search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலச்சரிவு"

    • மலையில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறை மற்றும் மணல்கள் விழுந்தன.
    • சீன எல்லையில் ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இட்டாநகர்:

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீன எல்லையையொட்டி உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையையொட்டி உள்ள திபாங் பள்ளத்தாக்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 33-ல் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

    மலையில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறை மற்றும் மணல்கள் விழுந்தன. மேலும் அந்த சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு துண்டானது. இதனால் ஹுன்லி-அனினி இடையே போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    சீன எல்லையில் ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க மூன்று நாட்கள் ஆகும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    தற்போது வானிலை மோசமாக இருப்பதால் சீரமைப்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.
    • பாதையை பயணிகள் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள்.

    ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஜம்மு பகுதியின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூனி நாலா பகுதியில் நேற்று இரவு 10:30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்து தடையை ஏற்படுத்தி உள்ளது.

    இதைதொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHA) 144-ல் உள்ள சாலைகளில் பாறைகளை அகற்றும் பணி 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, இந்த பாதையை பயணிகள் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    முன்னதாக மார்ச் 31-ம் தேதி, ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 44, மேஹத் தல்வாஸ் மற்றும் கிஷ்த்வார் பதேர், ராம்பன் ஆகிய இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன
    • 80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

    இந்தோனேசியாவை சேர்ந்த தீவு பிரதேசம், சுமத்ரா (Sumatra island).

    மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வந்த கடும் மழையால், திடீர் வெள்ளமும், அதை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதில் தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேரை காணவில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (National Disaster Management Agency) தெரிவித்துள்ளது.

    இந்த சரிவினால் மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. இவற்றால் நதிக்கரையோர கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கோடோ XI டருசான் (Koto XI Tarusan) பகுதியில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.


    80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 14 வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன.

    20 ஆயிரம் பேர்களின் வீடுகள் மேற்கூரை வரை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    மின்சாரத் தடை, சாலைகளில் ஓடும் வெள்ள நீர், குப்பைகள் போன்றவற்றால் மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கிடையே சிக்கியுள்ள மக்களை மீட்க முயன்று வருகின்றனர்.

    பெருமளவு மலைப்பிரதேசங்களை கொண்ட இந்தோனேசியாவில் வெள்ள அபாய பகுதிகள் ஏராளமாக உள்ளன.

    அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் மழையால் ஏற்படும் வெள்ளம் போன்றவற்றால் லட்சக்கணக்கான மக்கள் துன்பப்படுவது அங்கு தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த 2023 டிசம்பர் மாதம் திடீர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், டோபா எனும் ஏரிக்கருகே ஒரு ஓட்டல் முற்றிலும் சேதமானது.

    • 500-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
    • 200 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியது.

    நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்தன. புதைந்த வீட்டில் சிக்கியிருந்த 500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

    18 குடும்பத்தைச் சேர்ந்த 47-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் 200 மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோர் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. நிலச்சரிவுக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் குளிர் (மைனஸ் 3 டிகிரி வெப்பநிலை) நிலவி வருகிறது.

    • நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. நகரின் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரியும் நிரம்பிவிட்டது.

    இன்று காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால் மேல்மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கொடைக்கானலில் இருந்து வானியல் ஆய்வு மையத்துக்கு செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை மன்னவனூர், பூம்பாறை ஆகிய மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான பகுதியாகும். நிலச்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிலச்சரிவை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் சீரமைப்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதே போல் இரவு முழுவதும் நீடித்த மழையால் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையான அப்சர்வேட்டரி செம்மண் மேடு பகுதியில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேரம் மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களால் போக்குவரத்து சீரானது.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சிபட்டி, குப்பம்மாள்பட்டி, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு, மரக்கிளைகள் விழுந்தன. இதேபோல் பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு-மூலக்கடைஇடையே மலைப்பாதையில் மரக்கிளை முறிந்து விழுந்தது.

    இதனால் அப்பகுதியில் உள்ள 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன. இதனால் மூலக்கடை, புல்லாவெளி, மீனாட்சி ஊத்து பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா, உதவிசெயற் பொறியாளர் மாணிக்கம், அய்யம்பாளையம் உதவிமின் பொறியாளர் செல்லகாமாட்சி ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் இன்று மின் வினியோகம் சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் ஆங்காங்கே மலைபாதையில் முறிந்து விழுந்த மரங்களை அப்பகுதி மக்களே அகற்றி வருகின்றனர். தற்போது மழை குறைந்திருந்தாலும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று கொடைக்கானல் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். 

    • இடிபாடுகளில் இருந்து நான்கு பேரின் உடல்களையும் போலீசார் மீட்டனர்.
    • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில அரசு நிவாரண நிதி வழங்கி உள்ளதாக மேகாலயா டிஜிபி தெரிவித்தார்.

    மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ்:

    மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸில் உள்ள பைந்தோர்லாங்டைன் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிருடன் புதைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர் முயற்சிக்கு பிறகு, இடிபாடுகளில் இருந்து நான்கு பேரின் உடல்களையும் போலீசார் மீட்டனர்.

    நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில அரசு நிவாரண நிதி வழங்கி உள்ளதாக மேகாலயா டிஜிபி தெரிவித்தார்.

    • மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
    • மாநிலத்தின் உள் கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்த ஒரு ஆண்டு ஆகும்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுகு கூறியதாவது:-

    நான் கங்க்ரா செல்லும் வழியில் இருக்கிறேன். நிலச்சரிவால் அங்கு 650-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளோம். சுமார் 100 பேர் கங்க்ராவில் இன்னும் சிக்கியுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இதற்கு முன்பு இது போன்ற பேரழிவு ஏற்பட்டது இல்லை.

    மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநிலத்தின் உள் கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்த ஒரு ஆண்டு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாக்லி பகுதியில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. இங்கு 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மலை மாநிலங்களில் பருவ மழை வழக்கத்தைவிட அதிகமாக கொட்டி வருகிறது.

    இமாச்சல்பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் கன மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல இடங்களில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இமாசலபிரதேசத்தின் மண்டி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக கன மழை கொட்டியதில் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அதை தொடர்ந்து 2-வது கொட்டமாக தொடர்மழை கொட்டி வருகிறது.

    தலைநகர் சிம்லாவில் மழையினால் தொடர்ந்து பேரழிவு ஏற்பட்டு வருகிறது. மழையினால் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. சிம்லா கிருஷ்ணா நகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். 5 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிம்லாவின் லால்பானி பகுதியில் மரங்கள் விழுந்ததில் இறைச்சி கூடம் மற்றும் பிற கட்டிடங்கள் சேதமடைந்தன. மழை காரணமாக இந்த கட்டிடம் சிறிது நேரத்தில் இடிந்து விழுந்தது.

    ஏற்கனவே சிம்லா சம்மர் ஹில்ஸ் பகுதியில் கனமழையால் சிவன் கோவில் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். தற்போது மேலும் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். 4 நாட்கள் ஆகியும் அவர்கள் மீட்கப்படவில்லை. பாக்லி பகுதியில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. இங்கு 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    சோலான், ஜடோன், பலேரா ஆகிய கிராமங்களில் பெய்த இடைவிடாத மழை காரணமாக 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பானல் கிராமத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிம்லாவில் ஏற்பட்ட 2 நிலச்சரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டன. பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு படையினர் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய புனிதத் தலங்களுக்குச் செல்லும் சாலைகள் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, சார்தாம் யாத்ரா என்று அழைக்கப்படும் புனித தலங்களுக்கான யாத்திரை 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மழையால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். வீட்டில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனுடன், சிம்லா உள்ளிட்ட மழை பெய்யும் பகுதிகளில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே இமாச்சல பிரதேசத்தில் டேராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால், மற்றும் உதம் சிங் நகர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு மற்றும் கன மழையால் 752 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த மாதம் ஜூன் 24 ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை, ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாதிப்புகளால் ரூ.6,807 கோடி அளவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துகளில் இதுவரை 225 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே பருவநிலை மாற்றத்தின் கீழ், சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்து உள்ளது. கன மழையால் சட்லஜ், பியாஸ் மற்றும் யமுனா ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகளான கின்னவுர், சிம்லா, குலு, மண்டி, பிலாஸ்பூர் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறுகள் பஞ்சாப் மற்றும் அரியானா வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல பாலங்கள் மற்றும் சாலைகள் பலத்த மழையால் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் முடங்கியுள்ளனர். கனமழையின் காரணமாக, மத்மகேஷ்வர் நடை பாதையில் பந்தோலி அருகே நடை பாதை பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ருத்ரபிரயாக்கில், கோவிலுக்குச் செல்லும் 2-வது கேதார் மத்மகேஷ்வர் பாதையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 250 பக்தர்களில் 40 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் காரணமாக, கவுண்டர் கிராமம், தெஹ்சில், உகிமத் மற்றும் ருத்ரபிரயாக் ஆகியவற்றுடன் 2-வது கேதார் மத்மஹேஷ்வரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டூனின் சஹஸ்ரதாராவில் 72 ஆண்டுக்கு பின்னர் கன மழை பெய்துள்ளது. சஹஸ்ரதாராவில் 251 மி.மீ. மழை பெய்துள்ளது. அதேசமயம், கடந்த 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி 332.2 மி.மீ., மழை பெய்ததே இதுவரை சாதனையாக இருந்தது. சஹஸ்ரதாராவின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டிருப்பது அதிக மழை பெய்ய காரணம் என்கின்றனர் வானிலை அதிகாரிகள்.

    டேராடூனில் மொத்தம் 175.1 மிமீ மழை பெய்துள்ளது, இது இயல்பை விட சுமார் 1000 சதவீதம் அதிகமாகும்.

    இதனிடையே டெஹ்ராடூன், டெஹ்ரி, பவுரி ஆகிய இடங்களில் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் மற்றும் உத்தரகாண்டின் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளின் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. சார்தாம் யாத்திரைக்கு வரும் மக்கள் வானிலை நிலையைப் பார்த்த பின்னரே மாநிலத்திற்கான பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    • தொடர்ந்து மீட்பு பணிகள், தேடுதல் வேட்டை மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
    • முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அதிவிரைவாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

    "மண்டி மாவட்டத்தின் சம்பல், பன்டோ பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பகுதிகளில் இதுவரை ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள், தேடுதல் வேட்டை மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன," என்று முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு டுவீட் செய்துள்ளார்.

    முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர். நேற்றிரிவு ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக ஏழு பேரும், சிவன் கோவில் அருகே நடைபெற்ற நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.

    • டேராடூனில் உள்ள ராணுவ கல்லூரி கட்டிடம் வெள்ளத்தில் சிக்கி சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது.
    • தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் தவிப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

    சிம்லா சம்மர்ஹில் பகுதியில் சிவன் கோவில் உள்ளது. இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் கோவில் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பேர் இறந்தனர். பலர் கோவிலுக்குள் சிக்கி உள்ளனர். இது பற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் தவிப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல்- மந்திரி சுக்வீந்தர் சிங் நேரில் சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டார்.

    உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டேராடூனில் உள்ள ராணுவ கல்லூரி கட்டிடம் வெள்ளத்தில் சிக்கி சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    • வடக்கு சீனாவின் ஜியான்ஸ் நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
    • மழை பெய்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சீனாவின் வடக்கு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

    தொடர் மழையால் சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மழை நீடித்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை சீனாவில் 78 பேர் இறந்து விட்டனர். பலர் மாயமாகி விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வடக்கு சீனாவின் ஜியான்ஸ் நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்தது. அந்த வீடுகளில் இருந்த 2 பேர் மீது மண் விழுந்து அமுக்கியதால் பரிதாபமாக இறந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று நிலச்சரிவில் புதைந்து போன வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் 16 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    • ஷோவி மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • சிலரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஜார்ஜியா நாட்டில் உள்ள ஷோவி மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள பள்ளத்தாக்கில் சேறுகளுடன் மரங்கள் உள்ளிட்டவை சரிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

    சிலரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ×