித்த பருத்தி வீரன் படத்தை பார்த்து விஜய் என்னை பாராட்டியது மறக்க முடியாது. தலைக்கனம் இல்லாத மனிதர்.

    பிடித்த நடிகர்?
    நிறைய பேர் இருக்கிறார்கள். ரஜினி, கமல் சாரை பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம். அவர்களை எனக்கு பிடிக்கும்.



    சிறந்த நடிகர்?
    அண்ணா சூர்யாவும், அண்ணி ஜோதிகாவும் தான் சிறந்த நடிகர்கள்.

    விவசாயம் பிடிக்குமா?
    நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்தான். எனக்கு விவசாயம் பிடிக்கும்.

    மேலும் பல கேள்விகளுக்கு கார்த்தி சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
    கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூர்யா நடித்திருப்பதாக நேற்று நடைபெற்ற விழாவில் தகவல் வெளியாகியுள்ளது. #KadaikuttySingam #Suriya #Karthi
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா, பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    இந்நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டது. அப்போது கார்த்தி பேசும்போது, இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சூசகமாக கூறியுள்ளார். #KadaikuttySingam #Karthi #Suriya
    ×