என் மலர்

  நீங்கள் தேடியது "Popular Front of India"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  • பாப்புலர் பிரண்டு அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

  திருவனந்தபுரம்:

  இந்தியாவில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்டு அமைப்புக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது.

  இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது.

  இதில் பல முக்கிய தஸ்தாவேஜூகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் பாப்புலர் பிரண்டு அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.

  என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடந்த 23-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது பல இடங்களில் வன்முறையும் மூண்டது.

  இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் பாப்புலர் பிரண்டு அமைப்பின் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். நேற்று கோழிக்கோட்டில் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

  இதற்கிடையே தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்டு அமைப்பு நிர்வாகிகளின் காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

  அவர்களுக்கு வருகிற 20-ந் தேதி வரை 21 நாட்கள் காவலை நீட்டித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
  • புதுவையிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  புதுச்சேரி:

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு அதிரடியாக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

  இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் புதுவையிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து புதுவை அரசின் தலைமை செயலர் ராஜூவர்மா நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

  புதுவை மாநிலத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பு மற்றும் தொடர்புடைய ரீஹேப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு, நேஷனல் உமன்ஸ் பிரண்ட், ஜூனியர்பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேசன் மற்றும் ரீஹேப் பவுண்டேசன் கேரளா ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இதனை அமல்படுத்த மாவட்ட கலெக்டர்கள், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
  • சென்னை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

  சென்னை, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.

  இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

  இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது.

  இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர்.

  இந்த 2 சோதனைகளின்போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. இதனை தொடரந்து, பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

  இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. அந்த வகையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்கள் முழு உஷார் நிலையில் இருக்கவும், சென்னை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.

  இந்த நிலையில் பிஎப்ஐ அமைப்பை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணையை வெளியிட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பி.எப்.ஐ. இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.
  • பி.எப்.ஐ. பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் கைது செய்யப்பட்டதாக தகவல்.

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் அந்த அமைப்புகள் செயல்பட 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

  இதன் தொடர்ச்சியாக, அந்த அமைப்பின் இணையதளம், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும் முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையை அடுத்து கேரளாவில் பி.எப்.ஐ. அமைப்பை கலைத்து விட்டதாக அதன் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.

  இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த நாட்டின் சட்டத்தின்படி செயல்படுகிற குடிமக்களாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவை தங்கள் அமைப்பு ஏற்றுக்கொள்கிறது என்றும், பி.எப்.ஐ. கலைக்கப்பட்டு விட்டது என அதன் உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

  மேலும் சட்டரீதியாக இதை  எதிர்கொள்ள உள்ளதாகவும் அப்துல் சத்தார் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவர், கருநாகப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமைப்பின் நிர்வாகிகள் இல்லங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை செய்தனர்.
  • 250க்கும் மேற்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

  திருப்பூர் :

  நாடு முழுவதும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் இல்லங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 250க்கும் மேற்பட்ட அந்த அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசு ஐந்தாண்டு கால தடை விதித்துள்ளது.

  இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்ததை கண்டித்தும் உடனடியாக அந்த தடையை ரத்து செய்ய கோரி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 30 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  இதேபோல் காங்கேயம் ரோடு சி.டி.சி கார்னர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அங்கு பாதுகாப்பு நின்ற போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
  • விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

  திருப்பூர் :

  பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

  இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவை உக்கடத்தில் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஊர்வலமாக கோட்டை மேடு எச்.எம்.வி.ஆர். வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

  கோவை:

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடத்தில் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள பேக்கரி முன்பு 150-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர்.

  இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கோட்டை மேடு எச்.எம்.வி.ஆர். வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அங்கு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

  அப்போது அவர்கள் கூறும்போது, இந்த அமைப்பு கொரோனா காலத்தில் எங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து கொடுத்துள்ளனர். எனவே இந்த அமைப்புக்கு தடை விதிக்க கூடாது என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  மாநகர துணை கமிஷனர் மாதவன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • கவச உடை அணிந்த அதிரடிப்படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

  நெல்லை:

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

  100 போலீசார்

  நெல்லை மாவட்டத்திலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  நெல்லை மேலப்பாளையத்தில் மாநகர கிழக்கு பகுதி துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  கவச உடை அணிந்த அதிரடிப் படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

  இதேபோல் பத்தமடை, ஏர்வாடி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் ரோந்து சென்றும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பாப்புலர் பிரண்ட் அமைப்பு தடை செய்யப்பட்டது குறித்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையும் இணைந்து சோதனை நடத்தின.
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

  பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பி.எப்.ஐ.க்கு (பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா, உள்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த 22ந் தேதி சோதனையில் ஈடுபட்டது.

  தமிழகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையும் இணைந்து சோதனை நடத்தின.

  இந்த சோதனைகளின்போது பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டனர்.

  பி.எப்.ஐ.(பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) அமைப்பு இந்தியாவில் செயல்பட ஐந்து ஆண்டு காலம் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த தடை உத்தரவு அதன் துணை அமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

  பிஎஃப்ஐயின் டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமான என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலைநிறுத்தம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும்.
  • போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  கொச்சி:

  நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

  மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்து இருக்கும் நிலையில், இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து ஐகோர்ட்டு விசாரித்தது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் போராட்டம் சட்ட விரோதமானது எனவும், அரசியல்சாசனத்துக்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவித்தது.

  வேலைநிறுத்தம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதை மீறிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் மற்றும் மாநிலக்குழுவே பொறுப்பு என குறிப்பிட்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  புதுடெல்லி:

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி திட்டங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து நேற்று 15 மாநிலங்களில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

  தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் இணைந்து நடத்திய இந்த சோதனை நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது.

  இந்த சோதனையை தொடர்ந்து 106 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 11 பேர் கைதாகி இருக்கிறார்கள். இவர்களை டெல்லியில் வைத்து தீவிர விசாரணை நடத்த என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

  இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

  இதற்கிடையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடப்பட்டு உள்ளது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

  ஏற்கனவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அமைப்பு செய்து வரும் சட்ட விரோத செயல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தொகுத்து உள்ளனர்.

  இவற்றின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை நாடு முழுவதும் தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு வளைகுடா நாடுகளில் நெட் வொர்க் அமைத்து மிகப்பெரிய அளவில் பல கோடி ரூபாய் நிதி திரட்டி இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர். இதற்கான ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக 2009-ம் ஆண்டு முதல் வளைகுடா நாடுகளில் இருந்து 60 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பெறப்பட்டுள்ளது.

  அதுபோல இந்திய மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பின் மூலம் ரூ.58 கோடிக்கு மேல் பணம் பெறப்பட்டுள்ளது. 23 வங்கி கணக்குகளில் இவை கையாளப்பட்டு உள்ளன. இவை அனைத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளின் கணக்குகளில் இருக்கும் பணம் பிறகு தனி நபர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

  சதி திட்டத்தின் அடிப்படையில் இந்த பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். யார், யாருக்கு பணம் சென்றிருக்கிறது என்ற தகவல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகரித்து உள்ளனர்.

  நாடு முழுவதும் சுமார் 2,600 பேருக்கு இந்த வகையில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் பா.ஜனதா ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

  இதற்காக வளைகுடா நாடுகளில் பயிற்சியும் அளிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. அபுதாபி, குவைத், ஜெட்டா நகரங்களில் சுமார் 2 ஆயிரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சி பெற்றதாக அமலாக்கத்துறை கூறி உள்ளது.

  அமலாக்கத்துறை போல தேசிய புலனாய்வு முகமை அமைப்பும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து உள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் உறுப்பினராக இருப்பவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் தீவிரவாத முகாம்களை நடத்தியதாக என்.ஐ.ஏ. குற்றம்சாட்டி உள்ளது. பிரதமர் மோடி உயிருக்கு குறி வைத்ததாகவும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

  தமிழ்நாடு, கர்நாடகாவில் நடந்த சில கொலைகளுக்கு இந்த அமைப்பை சேர்ந்தவர்களே காரணம் என்றும் என்.ஐ.ஏ. கூறி உள்ளது. சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த கலவரத்துக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர்களே மூலக்காரணம் என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.

  கேரளாவில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை கையாளுவது பற்றி மிகப்பெரிய பயிற்சி அளிக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது. கன்னூர் மாவட்டத்தில் ஆயுதப்பயிற்சி நடந்ததாக கூறி உள்ளது.

  இப்படி அமலாக்கத்துறையும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. இவற்றை காரணம் காட்டி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print