search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "truck"

    • பவானி அருகிலுள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் கார் அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சித்தோடு:

    சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளாராக இருப்பவர் சுரேஷ் (50) . இவர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காரில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்றார். காரை டிரைவர் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கன்னிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (46) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    கார் பவானி அருகிலுள்ள சித்தோடு, நசியனூர் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை கார் டிரைவர் பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.‌ காரில் பயணம் செய்த சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சுரேஷ் (50) காயத்துடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று இறந்த பச்சியப்பன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வெள்ளைக்கால்பட்டி கிராமத்தில் குப்பை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளைக்கல்பட்டி கிராமம் சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது.

    இந்த கிராமத்தின் எல்லையில் அரபி கல்லூரி, தனியார் பள்ளி கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, துணை மின் நிலையம் ஆகியவை உள்ளது.

    மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.இந்த நிலையில், பள்ளி, கல்லூரி, தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிவற்றிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் துர்நாற்றம் வீசும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளைக்கல்பட்டி ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தனர். குப்பைகளை இங்கே கொட்டக்கூடாது,

    குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கிராம ஊராட்சி சார்பாக குப்பை கொட்டாத நிலையில், வேறு யார் குப்பை கொட்டுகிறார்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பை–களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரி குப்பையை பள்ளியின் முன்பாக உள்ள ஒரு மறைவிடத்தில் கொட்டிவிட்டு சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை உடனடியாக சிறை பிடித்தனர். குப்பை கொட்டிய இடத்தில் சென்று பார்க்கும்போது, உணவு விடுதி கழிவுகள், கண்ணாடி கழிவுகள், மருத்துவ கழிவுகள், என அனைத்து வகை கழிவுகளும் கொட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கருப்பூர் போலீசாருக்கும் சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்–பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.

    ஒப்பந்த வாகனங்களில் கொண்டு வந்து குப்பை கொட்டுவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், மாநகராட்சி அதிகாரிகள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • சரக்கு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பர்மர் மீது மோதியது.
    • சிறு காயத்துடன் டிரைவர் மற்றும் கிளினர் உயிர்தப்பினர்.

    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம் களஞ்சேரி பகுதியில் பாபநாசம்-சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கோழி ஏற்றி சென்ற சரக்கு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பர்மர் மீது மோதியது.

    இதில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் உடனடியாக மின்தடை ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிர்ஷ்வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.சிறு காயத்துடன் டிரைவர் மற்றும் கிளினர் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் மின்வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி அருகே நேற்று இரவு ஆடுகளை ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குமரேசன்(30), அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யர்(35), கோவிந்தராஜ்(45) ஆகியோர், ஒரு லாரியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஒரப்பம் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, ஒரப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சத்யராஜ்(27), அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பழனி(37) ஆகியோர் ஒரே பைக்கில் வந்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக, ஆடுகளை ஏற்றி வந்த லாரி மீது சத்யராஜ் மற்றும் பழனி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் சத்யராஜ் மறறும் பழனி பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

    மேலும் ஆடுகளை ஏற்றி வந்த லாரியும் நிலை தடுமாறி தலைகீழாக ரோட்டில் கவிழ்ந்தது. இதில், லாரி டிரைவர் குமரேசன், கிளினர் அய்யர், லாரியில் பயணம் செய்த கோவிந்தராஜ் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். லாரியில் இருந்த ஆடுகள் ரோட்டில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சுமார 50 ஆடுகள் உயிரிழந்தன.

    இந்த விபத்துக்குறித்து தகவலறிந்து வந்த கந்திகுப்பம் போலீஸார், உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேர்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சத்யராஜ் மற்றும் பழனி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி கிளினர் அய்யர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குமரேசன் மற்றும் கோவிந்தராஜ் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில், ரோடுகளில் சிதறி கிடந்த ஆடுகளை, விபத்துக்குள்ளான லாரியுடன் பின்னால் ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரியில் வந்தவர்கள் அதில் ஏற்றி சென்றனர்.

    அம்மாபாளையத்தில் இருந்து பெருமாள் சிலை புறப்படும்போது திடீரென 15 டயர்கள் பஞ்சரானது. இதனால் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. #Vishnustatue
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் இருந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெருமாள் சிலை பெங்களூஐரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட முழுமையாக செதுக்கி முடிக்கப்பட்டதாக பிரமாண்ட பெருமாள் சிலை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.

    கொரக்கோட்டையில் இருந்து கடந்த மாதம் 7-ந்தேதி சிலையின் பயணம் தொடங்கியது. பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு திருவண்ணாமலை வந்த பெருமாள் சிலை நேற்று முன்தினம கிரிவலப் பாதையில் இருந்து திண்டிவனம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கம் நோக்கி சென்றது.

    இரவு 7 மணியளவில் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சிலை வந்தடைந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பெருமாள் சிலையை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் நேற்று அம்மாபாளையத்தில் இருந்து சிலை புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

    அப்போது லாரியில் பொருத்தப்பட்டுள்ள 240 டயர்களில் 15 டயர்கள் திடீரென பஞ்சரானது. இதற்கான மாற்று டயர்கள் அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து எடுத்துவர வேண்டி உள்ளது. எனவே இந்த டயர்கள் இன்று அம்மாபாளையம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை லாரியில் பொருத்திய பிறகுதான் மீண்டும் சிலை பயணம் தொடரும்.

    இதையடுத்து இந்த சிலை கோணான்குட்டை கேட், கரியமங்கலம், கொட்டக்குளம், மண்மலை கிராமங்கள் வழியாக செங்கம் செல்ல வேண்டி உள்ளது.

    ஏற்கனவே வந்தவாசியில் இருந்து பெருமாள் சிலையுடன் புறப்பட்ட லாரியின் டயர்கள், திருவண்ணாமலை வருவதற்குள் பல்வேறு இடங்களில் பஞ்சரானது.

    தற்போது அம்மாபாளையத்தில் இருந்து செங்கம் இடையே உள்ள 18 கி.மீட்டர் சாலையானது குண்டும், குழியுமாகவும், மண் சாலையாகவும் உள்ளது. 3 இடங்களில் வேகத்தடை உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சாலையை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆனால் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெருமாள் சிலை இந்த 18 கி.மீ தூரத்தை கடந்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையான ஆனந்தவாடி கிராமம் வரை 30 கி.மீ தூரம், சாலை சேதமடைந்துள்ள நிலையில் உள்ளது. மேலும் 3 இடங்களில் பாலம் உள்ளது.

    இதனால் பெருமாள் சிலை திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையை கடந்து செல்லவே பல நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை குறித்து சிலை கொண்டு செல்லும் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். #Vishnustatue



    கும்மிடிப்பூண்டியில் சாலை தடுப்புச்சுவரில் மோதி சமையல் கியாஸ் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து, கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
    கும்மிடிப்பூண்டி:

    எண்ணூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கி 18 டன் சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு ராட்சத டேங்கர் லாரி இன்று அதிகாலை புறப்பட்டது. லாரியை சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த அங்கமுத்து (35) ஓட்டினார்.

    அதிகாலை 3 மணியளவில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பைபாஸ் சாலையில் லாரி வந்து கொண்டு இருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அங்கமுத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    விபத்து பற்றி அறிந்ததும் கும்மிடிப்பூண்டி மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் லாரி தீப்பற்றாமல் இருக்க உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    கவிழ்ந்த லாரியை கியாஸ் நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சேதமடைந்த டேங்கரில் இருந்து சிறிய அளவில் கியாஸ் கசிவதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக திருப்பி விடப்பட்டது.

    எளிதில் தீப்பற்றும் அபாயம் இருப்பதால் லாரி கவிழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கும்மிடிப்பூண்டி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    டேங்கர் லாரியின் அருகே செல்போன் எடுத்து செல்லவும் தடை விதித்து உள்ளனர். இதனால் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    கியாஸ் டேங்கர் லாரியை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். கவிழ்ந்த லாரியில் உள்ள கியாசை வேறு லாரியில் ஏற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

    விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    பெருந்துறை அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியதில் வேலூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். #Accident
    சென்னிமலை:

    வேலூர் காட்பாடி பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கோதண்டம் (வயது 60) என்ற குருசாமி தலைமை யில் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வேனில் புறப்பட்ட னர்.

    வேனில் செந்தில்குமார் (40), பழனி (40), நாகராஜ் (45), நாராயணசாமி (29), விமல் (27), சசி (28), ஜோதி (32), ஸ்ரீமதி (3), அருண் (5), ரோஹித் (7), மோனிஷா (8) உள்பட 13 பேர் இருந்தனர்.

    வேனை வேலூரை சேர்ந்த ராஜ்கபூர் (29) என்பவர் ஓட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வேன் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    ஓலப்பாளையம் பிரிவு வந்தபோது ஆந்திர மாநிலத்திலிருந்து சிலிக்கான் லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை வேலூரை சேர்ந்த பலராமன் (53) ஓட்டிச் சென்றார்.

    அந்த லாரியை ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் டிரைவர் முந்த முயன்றார். அப்போது லாரியின் பின்புறத்தில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பழனி, நாகராஜ் ஆகிய 2 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள். குருசாமி கோதண்டத்தின் 2 கால்களும் முறிந்தன.

    வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Accident


    பொள்ளாச்சியில் நகராட்சி குப்பை லாரி ஏ பி டி சாலை பகுதியில் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அந்த வழியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி நகராட்சி யில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஒரு பகுதியில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அனைத்து பகுதிகளிலும் குழிகளை தோண்டி விட்டு சரியாக மூடாமல் செல்வதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து காயமடையும் நிலை இருந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் இரு சக்கர வாகனத்துடன் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.

    சமீபத்தில் ஒருவர் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வரும் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இருந்த போதும் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாமல் அலட்சியமாக இருந்து வந்தனர்.

    காலை நகராட்சியின் குப்பை வண்டி ஏபிடி ரோடு பகுதியில் பாதாள சாக்கடைக் காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாமல் இருந்த நிலையில் அதில் சிக்கிக் கொண்டது. ஓட்டுநர் பல முறை முயற்சித்தும் குப்பை லாரியை பள்ளத்தில் இருந்து மீட்க முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து குப்பை லாரியை மீட்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நகராட்சி குப்பை லாரி ஏ பி டி சாலை பகுதியில் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அந்த வழியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident #Maharashtra
    மும்பை:

    மகாராஷ்டிராவின் நந்துர்பார் எனும் பகுதியில் இருந்து நாஷிக் பகுதிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. மிகவும் கோரமான இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் தகர்த்து எறியப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #Accident #Maharashtra
    திருக்காட்டுப்பள்ளி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் மின்சார வயர் உரசியது. இதில் வைக்கோல் எரிந்து சேதம் அடைந்தன.
    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அலமேலுபுரம் பூண்டி பகுதியில் வயல்களில் இருந்து வைக்கோலை விலைக்கு வாங்கி திருச்சி, துறையூர் பி.மேட்டுர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (48) என்பவர் தனது லாரியில் ஏற்றி மெயின் ரோட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வயல்களில் நடுவில் சென்ற மின்சார வயரில் வைக்கோல் உரசியதில் தீப்பற்றி கொண்டது. 

    லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார் தலைமையில் வீரர்கள் அருண்கணேசன், ராஜா, பிரசாத், ராகுல், ராம்குமார், தனுஷ் ஆகியோர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். லாரியின் டயர்கள் மட்டும் தீயில் கருகின.
    நேபாள நாட்டில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal #BusAccident
    காத்மாண்டு:

    நேபாள நாட்டின் சித்வான் மாவட்டத்தில் இன்று மதியம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தனர்.

    பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்த விபத்தில் இந்தியர் உட்பட 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal #BusAccident
    ஜெயங்கொண்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தினேஷ் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தா. அப்போது அவ்வழியாக கடலூரிலிருந்து உடையார்பாளையம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி விசாரித்ததில்  அதில் அரசு அனுமதியின்றி 4 யூனிட்  கூழாங்கற்கள் ஏற்றி வந்தது  தெரியவந்தது. 

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் லாரி ஓட்டுநர் கீழகுமார மங்கலம் சுந்தர ராஜன் (35) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றார்.
    ×