என் மலர்
நீங்கள் தேடியது "Onam Celebration"
- திரைப்பிரபலங்கள் பலர் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- தவெக தலைவர் விஜய் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் புது ஆடை, வகையான சாப்பாடு, புது ரிலீஸ் திரைப்படங்களை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் மலையாள நடிகைகள் அவர்களது ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
நடிகைகளின் ஓணம் க்ளிக்ஸ்-ஐ இப்பதிவில் பார்க்கலாம் வாங்க:
கேரளா நடிகை பாவனா அழகான அனார்கலி உடையில் ஜொலிக்கிறார்.
மாளவிகா மோகனன் அழகிய ட்ரான்ஸ்பரண்ட் Saree ஓணம் க்ளிக்
கௌரி கிஷனின் மகிழ்ச்சியான ஓணம் க்ளிக்

ஓவியாவில் ஓணம் செல்ஃபி
ரம்யா நம்பீசனின் சிம்பிள் ஓணம் க்ளிக்

நடிகை அனுமோலின் தங்க நிற புடவையில் ஓணம் க்ளிக்,அபர்னா தாஸின் ஓணம் க்ளிக்,சம்யுக்தாவின் கேஷுவல் ஓணம் க்ளிக் அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 29 முதலே ஓணம் பண்டிகையின் கொண்டாட்டம் தொடங்கியது. கேரளா மற்றும் தமிழக தெற்கு பகுதியில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஓணத்தின் முக்கியமான நாளான திரு ஓணம் நாளை நடைப்பெற இருக்கிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் லோகா, ஓடு குதிரா சாடும் குதிரா, ஹிருதயபூர்வம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அதில் லோகா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

இன்று கேரளம் சுற்றுலா துறை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைப்பெற்றது. அதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் நடிகர் ரவி மோகன் மற்றும் பசில் ஜோசப் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
- இந்தாண்டு ஓணம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல கேரளாவில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் திருவனந்தபுரம் சட்டமன்ற மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேடையில் நடனமாடி கொண்டிருந்த சட்டமன்ற ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓணம் கொண்டாட்டத்தின் போது துணை நூலகர் வி. ஜுனைஸ் (46) நடனமாடும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஜுனைஸ் வயநாட்டின் பத்தேரியைச் சேர்ந்தவர். ஜுனைஸ் மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
- கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கேரளாவில் நடப்பாண்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகள் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 5 லட்சத்து 87 ஆயிரத்து 691 பேர், நல வாழ்வு மையங்களில் வாழும் 20 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த ஆண்டு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில் தேயிலைத்தூள், சிறுபருப்பு, சேமியா பாயாசம் மிக்ஸ், நெய், முந்திரி பருப்பு, தேங்காய் எண்ணெய், சாம்பார் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, துவரம் பருப்பு, சிறுபயறு மற்றும் உப்பு ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும்.
ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ரூ.32 கோடி முன்பணமாக சப்ளை கோ நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரியின் அறிவிப்பை தொடர்ந்து ஓணம் பரிசு தொகுப்பு விரைவில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு, கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நடப்பாண்டில் நிதி நெருக்கடி காரணமாக 6 லட்சத்து 7 ஆயிரத்து 691 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 17 பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது உலர் அரிசி, சர்க்கரை வரட்டி, சீனி, ஏலக்காய் ஆகிய 4 பொருட்கள் நீக்கப்பட்டு, 13 பொருட்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கேரள மாநிலத்தில் போலீசார் பலர் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
- போலீஸ் சீருடையணிந்து கொண்டு வீடியோ எடுத்து வெளியிடுவதால், அது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்:
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் பலர், அதில் தாங்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலர் அதிக லைக்குகள் வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள்.
அதேபோலத்தான் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா போலீஸ் நிலையத்தில் போலீசார் அனைவரும்சேர்ந்து கறிவிருந்து தயாரித்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. கறிவிருந்துக்கு தேவையான பொருட்களை ஒவ்வொரு இடத்திற்கும் போலீஸ் ஜூப்பில் சென்று வாங்குவது, அனைவரும் சேர்ந்து சமையல் வேலையை செய்வது, பின்பு சமைத்த உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, ஒருவருக்கு ஒருவர் ஊட்டுவது என அனைத்தையும் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தனர்.
அந்த வீடியோ பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்தாலும், பணி நேரத்தில் போலீஸ் சீருடையில், போலீஸ் நிலையத்தில் வைத்து அனைவரும் சேர்ந்து கறிவிருந்து தயாரித்து சாப்பிட்ட விவகாரம் பிரச்சனையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அந்த போலீஸ் நிலைய போலீசாருக்கு ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அந்த சர்ச்சை வீடியோ விவகாரம் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே, போலீசார் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில், போலீஸ் நிலையத்தில் போலீசார் வண்ண உடையணிந்து ஆடிப்பாடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் போலீசார் பலர் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவை டிரெண்டிங் ஆகிவிடுவதால் அடிக்கடி வீடியோக்களை பதிவிடுகிறார்கள். போலீஸ் சீருடையணிந்து கொண்டு வீடியோ எடுத்து வெளியிடுவதால், அது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- விழாவில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி உற்சாகமாக கொண்டாடினார்கள்.
- கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
தேனி:
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் ஓணம் பண்டிகை வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி, பாயாசம் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், டாக்டர் சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், சயின்ஸ் அண்டு ஹிமானீட்டீஸ் துறையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சித்ரா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தினர்.
- திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
- விழாவையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் வரவேற்றார். ஆசிரியர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இரு அணிகளாக பிரிந்து மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய நடனம் ஆடினார்கள். ஓணம் பண்டிகையின் சிறப்புகளை உரையாகவும், விழாவினை கொண்டாடு வதற்கான காரணத்தை குறுநாடகமாகவும் தனது பேச்சாற்றல் மற்றும் நடிப்பாற்றல் மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாணவிகளின் நடனம் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாணவிகள் அத்தப்பூ கோலம் போட்டு குத்துவிளக்கு ஏற்றி மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.
- முதல்வர் முனைவர் நா. ராஜேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
உடுமலை :
உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாடப்பட்டது .கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் கல்லூரி செயலாளர் சுமதி கிருஷ்ண பிரசாத், கல்லூரி ஆலோசகர் மற்றும் இயக்குனர் ஜெ.மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் முனைவர் நா. ராஜேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலம் போட்டு அதில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நடனமாடி மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர். இதில் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டு ஓண திருவிழாவை கொண்டாடினர். இதற்கான ஆலோசனை மற்றும் பணிகளை கல்லூரி பேரவை ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை இணை பேராசிரியருமான டி.வி. பானுமதி மற்றும் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளரும் தமிழ் துறை தலைவருமான முனைவர் சுமதி, பேரவை உறுப்பினர்களும் செய்து இருந்தனர். கல்லூரி பேரவை மாணவ தலைவர், எம் தர்ஷினி , செயலாளர் மற்றும் துணைச்செயலாளர் விழாவிற்க்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
- தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து மகாபலி சக்ரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர்.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலை அருகில் அமைந்துள்ள செந்தூர் கார்டன் பகுதியில் வசிக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
உடுமலை பகுதிகளில் வசிக்கும், கேரள மாநில மக்கள், வீடுகளின் முன் பூக்களால் அத்தப்பூ கோலம் வரைந்து, தீபம் ஏற்றியும், 21 வகையானஉணவுகள் தயாரித்து, இலைகளில் பரிமாறி, மகாபலி சக்ரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர்.உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறியும், பாரம்பரிய விளையாட்டுக்களுடன் உற்சாகமாக கொண்டாடினர்.
- வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
- கேரள மங்கையர்களாக மாணவிகளின் திருவாதிரை நடனம் நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. அறக்கட்டளை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலவிதமான வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
விழாவில் மாணவர்களுக்கு பகவான் மகாவிஷ்ணு பிறந்தநாளின் சிறப்பையும், வாமனர் அவதரித்த தினமான ஓணத்தின் சிறப்பினையும் மாணவி ரேஷ்மா எடுத்துரைத்தார். கேரள மங்கையர்களாக மாணவிகளின் திருவாதிரை நடனம் நடைபெற்றது. குழந்தைகள் பலர் கேரள பாரம்பரிய உடை அணிந்து மேடையை அலங்கரித்தனர். மக்கள் செழிப்பாக வளமோடு வாழ்கிறார்களா என்பதை காண சிறப்பு தோற்றத்துடன் மகாபலி சக்கரவர்த்தியின் வருகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மழை வெள்ளம் காரணமாக கேரள மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து வந்தாலும், கேரளாவில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.
வழக்கமாக ஆகஸ்டு மாதம் தொடங்கிவிட்டாலே கேரளாவில் ஓணக் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி விடும். ஆனால் இந்த மாதம் மழை வெளுத்து வாங்கியதால் அங்கு ஓணக் கொண்டாட்டத்திற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
கேரள அரசும் இந்த ஆண்டு ஓண விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதற்காக நடக்கும் ஊர்வலம், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும் கூறியுள்ளது.
இதுபோல ஏராளமான மக்கள் ஓணக் கொண்டாட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை. முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தங்களுக்குள் ஓண வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்து கொண்டனர். மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவையும் பகிர்ந்து உண்டனர்.
கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணக்கொண்டாட்டம் களை கட்டும். தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணத்தையொட்டி அத்தப்பூக்கோலம், ஓண ஊஞ்சல் ஆட்டம் போன்றவை நடைபெறும்.
புலியாட்டம், செண்டை மேளங்களும், புத்தாடை அணிந்து வலம் வரும் பெண்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும்.
இதனை பார்த்து ரசிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் ஓணப்பண்டிகை நாளில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வருவது வழக்கம்.
ஆனால் ஓணப்பண்டிகை தினமான இன்று பத்மநாபபுரம் அரண்மனை களை இழந்து காணப்பட்டது. கேரள அரசே ஓண விழாக்களை ரத்து செய்து விட்டதால் இங்குள்ள அதிகாரிகளும் ஓணக் கொண்டாட்டங்கள் எதற்கும் ஏற்பாடு செய்யவில்லை.
இதனால் இன்று பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த சுற்றுலா பயணிகளும், பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #KeralaFloods #Onamfestival






