என் மலர்
செய்திகள்

அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: டிரைவர் கைது
ஜெயங்கொண்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தினேஷ் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தா. அப்போது அவ்வழியாக கடலூரிலிருந்து உடையார்பாளையம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி விசாரித்ததில் அதில் அரசு அனுமதியின்றி 4 யூனிட் கூழாங்கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் லாரி ஓட்டுநர் கீழகுமார மங்கலம் சுந்தர ராஜன் (35) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றார்.
Next Story






