search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருந்து"

    • தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரிக்கை.
    • க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்.

    சென்னையில் பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதற்காக, தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.

    இந்த செயலியில் க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். 

    • முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

    சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய BS6 ரக பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மேயர் பிரியா, துறையின் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைக்கேற்ப புதிதாக 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனக் கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் அறிவித்தேன்.

    அதன்படி, ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 BSVI பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன்.

    எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

    பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பயணிகள் வசதிக்காக திருச்சி மண்டலத்தில் 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது
    • போக்குவரத்து பணியாளர் விடுமுறை இன்றி பணியாற்றி வருகிறார்கள்

    திருச்சி,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் சார்பில் பொதுமக்கள் சிரமின்றி செல்வதற்காக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களில்13, 14, 15 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கும், பிற இடங்களுக்கும 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக போக்குவரத்து பணியாளர் விடுமுறை இன்றி பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஒவ்வொரு பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும்.
    • பேருந்துக்கு வெளியேயும் நடக்கும் விதிமீறல்களை எளிதாக கண்டறிய முடியும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் வரும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என அந்த மாநிலத்தின் போக்குவரத்துத்துறை மந்திரி அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார். கேமராக்களை கொள்முதல் செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டதாகவும், இனி இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒவ்வொரு பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்த அவர், இந்த நடவடிக்கையின் மூலமாக பேருந்தின் உள்ளேயும், பேருந்துக்கு வெளியேயும் நடக்கும் விதிமீறல்களை எளிதாக கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    இது தவிர, வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார்.

    • ஆயுதபூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு புதுக்கோட்டையில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது
    • புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இரா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட், புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இரா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    21.10.2023, 22.10.2023, சனி, ஞாயிறு வார விடுமுறை, 23.10.2023 ஆயுத பூஜை, 24.10.2023 விஜய தசமி என தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக, புதுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும்,

    சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளா ங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களி லிருந்து திருச்சிக்கும், புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்க ண்ணி ஆகிய ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு முக்கிய விடுமுறை நாட்களான 3 தினங்களுக்கு மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 24.10.2023 மற்றும் 25.10.2023 செவ்வாய், புதன் நாட்களில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 200 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை, நாகப்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளா ங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    20.10.2023, 21.10.2023 மற்றும் 22.10.2023 தொடர் விடுமுறைகாரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொ ள்ளப்படுகி றார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • விஷ்ணு பலத்த காயமடைந்து வலியால் துடித்தான்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த அணைப்பதி பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது மகன் விஷ்ணு (வயது 10). குன்னத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்கு செல்வதற்காக குன்னத்தூர் பஸ் நிலையத்திற்கு சென்றான். அங்கிருந்து அணை அணைப்பதி பகுதி வழியாக செல்லும் பஸ்சிற்கு பதிலாக ஆதியூர் வழியாக செல்லும் 10-ம் நம்பர் பஸ்சில் விஷ்ணு ஏறியுள்ளான்.

    சிறிது தூரம் சென்றதும், பஸ் வேறு தடத்தில் செல்வதை கண்ட சிறுவன் அதிர்ச்சியடைந்து, பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் தெரிவித்துள்ளான். பலமுறை கூறியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த விஷ்ணு, ஓடும் பேருந்தில் இருந்து குதித்துள்ளான்.

    இதில் விஷ்ணு பலத்த காயமடைந்து வலியால் துடித்தான். உடனே அப்பகுதி பொதுமக்கள் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து ள்ளனர். பின்னர் இது குறித்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குன்னத்தூர் போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தினர். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சை நிறுத்தாததால் பள்ளி மாணவன் பஸ்சில் இருந்து குதித்த சம்பவம் குன்னத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • புதிய பஸ் நிலைத்திற்குள் உள்ளே வரும் பஸ்கள் மிக வேகமாக வருவதால் காத்திருக்கும் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

     அவினாசி

    அவினாசி பேரூராட்சி கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கோபாலகிருஷ்ணன் (16-வது வார்டு):-

    அவினாசி பு பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். வார்டு பகுதியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய வேண்டும். அவினாசி முழுவதும் உள்ள ரோடு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பல கூட்டங்களில் வலியுறுத்தியும் பயனில்லை. பேரூராட்சி பகுதியில் நடைபெறும் வேலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்வதே கிடையாது.

    தங்க வேல் (3-வது வார்டு):-

    மாகாளியம்மன் கோவில் அருகில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மிகவும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு மண்கொட்டி அந்த இடத்தை சமன்படுத்த வேண்டும்.

    கார்த்திகேயன் (11-வது வார்டு):-

    சங்கமாங்குளம் வீதியில் பள்ளி, குடியிருப்புகள் நிறைய உள்ளது. இங்கு சாக்கடை கால்வாய் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே அங்கு வடிகால் அமைக்க வேண்டும். புதிய பஸ் நிலைத்திற்குள் வரும் பஸ்கள் மிக வேகமாக வருகின்றன. இதனால் அங்கு காத்திருக்கும் பஸ் பயணிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே பஸ் நிலைய நுழைவு வாயிலில் வேகத்தடை அமைக்க வேண்டும்.தலைவர்: வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை கால்வாய் அமைக்கப்படும்.

    பருக்கதுல்லா (15-வது வார்டு):-

    அவினாசி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால் ஆடு, கோழிகளை கடிப்பதுடன் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.எனவே தெருநாய்களை பிடிக்க வேண்டும்.சுகாதார ஆய்வாளர் :தெருநாய்களை பிடிக்க அதற்கு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வந்தவுடன பிடிக்கப்படும்.

    இவ்வாறு வார்டு உறுப்பினர்கள் பேசினர்.

    • திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில்கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்.
    • கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில்கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து அரசு போக்குவரத்துகழகம் திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட், திருப்பூர் மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடபேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். 

    • பள்ளி குழந்தைகளின் வசதிக்காக காங்கயத்தில் இருந்து முத்தூர் வழியாக ஊடையத்திற்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் முதியவர்கள் பயனடைவார்கள்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் பகுதியில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் வசதிக்காக காங்கயத்தில் இருந்து முத்தூர் வழியாக ஊடையத்திற்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் முத்தூர் பஸ் நிலையத்திலிருந்து விவேகானந்தா பள்ளி வழியாக தண்ணீர் பந்தல், சின்ன முத்தூர், அரசு மருத்துவமனை வழியாகச் சென்று சுமைதாங்கி வழியாக ஊடையம் சென்றால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் முதியவர்கள் பயனடைவார்கள்.எனவே சின்னமுத்தூர் வழியாக பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் -சென்னை நான்கு வழிப் பாதையில் 4 -ம் நம்பர் அரசு டவுன் பஸ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
    • அரசு பேருந்தின் டயர் மிகவும் மோசமாக இருந்ததால் டயர் வெடித்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதிக்கு ஆத்தூரிலிருந்து தலைவாசலுக்கு சேலம் -சென்னை நான்கு வழிப் பாதையில் 4 -ம் நம்பர் அரசு டவுன் பஸ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

    அப்பொழுது மணி விழுந்தான் என்னும் இடத்தில் அரசு பேருந்தின் டயர் மிகவும் மோசமாக இருந்ததால் டயர் வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் எதுவும் இல்லாமல் சாலையின் ஓரமாக பேருந்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பேருந்தில் பயணிகள் அனைவரும் கீழே இ அந்த பேருந்தில் டயர் மாற்றுவதற்கான ஸ்டெப்னி டயர் இல்லாததால் மாற்று பேருந்து 31 -ம் நம்பர் பேருந்து வரவழைக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெப்னி டயரை பயன்படுத்தினார்கள். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தின் ஏற்றி தலைவாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பேருந்தில் ஸ்டெபி டயர் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரமாக சாலையிலேயே பயணிகள் அனைவரும் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

    • திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டத்தால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது
    • போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா இன்று ெதாடங்கிவைத்தார்

    திருச்சி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பெருநகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி கும்பகோணம் அரசு போக்கு–வரத்து கழகம் சார்பில் இன்று சென்னை, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு 350 சிறப்பு பஸ்களும் நாளைய தினம் 400 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதி–காரி தெரிவித்தார். நாளை முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற காரணத் தினால் இன்று மாலை முதல் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கூட்டம் அலை–மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் மக்கள் மாலை முதல் விடிய விடிய வருவார்கள். ஆகவே சிறப்பு பஸ்களும் விடிய, விடிய பயணிகள் வருகைக்கு ஏற்ப இயக்கப்படும் என போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரி–வித்தார். நாளைய தினம் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருவார்கள் அவர்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் நெருக்கடி மற்றும் சிரமமின்றி சென்று வருவதற்கு வசதிக்காக திருச்சியில் 2 இடங்களில் அதாவது மன்னார்புரம், வில்லியம்ஸ் ரோடு சோனா மீனா தியேட்டர் அருகி–லும் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மன்னார்பு–ரத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய–பிரியா இன்று கொடி–யசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்க–ளிடம் கூறியதாவது:- மதுரை, புதுக்கோட்டை போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இது 17-ந்தேதி வரை செயல்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க–வும், பயணிகளின் வசதிக் கா–கவும், அவர்கள் மகிழ்ச்சி–யுடன் பொங்கலை கொண்டாடுவதற்காக தங்கள் ஊர்களுக்கு செல்ல–வும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஓட்டுனர்கள், நடத்து–னர்களுக்கு கூடுதல் பணி நிமித்தமாக மன அழுத்தம் ஏற்படலாம். அதே நேரத் தில் அவர்கள் ஓய்வும் எடுத்து பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க வேண்டும்.

    பயணிகளுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி–யுள்ளோம். பொங்கல் சிறப்பு பாது–காப்பு பணியில் கூடுத–லாக 1,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் எங்களி–டம் உள்ளது. அந்த குறிப் பிட்ட இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்படா–மல் தவிர்க்க அந்த இடங்களில் கூடுதல் பாது–காப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை–கள் செய்யப் பட்டுள்ளது. மேலும் வாகன போக்கு–வரத்தில் விதி மீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், காலை, மாலை வேளைக–ளில் நகரில் போக்கு–வரத்து நெரிசல் ஏற்படு–வது உண்மைதான். அதற்காக அருகில் உள்ள நடைபாலத்தை திறப்பது குறித்து கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி–னார்.


    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
    • சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி,

    கிருஷ்ணகிரி, ஓசூருக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படு கிறது. பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரிக்கும், ஓசூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணா மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கும், சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் விழுப்புரத்திற்கும், கோவை, திருப்பூரிலிருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும், பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்ப ஏதுவாக, 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து பெங்களூருக்கும், சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து ஓசூருக்கும், மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து சேலத்திற்கும், சேலத்திலிருந்து கோவை மற்றும் திருப்பூருக்கும் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது. அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (12-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×