search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finland"

    • உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ உள்ளது.
    • இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

    பிரெசெல்ஸ்:

    உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உள்பட 30 நாட்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இன்று இணைந்துள்ளது. நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்துள்ளது.

    நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்துள்ளதால் அந்நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஷியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும்.

    உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு மத்தியில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது.
    • நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக ஃபின்லாந்து தேசிய கொடி ஏற்றப்பட இருக்கிறது.

    நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக ஃபின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார். உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது. வரும் மாதங்களில் ஃபின்லாந்தை தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய இருக்கிறது.

    "இது ஒரு வரலாற்றுப்பூர்வமான வாரம். நாளை முதல், ஃபின்லாந்து கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினர் ஆகிறது. நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக நாளை நாங்கள் ஃபின்லாந்து கொடியை ஏற்ற இருக்கிறோம். ஃபின்லாந்து பாதுகாப்பு, நார்டிக் பாதுகாப்பு மற்றும் நேட்டோ அமைப்பு முழுவதிற்கும் நல்ல நாளாக இருக்கும்," என்று ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.

     

    ஃபின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய ஆட்சேபனை இல்லை என கடைசி நாடாக துருக்கி நாளை கையெழுத்திட இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோனி ப்ளிங்கனிடம் துருக்கி ஒப்படைக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி அண்டி கைகொனென் மற்றும் வெளியுறவு துறை மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    "இது எங்களுக்கு பெருமை மிக்க தருணம் ஆகும். சந்திப்பின் போது, ரஷ்யாவின் தொடர் சட்டவிரோத நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு அதிக ஆதரவு அளிக்க நேட்டோவை வலியுறுத்துவதே ஃபின்லாந்துக்கு மிக முக்கிய குறிக்கோள் ஆக இருக்கும். ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பகுதி முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தவே நாங்கள் நினைக்கிறோம்," என்று ஹாவிஸ்டோ தெரிவித்துள்ளார்.

    • இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    • அமெரிக்க செனட் சபை தனது ஒப்புதலை இன்று அளித்துள்ளது.

    வாஷிங்டன்:

    நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 150 நாட்களாக போர் செய்து வருகிறது.

    இதற்கிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தங்கம் வென்று அசத்தினார். #HimaDas #Gold #Athletics
    தாம்ப்ரே:

    பின்லாந்தின் தாம்ப்ரேவில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமா தாஸ் பங்கேற்றார். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 

    இந்நிலையில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தங்கம் வென்று அசத்தினார். 

    நேற்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்துக்கான இறுதிப் போட்டியில் ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

    இதுகுறித்து ஹிமா தாஸ் கூறுகையில். உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில  ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஊக்கம் அளித்த அனைத்து இந்தியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  #HimaDas #Gold #Athletics
    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் அடுத்த மாதம் ஜூலை 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். #TrumpPutinSubmmit #HelsinkiSummit
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது முதலே ரஷியாவும் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷிய உளவுத்துறை வேலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரித்து வருகிறது.

    எனினும், இந்த குற்றச்சாட்டுகளை இரு நாடுகளும் மறுத்து வருகின்றன. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், மூன்றாம் நாட்டில் சந்திப்பு நடத்த இரு தலைவர்களும் தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் - புதின் சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளது.

    இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ள இரு தலைவர்களும், கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த ஜி-5 உச்சி மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். ஆனால், பின்லாந்தில் நடக்க இருக்கும் இந்த சந்திப்பு விரிவானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 12-ம் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் சந்தித்து பேசிய டிரம்ப், வரலாற்றில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான பாராளுமன்ற எம்.பி.க்கள் குழு பெலாரஸ், லத்வியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஒருவார பயணமாக வரும் பத்தாம் தேதி புறப்பட்டு செல்கிறது. #LSSpeaker #parliament
    புதுடெல்லி:

    உலக நாடுகளில் உள்ள பாராளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காகவும், உறவுகளை பலப்படுத்தும் விதமாகவும் நமது நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்லெண்ண பயணமாக சில நாடுகளுக்குச் சென்று வருவது வழக்கம்.

    அவ்வகையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான பாராளுமன்ற எம்.பி.க்கள் குழு பெலாரஸ், லத்வியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஒருவார பயணமாக வரும் பத்தாம் தேதி புறப்பட்டு செல்கிறது.

    இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜிவ் பிரதாப் ருடி, சுதிப் பந்த்யோபாத்யாய், ஜெய்ஸ்ரீபென் பட்டேல், டாக்டர் கே,கேசவ் ராவ், அரவிந்த் சாவந்த், ஜி.வி.எல். நரசிம்ம ராவ் மற்றும் மக்களவை செயலாளர் ஸ்னேகலதா ஸ்ரீவத்சவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த ஒருவாரகால பயணத்தின்போது பெலாரஸ் குடியரசின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுக்காஷென்க்கோ மற்றும் பெலாரஸ் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை சபாநாயகர்களை இந்த குழுவினர் சந்திக்கின்றனர். இதேபோல், லத்வியா மற்றும் பின்லாந்து நாட்டு பாராளுமன்ற சபாநாயகர்களை சந்தித்துப் பேசும் இவர்கள் வரும் 18-ம் தேதி டெல்லி திரும்புகின்றனர். #LSSpeaker #parliament
    ×