search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Helsinki"

    அமெரிக்கா - ரஷியா இடையே இன்று நடந்த உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும், பயனுள்ள வகையில் இருந்ததாகவும் டிரம்ப் மற்றும் புதின் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். #TrumpPutinSummit #Helsinki2018
    ஹெல்சின்கி:

    அமெரிக்கா - ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் நேரடியாக இதுவரை மோதிக்கொள்ளவில்லை என்றாலும் பல்வேறு விவகாரங்களில் இரண்டு நாடுகளும் மறைமுக யுத்தம் நடத்தி வருகின்றன. சிரியா, உக்ரைன் விவகாரங்கள் அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

    இந்நிலையில், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். விரிவாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. 
    அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு, சிரியா உள்ளிட்ட விவகாரங்களும் இடம் பிடித்தன.

    இரு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் டிரம்ப் - புதின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புதின் பேசுகையில், “பனிப்போர் நிலவிய காலத்துக்கு பின் நடந்துள்ள இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதாக இருவரும் கருதுகிறோம். இரண்டு மிகப்பெரிய அணு ஆயுத நாடுகளான அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் சர்வதேச பாதுகாப்பை கவனிப்பது பொறுப்பாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு எந்த விதத்திலும் இல்லை” என புதின் கூறினார்.

    டிரம்ப் பேசுகையில், “நடந்து முடிந்துள்ள இந்த சந்திப்பு வெளிப்படையாகவும், ஆழமானதாகவும், நேரடியானதாகவும் இருந்தது. இந்த நான்குமணி நேர சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் என முழுமையாக நம்புகிறேன்” என கூறினார். 
    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். #TrumpPutinmeeting #Helsinkimeeting
    அஸ்டோரியா:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

    இதற்கிடையே, இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஜூலை 16-ம் தேதி இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்து தலைநகரான ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
    உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், உலக கோப்பை கால்பந்து தொடரை சிறப்பாக நடத்திய ரஷியாவுக்கும், அதிபர் புதினுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinmeeting #Helsinkimeeting 
    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் அடுத்த மாதம் ஜூலை 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். #TrumpPutinSubmmit #HelsinkiSummit
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது முதலே ரஷியாவும் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷிய உளவுத்துறை வேலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரித்து வருகிறது.

    எனினும், இந்த குற்றச்சாட்டுகளை இரு நாடுகளும் மறுத்து வருகின்றன. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், மூன்றாம் நாட்டில் சந்திப்பு நடத்த இரு தலைவர்களும் தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் - புதின் சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளது.

    இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ள இரு தலைவர்களும், கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த ஜி-5 உச்சி மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். ஆனால், பின்லாந்தில் நடக்க இருக்கும் இந்த சந்திப்பு விரிவானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 12-ம் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் சந்தித்து பேசிய டிரம்ப், வரலாற்றில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×