search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அரசின் தடையை எதிர்த்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
    X

    மத்திய அரசின் தடையை எதிர்த்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

    • சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
    • சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

    சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல் அதற்கு நிதியளித்தல் உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இந்த அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு மீது விசாரணை இன்று நடக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×