என் மலர்

  சினிமா

  கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவுக்கு ஆட்டோவில் வந்த கார்த்தி
  X

  கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவுக்கு ஆட்டோவில் வந்த கார்த்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் சின்னபாபு படத்தின் வெற்றி விழாவுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி ரசிகர்களை வியக்க வைத்தார். #Karthi #KadaikuttySingam
  பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். சத்யராஜ், பிரியா பவானிசங்கர், அர்த்தனா, சூரி, விஜி சந்திரசேகர், இளவரசு, மாரிமுத்து, சரவணன், ஸ்ரீமன், பானுப்ரியா, மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என நட்சத்திரப் பட்டாளங்களே நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக மக்கள் குடும்பத்துடன் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்கின்றனர். 

  இந்த படம் தெலுங்கில் சின்னபாபு என்ற பெயரில் வெளியாகியது. தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் கார்த்தி ஐதராபாத் சென்றார். அப்போது மழையின் காரணமாக அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், சரியான நேரத்திற்கு விழாவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.   இதையடுத்து நடிகர் கார்த்தி மற்றும் படத்தின் தெலுங்கு வெளியீட்டாளர் உள்ளிட்ட பலரும் ஆட்டோ பிடித்து விழா நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். கார்த்தி ஆட்டோவில் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை கார்த்தி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karthi #KadaikuttySingam

  Next Story
  ×