search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jharkhand"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெல்பா காட் வனப்பகுதியில் நக்சல்களுடன் நடைபெற்ற சண்டையில் 3 நக்சல்கள், மற்றும் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பலியாகினர். #JharkhandEncounter
    கிரிதிக்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்திற்குட்பட்ட பெல்பா காட் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. சிறிது நேரம் தொடர்ந்த இந்த துப்பாக்கி சண்டையில், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 நக்சல்கள் பலியாகினர். அவர்களிடமிருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் போடப்பயன்படும் 3 மேகசின்கள், 4 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  #JharkhandEncounter
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று சிறப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஐந்து நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Jharkhandnaxaldead
    ராஞ்சி:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட சிறப்பு தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் குந்தி மற்றும் மேற்கு சிங்பம் மாவட்ட எல்லையில் இன்று காலை 6.20 மணி அளவில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் உள்ளூர் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த ஐந்து நக்சலைட்களை சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களிடமிருந்து ஏகே47 மற்றும் ஏ303 ரக துப்பாக்கிகள், 5 பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. #Jharkhandnaxaldead
    ஜார்க்கண்டில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் இன்று சுட்டுக் கொல்லப்பட்டான். #NaxalKilled
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ளூர் போலீசாரும், மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் டலா டா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிட இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய டலா டா தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

    நக்சலைட்களின் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #NaxalKilled
    ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Rationcard #Ration

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள மகாயத்தினார் கிராமத்தை சேர்ந்தவர் காலேஸ்வர் சோரன்(45).

    இவர் சாப்பிட உணவின்றி பட்டினியாக இருந்ததால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து உண்மை கண்டறியும் குழுவினர் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது, அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரே‌ஷன் பொருட்கள் கிடைக்காததால் பட்டினி கிடந்து இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    காலேஸ்வர் சோரன் தனது ஆதார்கார்டு நம்பரை ரே‌ஷன் கார்டில் சேர்க்காததால் கடந்த 2016-ம் ஆண்டு அவரது ரே‌ஷன் கார்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரது குடும்பத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை.

     


    இதனால் தனது குடும்பத்துக்கு சொந்தமான விவசாய விளை நிலங்களை அடமானம் வைத்தார். ஒரு ஜோடி காளை மாடுகளை விற்று செலவு செய்தார். அவரது 2 மகன்களும் ராஜஸ்தான் சென்று கடந்த 2 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகின்றனர்.

    தனது தந்தை இறந்ததை அறிந்தும் கூட அவர்களால் வர முடியவில்லை. இந்த தகவலை உண்மை கண்டறியும் குழுவை சேர்ந்த சிராஜ்தத்தா தெரிவித்தார்.

    இவரை போன்று மேலும் ஒரு பெண் பட்டினியால் மரணம் அடைந்து இருக்கிறார். அவரது பெயர் சீதா தேவி (75). இவர் இதே பகுதியில் உள்ள கும்ளா என்ற இடத்தை சேர்ந்தவர்.

    காலேஸ்வர் சோரனும், சீதா தேவியும் கடந்த 25 நாட்களில் பட்டினியால் மரணம் அடைந்துள்ளனர். ஜார்கண்டில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 17 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக உணவு உரிமை பிரசார இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.#Rationcard #Ration

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதியை எட்டின.

    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஜார்கண்ட் அணி, மராட்டியத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த மராட்டிய அணி, ஜார்கண்ட் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ரோஹித் மோத்வானி 52 ரன்னும், கேப்டன் ராகுல் திரிபாதி 47 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜார்கண்ட் அணி தரப்பில் அன்குல் ராய் 4 விக்கெட்டும், ராகுல் சுக்லா 3 விக்கெட்டும், வருண் ஆரோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலக்கை நோக்கி ஜார்கண்ட் அணி பேட்டிங் செய்கையில் 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி ஜார்கண்ட் அணிக்கு 34 ஓவர்களில் 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜார்கண்ட் அணி 32.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. ஆனந்த் சிங் 12 ரன்னிலும், கேப்டன் இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஷஷீம் ரதோர் 53 ரன்னுடனும், சவுரப் திவாரி 29 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பெங்களூருவில் நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஐதராபாத்-ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சந்தீப் 96 ரன்கள் எடுத்தார். கேப்டன் அம்பத்தி ராயுடு 28 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆனார். பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆந்திரா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஆந்திர அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹனுமா விஹாரி 95 ரன்னும், ரிக்கி புய் 52 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூருவில் நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் டெல்லி-ஜார்கண்ட் அணிகள் சந்திக்கின்றன. #VijayHazareTrophy
    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முதியவர் 5 ஆண்டுகள் கழித்து மகனிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் சட்டை போடாமல், லுங்கியுடன் இருந்ததை பார்த்து அவரிடம் நேரில் சென்று விசாரித்தார். மேலும் முதியவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரை அழைத்து முதியவர் குறித்து விவரங்கள் சேகரிக்க உத்தரவிட்டார்.

    முதியவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசினார். ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் எழுதியும் காண்பித்தார். அதில் அவர் பெயர் அலோசியல் பர்னபாஸ்டோபோ எனவும், அவரது சொந்த மாநிலம் ஜார்க்கண்ட் எனவும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினரை கண்டு பிடிப்பதற்காகவும், தொடர்பு கொள்வதற்காகவும் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் மூலமாக அந்த முதியவர், டேனியல் மெமோரியல் நேசம் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள முதியவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு வீடியோ அழைப்பு மூலம் முதியவர் அடையாளம் காணப்பட்டு அங்கிருந்து அவரது மகனை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் முதியவரை அவரது மகனிடம் கலெக்டர் கந்தசாமி ஒப்படைத்தார்.

    மேலும் முதியவருக்கு கலெக்டர், புதிய துணி வாங்கி கொடுத்து அதனை முதியவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

    வயது முதிர்வின் காரணமாக சில நேரங்களில் நினைவு இழந்ததால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். தனது தந்தையை கண்ட மகன் கண்கலங்கி, கலெக்டருக்கு நன்றி தெரிவித்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்து சென்றார்.

    அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா தா.டார்த்தி, நேசம் முதியோர் இல்ல பொறுப்பாளர் குளோரி ஆகியோர் உடனிருந்தனர். 
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்பியின் காலை தொண்டர் ஒருவர் கழுவி அந்த நீரைக் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #NishikantDubey
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோடா தொகுதியின் பாஜக எம்.பி. நிசிகாந்த் துபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிசிகாந்த் துபே தனது உரையை முடித்து மேடையில் அமர்ந்தபோது, பாஜக தொண்டர் ஒருவர், அவரது கால்களை தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    இதனைப் பார்த்த பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். தொண்டரை தன் கால்களை கழுவ அனுமதித்தது சரியல்ல என்றும் பலர் கூறினர். பாஜக தலைவர்களின் ஆணவம் உச்சத்தை எட்டியிருப்பதாக காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.


    ஆனால் நடந்த சம்பவத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார் நிசிகாந்த் துபே. தனது ஆதரவாளர்கள் தன் மீது வைத்துள்ள அன்பை எதிர்ப்பாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். ஒருநாள் அந்த தொண்டரின் பாதங்களை கழுவும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். #NishikantDubey 
    ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி, அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Jharkhand #PopularFrontofIndia
    ராஞ்சி:

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது ஜார்கண்ட் மாநில அரசு தடை விதித்திருந்தது. இந்த அமைப்பின் முழு செயல்பாடுகளையும் முடக்கும் விதமாக இருந்த இந்த தடையை எதிர்த்து ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய முறையான வழிமுறைகளை மாநில அரசு பின்பற்றவில்லை என தெரிவித்ததுடன், அந்த அமைப்பின் மீதான தடையையும் விலக்கி உத்தரவிட்டுள்ளது. #Jharkhand #PopularFrontofIndia
    மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MidDayMeal #Tamilnadu #Jharkhand #SupremeCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நாடு முழுவதும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால், முறையான கண்காணிப்பு இல்லாததால், உணவு, நச்சுத்தன்மையாக மாறுவதுடன் பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்படுகின்றன” என்று கூறப்பட்டு இருந்தது.



    அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதிய உணவு திட்டத்தால் பலன் அடையும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் தங்களது இணையதளத்தில் 3 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்நிலையில், நேற்று இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் உத்தரவுப்படி மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டு சட்ட பணிகள் ஆணையகத்திடம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர்.

    புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களும் இத்தகவல்களை வெளியிடாதபோதிலும், இப்போதைக்கு அவற்றுக்கு அபராதம் விதிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறினர். அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #MidDayMeal #Tamilnadu #Jharkhand #SupremeCourt
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Encounter
    தும்கா:

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

    இந்த என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Encounter 
    ஜார்கண்ட் மாநிலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். #Jharkhand #FamilySuicide
    ராஞ்சி:

    இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலம் ஹசரிபாக் மாவட்டத்தில் உள்ள போடோம் பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து பிணமாக கிடந்தனர். இவர்களில் 3 பேர் வீட்டின் உள்ள அறையில் தூக்குப்போட்டும், அடுத்த பிளாட்டில் 2 குழந்தைகள் ரத்த வெள்ளத்திலும் பிணமாக கிடந்தனர். 6-வது நபர் மாடியில் இருந்து குதித்தும் உயிரை மாய்த்து உள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், ‘6 பேர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் அவர்கள் நடத்திய மளிகைக்கடையில் ரூ.50 லட்சம் கடன் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது’ என்றார்.   #Jharkhand #FamilySuicide  #tamilnews
    கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. #KailashMansarovarYatra
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி ரகுபர் தாஸ் தலைமை தாங்கினார். அப்போது கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், முதல் மந்திரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுற்றுலா துறையிடம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும்.

    அந்த படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றார். #KailashMansarovarYatra
    ×