search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள வெள்ளத்தில் பாழடைந்த ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்யும் ஹூவாய்
    X

    கேரள வெள்ளத்தில் பாழடைந்த ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்யும் ஹூவாய்

    கேரள மழை வெள்ளத்தில் பாழடைந்து போன ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்து வழங்குவதாக ஹூவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. #KeralaFloodRescue

     

    கேரளாவில் பலத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு போன்றவை அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்து இருக்கிறது. இந்நிலையில், வெள்ள பாதிப்பில் இருந்து அம்மாநில மக்களை மீட்க பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

    பொதுமக்கள், அண்டை மாநிலங்களை சேரந்த அரசு, அரசியல் கட்சிகள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், டெக் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண பொருட்கள், நிதி உதவி கேரள மக்களுக்கு வழங்கப்படுகிறது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், பல லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

    அந்த வகையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பாழாகிய ஸ்மார்ட்போன்களை ஹூவாய் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குவதாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுக்க இயங்கி வரும் சர்வீஸ் மையங்களில் உதிரி பாகங்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்ப குழுக்களை பிரத்யேகமாக நியமித்துள்ளது.


    கோப்பு படம்

    இதன்மூலம் மக்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வேகமாக சரி செய்து வழங்க முடியும் என தெரிகிறது. 

    ''கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஹூவாய் வாடிக்கையாளர் சேவை மைய குழுக்கள் முழு வீச்சில் இயங்கும் என ஹவாய் இந்தியா வணிக வியாபாரங்கள் பிரிவு தலைவர் ஆலென் வாங் தெரிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக சரி செய்து தரப்படும். பலதரப்பு உதவிகள் தொடர்ந்து வருவதால், கேரளா விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு விடும்," என அவர் மேலும் தெரிவித்தார். 

    வெள்ளதத்தில் பாதிக்கப்பட்ட தங்களது சாதனங்கள் சரி செய்ய வாடிக்கையாளர்கள் ஹூவாயின் இலவச அழைப்பு எண் - 1800-209-6555 தொடர்பு கொண்டு இலவசமாக சரி செய்து கொள்ளலாம். இலவச சர்வீஸ்கள் ஆகஸ்டு 31-ம் தேதி வரை கிடைக்கும் என்றும் கேரளாவில் வசிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்பெற முடியும். #KeralaFloodRescue #KeralaFloods2018
    Next Story
    ×