விருதுநகரில் பாப்புலர் பிரண்ட் அலுவலகத்திற்கு சீல்- அதிகாரிகள் நடவடிக்கை

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. விருதுநகரில் பாவாளி ரோட்டில் உள்ள கட்டிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
விருதுநகரில் பாப்புலர் பிரண்ட் அலுவலகத்திற்கு சீல்- அதிகாரிகள் நடவடிக்கை
Published on

விருதுநகர்:

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் முக்கிய நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விருதுநகரில் பாவாளி ரோட்டில் உள்ள கட்டிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை காரணமாக நிர்வாகிகள் காலி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ராஜ சுலோச்சனா ஆகியோர் அந்த அலுவலகத்தில் ஆய்வு நடத்தி சீல் வைத்தனர்.

விருதுநகர் பாவாளி ரோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com