என் மலர்

  சினிமா

  ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் கார்த்தி
  X

  ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் கார்த்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். #Karthi #SriReddy
  பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். சொந்த பந்தங்களின் ஒற்றுமை, விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருவாக கொண்டு படம் உருவாகி இருக்கிறது.

  படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் ஒவ்வொரு ஊராக திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

  நேற்று கார்த்தி, பாண்டிராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் புதுக்கோட்டை சென்றனர். அங்குள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த ரசிகர்களை சந்தித்தனர்.    இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் கார்த்தி கூறியதாவது:-

  துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது பெருமைக்குரியது. அதேபோல் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று கவனம் செலுத்தி திட்டத்தை வகுக்க வேண்டும் என்று துணைக் குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.

  ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். #KadaikuttySingam #Karthi #SriReddy

  Next Story
  ×