என் மலர்
நீங்கள் தேடியது "protesters clash"
- இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது.
- பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
காத்மண்டு:
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதையடுத்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
பிரதமர் சர்மா ஒலியை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் நேபாள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாள முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் மனைவி போராட்டக்காரர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனல் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவரது மனைவி உயிரிழந்தார்.
பஞ்சாபில் ரெயில்கள் மோதி 61 பேர் இறந்ததன் எதிரொலியாக தண்டவாளத்தில் அமர்ந்து 2-வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசார் மீது கற்களை வீசி பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்னும் இடத்தில் 19-ந் தேதி இரவு ரெயில் தண்டவாள பகுதியை ஒட்டிய மைதானத்தில் தசரா விழா கொண்டாட்டத்தின் போது ஏராளமானோர் ரெயில் தண்டவாளத்தின் மீது ஏறி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஜலந்தர் எக்ஸ்பிரஸ், தண்டவாளத்தின் மீது நின்றிருந்தவர்கள் மீது மோதியது. மற்றொரு தண்டவாளத்தில் வந்த இன்னொரு ரெயிலும் பலர் மீது மோதியது. இந்த விபத்தில் இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 40 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இந்த விபத்தை கண்டித்து ஜோதா பதக் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நேற்று முன்தினம் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய ரெயில் டிரைவர்களை கைது செய்யவேண்டும், இதற்கு பொறுப்பு ஏற்று மந்திரி நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்-மந்திரி அமரீந்தர் சிங், இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
எனினும் நேற்றும் அப்பகுதி மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை அகற்ற போலீசார் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் போலீசார் மீது கற்களை வீசி பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் சில போலீசார் காயம் அடைந்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ரெயில்கள் மோதல் சம்பவத்துக்கு பிறகு எங்கள் பகுதி மக்களில் பலரை காணவில்லை. உடனடியாக அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும். அரசு அறிவித்துள்ள நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினர். அதுவரை நாங்கள் தண்டவாளத்தை விட்டு நகர மாட்டோம் என கூறினர்.
இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் கமாண்டோ படையினர், அதிரடி படையினர் உள்ளிட்டோரும் அங்கு குவிக்கப்பட்டனர். தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். நேற்று மாலை அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது. அதன் பிறகு ரெயில் போக்குவரத்து சீரடைய தொடங்கியது. #AmritsarTrainAccident #Dussehra #ProtesterClash
ஸ்பெயின் நாட்டில் கேட்டலோனியா பகுதியில் அந்த நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் வசிக்கின்றனர். அந்த நாட்டின் மொத்த ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கு ஏற்றுமதியை கேட்டலோனியா பகுதி செய்கிறது. அப்படிப்பட்ட கேட்டலோனியாவை தனி நாடாக பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்து வருகிறது. இந்த கோரிக்கையை முன்வைத்து போராடுகிறவர்கள், பிரிவினையாளர்களாக கருதப்படுகின்றனர்.

தனிநாடு கோரிக்கை தொடர்பாக அங்கு கடந்த ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் மக்கள் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தும், அது செல்லாது என அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அந்த பொதுவாக்கெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பார்சிலோனா உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் பெருவாரியாக திரண்டு நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
பார்சிலோனா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கேட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகள், நெடுஞ்சாலைகள், ரெயில் பாதைகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்ததால், போக்குவரத்தும் பாதித்தது. #Spain #Barcelona






