search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Van collide"

    பெருந்துறை அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியதில் வேலூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். #Accident
    சென்னிமலை:

    வேலூர் காட்பாடி பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கோதண்டம் (வயது 60) என்ற குருசாமி தலைமை யில் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வேனில் புறப்பட்ட னர்.

    வேனில் செந்தில்குமார் (40), பழனி (40), நாகராஜ் (45), நாராயணசாமி (29), விமல் (27), சசி (28), ஜோதி (32), ஸ்ரீமதி (3), அருண் (5), ரோஹித் (7), மோனிஷா (8) உள்பட 13 பேர் இருந்தனர்.

    வேனை வேலூரை சேர்ந்த ராஜ்கபூர் (29) என்பவர் ஓட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வேன் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    ஓலப்பாளையம் பிரிவு வந்தபோது ஆந்திர மாநிலத்திலிருந்து சிலிக்கான் லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை வேலூரை சேர்ந்த பலராமன் (53) ஓட்டிச் சென்றார்.

    அந்த லாரியை ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் டிரைவர் முந்த முயன்றார். அப்போது லாரியின் பின்புறத்தில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பழனி, நாகராஜ் ஆகிய 2 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள். குருசாமி கோதண்டத்தின் 2 கால்களும் முறிந்தன.

    வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Accident


    வலங்கைமான் அருகே வேன் மோதி தொழிலாளி பலியானார். காயமடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் அருகே உள்ள ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமலு (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் லிப்ட் கேட்டு வடுவூர் மேல்பாதியை சேர்ந்த வேணு கோபால் (65). விடையல் கருப்பூரை சேர்ந்த லூர்து சாமி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தனர்.

    அவர்கள் ஆண்டாங்கோவில் பெரியார் காலனி அருகே வந்த போது அந்த வழியாக வந்த லோடு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ராமலு உள்பட 3 பேரும் காயமடைந்தனர். ராமலு தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.

    இவர்கள் 3 பேரையும் வலங்கைமான் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுகன் மற்றும் போலீசார் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பலியான ராமலுவுக்கு சங்கரி என்ற மனைவியும், ராமதிலகம் என்ற மகளும் உள்ளனர்.

    உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி அதிமுக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள ராமபால்புரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 48). அ.தி.மு.க. பிரமுகர்.

    இவர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 50 பேர் நேற்று சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு பஸ்சில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சேகர் உள்பட கட்சியினர் அதே பஸ்சில் சென்னையில் இருந்து ராமபால்புரம் நோக்கி புறப்பட்டனர்.

    அந்த பஸ் நள்ளிரவு 1 மணியளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேக்உசைன்பேட்டை பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். அப்போது சேகர் அந்த பகுதியில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றார்.

    அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த வேன் திடீரென சேகர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சேகர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    விபத்து குறித்து எடைக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×