search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரிகள்"

    • ஜாகீர்உசேன் கல்லூரியில் கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா தொடங்கி வைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கால்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 12 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற போட்டியை இளையான்குடியின் முன்னாள் கால்பந்து வீரர் நைனா முகமது, கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம் மது முஸ்தபா தொடங்கி வைத்தனர்.

    அரையிறுதி போட்டியில் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அணி, இந்நாள் மாணவர்கள் அணி, ராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி மற்றும் காரைக்குடி வித்யாகிரி கல்லூரி அணி ஆகிய அணிகள் கலந்து கொண்டன.

    இதில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முன்னாள் மாண வர் அணி முதல் பரிசும், காரைக்குடி வித்யகிரி கல்லூரி அணி 2-ம் பரிசும், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இந்நாள் மாணவர்கள் அணி 3-ம் பரிசும், ராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி 4-ம் பரிசும் பெற்றனர்.

    பரிசளிப்பு விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்கு னர் காளிதாசன் வரவேற் றார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் வாழ்த்தி பேசினார். முன்னாள் மாணவர் கால்பந்து வீரர் கமருதீன், சேது பொறியியல் கல்லூரி யின் உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோரும் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு கோப்பை களை வழங்கினர்.

    தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காஜா நஜிமுதீன் செய்திருந்தார்.

    • இளையான்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது.
    • போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜா நஜ்முதீன், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது. ஆண்கள் மற்றும் மகளிருக்கான இருபிரிவிலும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. ஆண்கள் பிரிவில் இளையான்குடி, சாகிர் உசேன் கல்லூரி அணி 2-ம் இடமும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி அணி3-ம் இடமும், காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றது.

    மகளிர் பிரிவில் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி 2-ம் இடமும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி அணி 3-ம் இடமும், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றது. நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அகமது, ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், முதல்வர் அப்பாஸ் மந்திரி, சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கினர். இதில் அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் அசோக் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜா நஜ்முதீன், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் ரூ.152 கோடியே 20 லட்சம் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களை தோற்றுவித்தும், அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    பல்கலைக்கழகங்களால் கூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியரல்லா பணியிடங்கள் பல்கலைக்கழகங்களுக்கே திருப்பி அனுப்பப்படும். மேலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் நிதிக்குழு ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டு இருப்பின், அந்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-2023 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.
    • பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான (2022-2023) விண்ணப்பப் பதிவு இணையதள முகவரிகளில் கடந்த மாதம் ஜூன் 22-ம் தேதி தொடங்கியது.

    117 கல்லூரிகள்

    இதையடுத்து கடந்த 7-ந்தேதியுடன் (வியாழக்கிழமை) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்தது. இதையடுத்து கவுன்சிலிங் முடிவடைந்து, மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுபோல் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு அட்மிஷன் தீவிரமாக நடைபெற்றது.

    சேலம்

    சேலம் கருப்பூரில் உள்ள அரசு பெரியார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.

    இதில் 2021-2022 ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் ஏரியில் கட்டப்பட்ட புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 2022-2023-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோடை விடுமுறை

    இந்த நிைலயில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-2022 கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை நடந்து முடிந்தது.

    செமஸ்டர் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது.

    வகுப்புகள் தொடங்கின

    கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-2023 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.

    இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ- மாணவிகள் இன்று கல்லூரி முதல் நாள் என்பதால் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர். பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர். அவர்களை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

    ஆலோசனை

    மேலும் வகுப்பு பேராசியர்கள், பேராசிரியைகளும், மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்திருந்தனர்.

    கடந்த கல்வி ஆண்டில் கொரோனா பிரச்சினையால் பாட திட்டங்கள் குறைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முழுமையாக அனைத்து பாடங்களையும் நடத்துமாறு பேராசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இன்று கல்லூரி முதல் நாளையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. 

    • 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நன்னிலம் வருவதற்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
    • நன்னிலம் பேரூர் கிராமங்களை இணைக்கும் வகையில் நான்கு வட்ட பஸ் பாதைகளை அமைத்து வட்ட பஸ்–களை இயக்க வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவின் தலைநகரம், நன்னிலம் ஆகும், நன்னிலத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி, 12-க்கும் மேற்பட்ட வங்கிகள், குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றம், சுமார் 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.

    நன்னிலத்தில் சுற்றி 40-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து நன்னிலம் வருவதற்கு, போதுமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    எனவே பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் வட்ட பேருந்துகளை இயக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வர்த்தக நிறுவனத்தில் பணியாற்ற கூடிய ஊழியர்கள், அரசு அலுவலர்கள் பயன்பெறுவார்கள். எனவே நன்னிலம், மாப்பிள்ளை குப்பம், கீழ் அகரம், சலி பேரி, திருவாஞ்சியம், அச்சுதமங்கலம், வடகுடி, சிகார் பாளையம் வழியாக வந்தடைய வட்டப்பாதை பேருந்தும், நன்னிலம், நல்லமாங்குடி, மணவாளன் பேட்டை, ஆலங்குடி, முடிகொண்டான், சன்னா–நல்லூர், கீழ பனங்குடி, ஆண்டிபந்தல், பனங்குடி, மூல மங்கலம், மாப்பிள்ளை குப்பம் வழியாக ஒரு வட்ட பேருந்தும், நன்னிலம், செங்கமேடு, ஆனை குப்பம், த ட்டாத்தி மூலை, வீதிவிடங்கன், திருவாஞ்சியம், அச்சுத–மங்கலம், கீழ்குடி, கீழ் அகரம், சலிப்பே ரி, மாப்பிள்ளை குப்பம் வழியாக, ஒரு வட்ட பேருந்தும் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    போதுமான போக்கு–வரத்து வசதி இல்லாத காரணத்தினால், நன்னிலம் வர்த்தகமும், மந்த நிலையில் காணப்படுகிறது. எனவே நன்னிலம் பேருரை கிராமங்களை இணைக்கும் வகையில் நான்கு வட்ட பேருந்து பாதைகளை அமைத்து, வட்ட பேருந்து–களை இயக்க வேண்டும். என கோரிக்கை மக்களிடம் வலுவாக இருந்து வருகிறது.

    மக்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில், கிராம மக்கள் நன்னிலம் பகுதிக்கு வந்து செல்லும் வகையில், வட்ட பேருந்து பாதை அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×