என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி"

    • தனது வீடு வரும்போது, மனைவிக்கு ஹார்ன் அடித்து சிக்னல் தருகிறார்.
    • கணவரின் சிக்னல் கிடைத்ததும் ஜன்னல் வழியே கையசைத்து தனது அன்பை பரிமாறிக்கொள்கிறார்.

    கணவன் வேலைக்கு சென்றால் எப்போது வீடு திரும்புவார் என்று மனைவிமார்கள் வழிமேல் விழிவைத்து காத்திருப்பார்கள். ஆனால் பணிக்கு இடையிலும் கணவனை காணும் வாய்ப்பு மனைவிக்கு கிடைத்தால் எப்படியிருக்கும். அவர்கள் எப்படி அன்பை பரிமாறிக்கொள்வார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    ரெயில் என்ஜின் டிரைவராக பணிபுரியும் ஒருவர், அந்த வழித்தடத்தில் தனது வீடு வரும்போது, மனைவிக்கு ஹார்ன் அடித்து சிக்னல் தருகிறார். இதை எதிர்பார்த்து அவரது மனைவியும் காத்திருக்கிறார்.

    கணவரின் சிக்னல் கிடைத்ததும் ஜன்னல் வழியே கையசைத்து தனது அன்பை பரிமாறிக்கொள்கிறார். அவர்களின் இந்த அன்புப் பரிமாற்றம் அடிக்கடி நடைபெறுகிறது. இதை அந்த பெண்மணி வீடியோவாகவும் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார்.

    கணவன்-மனைவி இடையே உள்ள அன்பை பார்த்து பயணிகளும், வலைத்தளவாசிகளும் வியப்படைகின்றனர். அந்த வீடியோ 12 லட்சம் பேரின் பார்வையாளர்களை பெற்று வைரலானது. ''உங்களின் இந்த அன்பு வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்'' என்று பலரும் வாழ்த்தி இருந்தனர்.

    • விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
    • இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன

    பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் வசிக்கும் விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்த பின்பு தான் விகாஸ் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இருப்பதும் அப்பெண்ணை விவாகரத்து செய்யமல் 2 ஆவது திருமணம் செய்ததும் சுனிதாவுக்கு தெரியவந்தது. ஆனால் சுனிதா குடும்பத்தினர் அவரை சம்மதிக்கவைத்து விகாஸ் குமாருடன் ஒன்றாக வாழவைத்தனர்.

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன. இதையடுத்து விகாஸ் குமார் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாகவும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சுனிதாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில் சுனிதா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    துர்கா பூஜையின் போது சுனிதா வீட்டுக்கு சென்று அவரை மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விகாஸ் வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சுனிதா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற கொண்டுருள்ளார்.

    தீயில் கருகிய உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரேகா (32) என்ற பெண் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
    • அவரது கணவரும் அதே கால் சென்டரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    கர்நாடகாவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரேகா (32) என்ற பெண் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். ரேகாவின் பரிந்துரையால் அவரது கணவர் லோஹிதாஷ்வாவும் அதே கால் சென்டரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    ரேகா மற்றும் அவரது கணவருக்கும் இது 2 அவனது திருமணமாகும். ரேகாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சுங்கடகட்டே பேருந்து நிலையம் அருகே ரேகாவும் அவரது மூத்த மகளும் சாலையை கடப்பதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த லோஹிதாஷ்வாவுக்கும் ரேகாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த லோஹிதாஷ்வா தான் மறைந்திருந்த கத்தியை எடுத்து ரேகாவை 11 முறை கொடூரமாக குத்தி கொன்றார். இதனை நேரில் பார்த்த மூத்த மகள் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் லோஹிதாஷ்வா அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது.
    • பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

    இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதையடுத்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

    பிரதமர் சர்மா ஒலியை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் நேபாள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேபாள முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் மனைவி போராட்டக்காரர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனல் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவரது மனைவி உயிரிழந்தார்.

    • நுரையீரல் பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் ரேணுகாதேவி சிகிச்சை பெற்று வந்தார்.
    • கடந்த ஒரு மாதமாக ரேணுகாதேவி தொடர் சிகிச்சையில் இருந்தார்.

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

    நுரையீரல் பாதிப்புக்காக கடந்த சில மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ரேணுகாதேவி காலமானார்.

    • இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய கல்வித்துறை அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    தேவி பிரசாத் என்ற கல்வித்துறை அதிகாரி தனது மனைவியுடன் அலுவலகத்தில் ஜாலியாக நடனம் ஆடி அதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார். இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து கல்வித்துறை அதிகாரி தேவி பிரசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய தேவி பிரசாத், "வீடியோ எடுக்கப்பட்ட நாளில் தனது அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள் என்பதால் என் மனைவி என்னுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்த வீடியோ வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார். 

    • 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார்
    • முதலில் என் அமணிவியிடம் வேலையை விடுமாறு கூறினேன்.

    கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ரூ.1.2 கோடி (வருடத்திற்கு) ஊதிய வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    இளைஞர் ஒருவர் Reddit இல் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "நான் WHF (WORK FROM HOME) முறையில் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி ஊதியம் பெற்று வருகிறேன். 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து முதலில் அவளை வேலையை விட சொன்னேன். ஆனால் மனைவி தொடர்ந்து வேலை செய்ய விரும்பியதால் மனைவியை கவனித்துக்கொள்ள நான் வேலையை விட்டுவிட்டேன். வீட்டிலிருந்து மனைவியை கவனித்துக்கொள்ள போகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கு தேவைப்படும் போது நீங்கள் அவர்களுடன் இருப்பதை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவு இணையத்தில் வைரலாக அந்த இளைஞரை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
    • வரதட்சணையாக வழங்கப்பட்ட பணம், நகையை கொடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம்

    தெலங்கானா மாநிலத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பணம், 35 சவரன் தங்க நகையை திருப்பிக் கொடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், லாவண்யா தனது தந்தையுடன் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதனால் கோபமடைந்த லாவண்யா உறவினர்கள் சுரேஷ் வீட்டின் முன்பு இருவரது உடல்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு இருதரப்பினருக்கும் இடையே

    பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு கணவரது குடும்பம் ரூ.20 லட்சம் கொடுக்க முன்வந்ததை அடுத்து பெண்ணுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.

    • அமெரிக்காவைச் சேர்ந்த செலாப் - ஜஸ்டின் ரூஸ்லர் இணை முதல் பரிசை வென்றுள்ளனர்.
    • வெற்றி பெறுபவருக்கு அவரின் மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசாக அளிக்கப்படும்.

    மனைவிகளை கணவர்கள் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி பின்லாந்தில் நடைபெற்றுள்ளது.

    இப்போட்டியில் மனைவியை சுமந்தபடி மணல் மற்றும் நீரால் அமைக்கப்பட்ட தடைகளை தாண்டி கணவர் முன்னேறி சென்று வெற்றி பெறவேண்டும். வெற்றி பெறுபவருக்கு அவரின் மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசாக அளிக்கப்படும்.

    200 பேர் கலந்து கொண்ட இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த செலாப் - ஜஸ்டின் ரூஸ்லர் இணை முதல் பரிசை வென்றுள்ளனர். 

    • தன் வீட்டிற்கு வந்து வாழுமாறு பூனம் தேவியிடம் கணவர் ஜக்தீப் சிங் வற்புறுத்தியுள்ளார்.
    • அக்கம்பக்கத்தினர் ஜக்தீப் சிங்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    தனது மனைவி தனது வீட்டிற்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜக்தீப் சிங் (42) மற்றும் அவரது மனைவி பூனம் தேவி ஆகியோர் 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பூனம் தேவி அவரது தாய், தனத்தையுடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், மீண்டும் தன் வீட்டிற்கு வந்து வாழுமாறு பூனம் தேவியிடம் கணவர் ஜக்தீப் சிங் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பூனம் தேவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜக்தீப் சிங் தனது மாமனார் அனந்த்ராம் (80) மற்றும் மாமியார் ஆஷா தேவி (75) ஆகியோரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது தனது கணவரை தடுக்க பூனம் தேவி முயன்றுள்ளார். கோவத்தில் இருந்து ஜக்தீப் சிங் மனைவியையும் தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    பூனம் தேவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஜக்தீப் சிங்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    • கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
    • கொளஞ்சியப்பனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சி பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு 5-வது தெருவில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன்( 63). ஓய்வு பெற்ற என்.எல்.சி.ஊழியர். தற்போது நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பத்மாவதி (55 ).இருவரும் வேறொருவருடன் திருமணம் ஆகி பிரிந்தவர்கள்.

    கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஓரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. குறிப்பாக பத்மாவதிக்கு கொளஞ்சியப்பன் மீது சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட கொளஞ்சியப்பனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறி நெய்வேலி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனை தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொளஞ்சியப்பன் நள்ளிரவில் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது பத்மாவதி தனது கணவனை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் கொளஞ்சியப்பன் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.

    மேலும் கணவர் உடலுடன் விடியற்காலை வரை பத்மாவதி வீட்டிலே இருந்துள்ளார். பின்னர் காலையில் தனது உறவினருக்கு போன் செய்து தனது கணவனை கொன்று விட்டதாக கூறியதையடுத்து உறவினர் அங்கு வந்து பார்த்தபோது கொளஞ்சியப்பன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது . இது குறித்து நெய்வேலி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்து நெய்வேலி டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கணவரை கொலை செய்த பத்மாவதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்தனர். கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசிடம் அளித்த புகாரில் தனது கணவர் ஒரு சூதாட்டக்காரர் என்றார்.
    • சூதாட்டப் பழக்கத்தால் அவரது கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    போபால்:

    மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள கன்வான் காவல்நிலையப் பகுதியில் வசித்து வருபவரின் மனைவி இந்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இந்தூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு போலீசார் அதை 'பூஜ்ய' எப்.ஐ.ஆர் ஆக பதிவுசெய்து தார் காவல்துறைக்கு அனுப்பினர்.

    அந்தப் புகாரில், தனது கணவர் ஒரு சூதாட்டக்காரர். சூதாட்டப் பழக்கத்தால் அவரது கடன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடனில் மூழ்கிய கணவர் தனக்கு பணம் கொடுத்த தனது நண்பர்களில் ஒருவருடன் உடல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கணவர் ஒருவர் தனது மனைவியை ரூ.50,000 கடனை அடைக்க தனது நண்பருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. அதன்பின், அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

    ×