என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் மீது மோதி நிற்கும் லாரி.
டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி விபத்து
- சரக்கு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பர்மர் மீது மோதியது.
- சிறு காயத்துடன் டிரைவர் மற்றும் கிளினர் உயிர்தப்பினர்.
அம்மாபேட்டை:
தஞ்சை மாவட்டம் களஞ்சேரி பகுதியில் பாபநாசம்-சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கோழி ஏற்றி சென்ற சரக்கு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பர்மர் மீது மோதியது.
இதில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் உடனடியாக மின்தடை ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிர்ஷ்வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.சிறு காயத்துடன் டிரைவர் மற்றும் கிளினர் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் மின்வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story