search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Floods"

    கேரள மழை வெள்ளத்தில் பாழடைந்து போன ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்து வழங்குவதாக ஹூவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. #KeralaFloodRescue

     

    கேரளாவில் பலத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு போன்றவை அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்து இருக்கிறது. இந்நிலையில், வெள்ள பாதிப்பில் இருந்து அம்மாநில மக்களை மீட்க பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

    பொதுமக்கள், அண்டை மாநிலங்களை சேரந்த அரசு, அரசியல் கட்சிகள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், டெக் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண பொருட்கள், நிதி உதவி கேரள மக்களுக்கு வழங்கப்படுகிறது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், பல லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

    அந்த வகையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பாழாகிய ஸ்மார்ட்போன்களை ஹூவாய் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குவதாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுக்க இயங்கி வரும் சர்வீஸ் மையங்களில் உதிரி பாகங்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்ப குழுக்களை பிரத்யேகமாக நியமித்துள்ளது.


    கோப்பு படம்

    இதன்மூலம் மக்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வேகமாக சரி செய்து வழங்க முடியும் என தெரிகிறது. 

    ''கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஹூவாய் வாடிக்கையாளர் சேவை மைய குழுக்கள் முழு வீச்சில் இயங்கும் என ஹவாய் இந்தியா வணிக வியாபாரங்கள் பிரிவு தலைவர் ஆலென் வாங் தெரிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக சரி செய்து தரப்படும். பலதரப்பு உதவிகள் தொடர்ந்து வருவதால், கேரளா விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு விடும்," என அவர் மேலும் தெரிவித்தார். 

    வெள்ளதத்தில் பாதிக்கப்பட்ட தங்களது சாதனங்கள் சரி செய்ய வாடிக்கையாளர்கள் ஹூவாயின் இலவச அழைப்பு எண் - 1800-209-6555 தொடர்பு கொண்டு இலவசமாக சரி செய்து கொள்ளலாம். இலவச சர்வீஸ்கள் ஆகஸ்டு 31-ம் தேதி வரை கிடைக்கும் என்றும் கேரளாவில் வசிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்பெற முடியும். #KeralaFloodRescue #KeralaFloods2018
    கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சிக்கி பேரழிவை சந்தித்து மெல்ல மீண்டு வரும் கேரள மாநிலத்திற்கு ரூ.7 கோடி நிவாரணம் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. #KeralaFloodRelief


    கேரள மாநிலத்தை வரலாறு காணாத கனமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்ற நிலையில், மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் கேரளாவுக்கு ரூ.7 கோடி வழங்குவதாக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அறிவித்துள்ளது.

    “கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மனமுடைந்து போனோம். ஆப்பிள் சார்பாக கேரள முதல்வர் பொது நிவாரண நிதி கணக்கு மற்றும் மெர்சி கிராப்ஸ் இந்தியா எனும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள், மற்றும் பள்ளிக் கூடங்களை கட்ட உதவியாக இருக்கும்,” என ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம், ஆப் ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு உதவ பிரத்யேக பேனர்களை பதிவிட்டுள்ளது. பல்வேறு இற்கை பேரிடர்களுக்கு நிதி திரட்ட ஆப்பிள் நிறுவனம் பலமுறை ஐடியூன்ஸ் ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களை பயன்படுத்தி இருக்கிறது.

    ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு 5, 10, 25, 50, 100 அல்லது 200 டாலர்கள் வரை நிதி வழங்கலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். #KeralaFloodRelief #Apple
    வெள்ளச் சேதத்தில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பிவரும் கேரள மாநில துயர் துடைப்பு பணிகளுக்கு இந்திய விமானப்படை சார்பில் இன்று 20 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. #Keralafloods #IAFdonates
    திருவனந்தபுரம்:

    ‘கடவுளின் நாடு’ என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் இந்த மாதம் இயற்கை ஆடிய கோரத்தாண்டவத்துக்கு 300-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். பல மாவட்டங்களில் விளைபொருட்கள் நாசமாகின.



    வெள்ளப்பெருக்கில் லட்சக்கணக்கான வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் சேதமடைந்துள்ளன. வெள்ளம் வடிய தொடங்கிய பின்னர் செய்யப்பட்ட ஆய்வின்படி 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த வெள்ளத்தினால் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    கேரள அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அனைத்து  மாநில அரசுகளும் நிதியுதவி அளித்துள்ளன. மேலும், தனியார் நிறுவனங்களும் வங்கிகள் உள்ளிட்ட அரசுதுறை சார்ந்த நிறுவனங்களும் நிதியுதவி செய்து வருகின்றன.

    அவ்வகையில், கேரள மாநில துயர் துடைப்பு பணிகளுக்கு இந்திய விமானப்படை சார்பில் இன்று 20 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம் நகரில் இன்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்த தென்னக விமானப்படை தளபதி ‘ஏர் மார்ஷல்’ பி.சுரேஷ் 20 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய பல்லாயிரம் உயிர்களை மீட்க பெருந்துணையாக இருந்த விமானப்படை சார்பில் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Keralafloods #IAFdonates 
    ஓணப்பண்டிகை தினமான இன்று பத்மநாபபுரம் அரண்மனை களை இழந்து காணப்பட்டது. கேரள அரசே ஓண விழாக்களை ரத்து செய்து விட்டதால் இங்குள்ள அதிகாரிகளும் ஓணக் கொண்டாட்டங்கள் எதற்கும் ஏற்பாடு செய்யவில்லை. #KeralaFloods #Onamfestival
    தக்கலை:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் வெள்ளத்தில் மிதந்தது.



    மழை வெள்ளம் காரணமாக கேரள மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து வந்தாலும், கேரளாவில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.

    வழக்கமாக ஆகஸ்டு மாதம் தொடங்கிவிட்டாலே கேரளாவில் ஓணக் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி விடும். ஆனால் இந்த மாதம் மழை வெளுத்து வாங்கியதால் அங்கு ஓணக் கொண்டாட்டத்திற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

    கேரள அரசும் இந்த ஆண்டு ஓண விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதற்காக நடக்கும் ஊர்வலம், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும் கூறியுள்ளது.

    இதுபோல ஏராளமான மக்கள் ஓணக் கொண்டாட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை. முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தங்களுக்குள் ஓண வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்து கொண்டனர். மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவையும் பகிர்ந்து உண்டனர்.

    கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணக்கொண்டாட்டம் களை கட்டும். தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணத்தையொட்டி அத்தப்பூக்கோலம், ஓண ஊஞ்சல் ஆட்டம் போன்றவை நடைபெறும்.

    புலியாட்டம், செண்டை மேளங்களும், புத்தாடை அணிந்து வலம் வரும் பெண்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும்.

    இதனை பார்த்து ரசிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் ஓணப்பண்டிகை நாளில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் ஓணப்பண்டிகை தினமான இன்று பத்மநாபபுரம் அரண்மனை களை இழந்து காணப்பட்டது. கேரள அரசே ஓண விழாக்களை ரத்து செய்து விட்டதால் இங்குள்ள அதிகாரிகளும் ஓணக் கொண்டாட்டங்கள் எதற்கும் ஏற்பாடு செய்யவில்லை.

    இதனால் இன்று பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த சுற்றுலா பயணிகளும், பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #KeralaFloods #Onamfestival
    கேரள அரசின் கோரிக்கையை ஏற்று 250 டிரான்ஸ்பார்மர்கள், 40 ஆயிரம் மீட்டர் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #KeralaFloods
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். அப்போது தி.மு.க. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கோர்ட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

    எப்போது உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் (அ.தி.மு.க.) தயாராக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம். எந்த தேர்தல் வந்தாலும் அதில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்கு பயம் கிடையாது. குற்றம் சொல்லும் கட்சிக்காரர்களுக்குதான் பயம்.

    வெள்ளத்தால் கேரள மாநிலம் பாதித்துள்ளது. கேரள அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பாக கேரளாவுக்கு 250 டிரான்ஸ்பார்மர்களும், 40 ஆயிரம் மீட்டர் பெட்டிகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தொழில்நுட்ப உதவியாளர் (டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்) நியமனத்திற்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததால் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படவில்லை. தற்போது கோர்ட்டில் தீர்ப்பு வந்துள்ளது. எனவே இந்த ஆண்டு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் (கடந்த ஆண்டு சைக்கிள் வாங்காதவர்கள்) விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KeralaFloods
    நேற்று இரவு வரை கேரள முதல்வர் பிரனராயி விஜயன் நிவாரண நிதிக்கு ரூ.539 கோடி சேர்ந்து உள்ளது. #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கன மழை,  வெள்ளம் மற்றும்  நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு  திரும்பி வருகிறது. கேரளாவை  சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.கேரள  முதல் அமைச்சர் நிவாரணை நிதிக்கு பலவேறு தரப்பினர் நிவாரன நிதி அனுப்பி வருகின்றனர்.

    நாடுமுழுவதும் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டு இருந்த 10 லட்சத்திற்கும் அதிகமான பேர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களில் 5 லட்சம் பேர் தங்கள்  வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

    நேற்று இரவு வரை முதல்வர் நிவாரண நிதியில் ரூ.539 கோடி ரூபாய்  சேர்ந்து உள்ளது. #KeralaFloods #KeralaFloodRelief 
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை புதுவை பா.ஜனதா சேகரித்து வழங்கியது.
    புதுச்சேரி:

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவை பா.ஜனதா கட்சியின் தூய்மை இந்தியா குழு மற்றும் பேரிடர் மேலாண்மை குழு இணைந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை சேகரித்து செல்கின்றனர்.

    இக்குழுவின் தலைவராக அகிலன் மற்றும் சோழராஜன் செயல்பட்டு ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., கொடி அசைத்து வழி அனுப்பினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் தங்க. விக்ரமன், ரவிச்சந்திரன், சங்கர், துணை தலைவர் செல்வம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    மேலும் இக்குழுவினருடன் நாகேஸ்வரன், வடிவேல், கணபதி, வேலு, ஸ்ரீநிவாசன், திரிபுரசுந்தரி, கவிதா, ரமேஷ், ஜான் கென்னடி, கர்ணன், சிவ செந்தில், பாலபாஸ்கர், குமார், கலையரசன், வேணுகணேஷ், ஆனந்த பாஸ்கர் மற்றும் பலரும் கேரளா சென்றுள்ளனர்.


    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் அந்த மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது.

    இதனால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மாநில அரசு மேற்கொண்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை முப்படையை சேர்ந்த வீரர்களும் மீட்கும்பணியில் ஈடுபட்டனர். இயல்பு நிலை திரும்புவதை தொடர்ந்து 13 பட்டாளியன் ராணுவ வீரர்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பி விட்டனர்.

    கடந்த 3 நாட்களாக கேரளாவில் மழை ஓய்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    வெள்ளத்தில் மூழ்கிய பலரது வீடுகள் முற்றிலுமாக இடிந்து சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த வீடுகளும் உடனடியாக மக்கள் குடியேற முடியாதபடி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இவற்றை தூய்மை செய்து மக்கள் குடியேறி வருகிறார்கள்.

    இதனால் முகாம்களில் தங்கி உள்ளவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் 50 சதவீத மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்கள் திருமண மண்டபம், சமூகநலக்கூடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள கோலஞ்சேரி முகாமில் தங்கி உள்ள பொதுமக்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்யும் என்று உறுதி அளித்தார்.

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுவதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. சபரிமலையில் மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றை மண்டல பூஜைக்கு முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தயார் செய்து வருகிறது.

    கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இன்று முதல் அதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. முகாம்களில் தங்கி உள்ளவர்கள் ஓணம் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். மழை காரணமாக ஓணம் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது.  #KeralaFloods
    கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கியுள்ளது. #KeralaFloodRelief #KeralaRains
    கேரளாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். வெள்ள நிவாரண முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மத்திய அரசு ரூ.600 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில், உலக நாடுகளில் இருந்தும் நிதியுதவி வருகிறது. இங்கும் பலர் உதவி வருகின்றனர். திரைத்துறையில் இருந்து பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.

    விஜய், விஜய் சேதுபதி, விக்ரம், கமல்ஹாசன், ரோகிணி, விக்ரம், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சூர்யா, கார்த்தி, ஸ்ரீப்ரியா, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்மூட்டி எனப் பலரும் உதவி உள்ளனர். இந்நிலையில், லைகா புரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனம் ரூ.1 கோடி ரூபாய் நிதியுதவியை கேரள முதல் மந்திரி பினராய் விஜயனிடம் வழங்கியுள்ளது. #KeralaFloodRelief #KeralaRains 

    முல்லைப்பெரியாறு அணையை திடீரென திறந்ததே வெள்ளத்திற்குக் காரணம் என்ற கேரள அரசின் குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு இன்று எழுத்துப்பூர்வ பதில் மனுவை தாக்கல் செய்தது. #KeralaFloods #TamilNaduReply #MullaperiyarDam
    புதுடெல்லி:

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தது.

    அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே கொஞ்சம் கொஞ்சமாக  தண்ணீரை திறந்து விட்டிருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் கேரளா தனது மனுவில் கூறியிருந்தது.

    இந்த குற்றச்சட்டுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு இன்று எழுத்துப்பூர்வ மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஆகஸ்ட் 14ம் தேதி முதல் முதல் 19ம் தேதி வரை இடுக்கி, இடைமலை அணைகளில் இருந்து 36.28 தண்ணீர் டிஎம்சி திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம்.



    ஆகஸ்ட் 15-ம் தேதி முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியபோது, அணையில் இருந்து இடுக்கி அணைக்கு 1.24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அன்று கேரள அரசு இடுக்கி அணையில் இருந்து 13.79 டிஎம்சி திறந்துவிட்டது. ஆகஸ்ட் 16-ல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 2 டிஎம்சி திறக்கப்பட்டது. ஆனால் கேரளா இடுக்கி அணையில் இருந்து 4.47 டிஎம்சி திறந்துவிட்டது. எனவே, கேரள வெள்ளப் பெருக்கிற்கு தமிழகம் காரணம் என்று குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
     
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KeralaFloods #TamilNaduReply #MullaperiyarDam
    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரிய வழக்கில், கேரள அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அணையில் இருந்து திடீரென்று அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. #KeralaFloods #SupremeCourt
    புதுடெல்லி :

    கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.

    இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நிரம்பியது.

    மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால், அதில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரும் இடுக்கி அணைக்கு சென்றது.

    இதனால் இடுக்கி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி மாவட்டத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    முல்லைப்பெரியாறு அணை யில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி, நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரி நீரை தமிழகம் திறந்து விட்டது.

    இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உச்ச நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி, ஜாய் ரஸ்ஸல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கேரளாவில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள், புனரமைப்பு பணிகள், மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

    இந்தநிலையில், கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.



    அந்த பிரமாணபத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் நிகழ்ந்த பெருவெள்ளத்தால் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    கேரளாவில் ஏற்கனவே மழை பெய்து வந்த நிலையில், இந்த மாதம் பெருமழை பெய்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி அதிகமாகவும், அணையில் நீரை தேக்கி வைக்கும் திறன் குறைவாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து அதிகமானதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை.

    கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் மூலம் திடீரென்று இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இடுக்கி அணையில் இருந்தும் நீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்துக்கு கேரள அரசு உள்ளானது.

    இதன் காரணமாக கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே, தமிழகம் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீரை திறந்து விட்டு இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டு இருக்காது. வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு தமிழகம் திடீரென்று தண்ணீரை திறந்துவிட்டதும் ஒரு காரணம் ஆகும்.

    எனவே, இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் தலைமையில் இரு மாநிலங்களின் நீர்ப்பாசனத்துறை செயலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு மேற்பார்வை குழு அமைக்கப்பட வேண்டும். பெருவெள்ளம் ஏற்படும் போது உடனடியாக தண்ணீர் திறந்து விடுவது பற்றிய முடிவை எடுக்கும் அதிகாரத்தை இந்த குழுவுக்கு வழங்க வேண்டும்.

    மேலும் இந்த மேற்பார்வை குழுவின் கீழ் இயங்கும் வகையில் மேலாண்மை குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். அந்த மேலாண்மை குழு முல்லைப் பெரியாறு அணையின் அன்றாட நீர்வரத்து, நீர்மட்ட அளவு, நீர் திறப்பு ஆகியவை குறித்த நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்.

    இந்த மேலாண்மை குழு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் அல்லது மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இரு மாநிலங்களின் தலைமை பொறியாளர்கள் அல்லது மேற்பார்வை பொறியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படவேண்டும்.

    இவ்வாறு கேரள அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணபத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது. #KeralaFloods #SupremeCourt
    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
    கோவை:

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    கோவை கீதா ஹால் ரோட்டில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. அரிசி, பருப்பு, மாத்திரைகள், குடிநீர் பாட்டில்கள், துணிமணிகள், போர்வை, ஹார்லிக்ஸ் உள்ளிட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கணபதி சிவக்குமார், பச்ச முத்து, சொக்கம்புதூர் கனகராஜ், சவுந்திர குமார், வக்கீல் கருப்புசாமி, காந்த குமார், கேபிள் வினோத், கு.பே.துரை, துரை ராஜ், பாசமலர் சண்முகம்,

    செல்வபுரம் ஆனந்த், கார்த்திக், பரமசிவம், சிங்கை ஜவஹர்.மகளிர் அணி மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, சிவகாமி, திலகவதி, மஞ்சுளா, மல்லிகா, தமிழ் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×