search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீக்கம்"

    • டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன
    • விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

    29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடான உகாண்டா முதல் முறையாக அறிமுகமாகிறது. இந்நிலையில் உலக கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வருகிறது. இதனால், விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

    • கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.
    • பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் கோட்டாலி பகுதியை சேர்ந்தவர் சாஜிமோன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.

    அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேறு ஒரு நபர் ஈடுபட்டது போன்று, வழக்கை திசை திருப்பவும் முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போனது. சாஜிமோன் மீதான பாலியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். மேலும் கோட்டாலி பிரிவு கிளைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சாஜிமோன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஊழியராக இருந்துவரும் பெண் ஒருவரை நிர்வாண படம் எடுத்த வழக்கில் சிக்கினார்.

    இதையடுத்து அவர் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நோயாளியுடன் செல்பி எடுத்து முகநூலில் வெளியீடு: அரியலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பணி நீக்கம்
    • டாக்டர்கள், நர்சுகள் மீதும் நடவடிக்கை பாய்கிறது

    அரியலூர்,  

    பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மருத்துவமனையின் ஆபரேசன் அறையில், அறைகுறை ஆடையுடன் படுத்திருந்த நோயாளியுடன், கையில் கத்தரிக்கோல் வைத்துக்கொண்டு செல்பி எடுத்தார்.

    அப்போது ஒரு டாக்டர், 2 நர்சுகளும் உடன் இருந்தனர். பின்னர் அந்த புகைப்படத்தை மணிகண்டன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதர சமூக வலைதளங்களிலும் அதை வெளியிட்டார்.

    இதை உயர் அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் ஆனந்தவேல், மருத்துவக்கல்லூரி டீன் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

    அப்போது மணிகண்டன், அவரது மனைவி கேட்டுக் கொண்டதின் பேரில், மருத்துவமனை ஆபரேசன் அறையில் பணியில் இருப்பதை போட்டோ எடுத்து அனுப்பியதாகவும், இது இணையத்தில் எப்படி வைரலானது என எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மணிகண்டனை பணி நீக்கம் செய்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். மணிகண்டன் போட்டோ எடுத்தபோது பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரது மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டீன் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • உதயநிதி மகனுக்கு போஸ்டர் ஒட்டிய தி.மு.க.நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.
    • பொது செயலாளர் துரைமுருகன் அறிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க. செ. மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி போட்டோவுடன்

    எங்களின்

    எதிர்காலமே

    இன்பநிதி பாசறை செப்டம்பர் -24 மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இது தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் பொது செயலாளர் துரைமுருகன். கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிவிப்பில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    • அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
    • அ.ம.மு.க. நிர்வாகிகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க.வின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் நடந்து செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளராக இருந்த மா.சேகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.

    அ.ம.மு.க. நிர்வாகிகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
    • இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 ேபரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆயுதப்படை போலீசார் யுவராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான முகாம் நடந்தது.இதைத் தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    6 சட்டமன்ற தொகுதி களிலும் 35 ஆயிரத்து 112 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2289 ஆண் வாக்காளர்களும் 3137 பெண் வாக்காளர்கள் 53 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5479 வாக்காள ர்கள் நீக்கப் பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 3204 ஆண் வாக்காளர்களும் 3785 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6989 வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளனர். குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 3,751 ஆண் வாக்காளர்களும் 4,729 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8483 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

    பத்மநாபபுரம் தொகுதியில் 1524 ஆண் வாக்காளர்களும் 2161பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் 4 என மொத்தம் 3689 பேர் நீக்கப்பட்டுள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 1445 ஆண் வாக்காளர்களும் 2258பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3703 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 2796 ஆண் வாக்காளர்களும் 3973 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 769பேர் நீக்கப்பட்டுள்ளனர். 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 15009 ஆண் வாக்காளர் களும் 20043 பெண் வாக்காளர்களும் 60 இதர வாக்காளர்கள் என மொத்தம் 35112 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதிதாக வாக்காளர் பட்டியலில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 13280 ஆண் வாக்காளர்களும் 17621 பெண் வாக்காளர்களும் 16 இதர வாக்காளர்கள் என மொத்தம் 30917 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் 5788 வாக்காளர்களும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 5164 வாக்காளர்களும் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 6240வாக்காளர்களும் பத்நாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 4595 வாக் காளர்களும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 3714 வாக்காளர்களும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 5416 வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
    • அங்கு மரங்களை வெட்டி விற்பனை செய்ததற்காக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா ரூ.2.18 லட்சம் அபராதம் விதித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. கல்லூரியின் முதல்வராக பங்காரு (பொறுப்பு) இருந்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

    மரங்களை வெட்டி விற்பனை செய்ததற்காக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா ரூ.2.18 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் அரசியல் கட்சியினர் அவரைப் பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம், கல்லூரி முதல்வர் பங்காருவை உயர்கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    • மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
    • மேம்பாட்டு ஆணைய செயலாளர் நடவடிக்கை

    பெரம்பலூர்:

    விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டா்.

    இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் கல்யாணி, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியை சந்தித்து நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி உள் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் தற்காப்பு பயிற்சி (டேக்வாண்டோ) அளித்துவரும் பயிற்றுனர் தர்மராஜன் என்பவர் மதுபோதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷிடம் புகார் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பயிற்றுனர் மற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய சுரேஷை கைது செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில், விளையாட்டு விடுதி மாணவிகள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர் உத்தரவிட்டார்.

    • மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்
    • மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

    திருச்சி:

    அந்தநல்லூர் ஒன்றியம் , மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் வீட்டு வரி , குடிநீர் வரி , தொழில் வரி மற்றும் பலவகை வரி தொகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது . இதுகுறித்து உறுப்பினர்கள் கலெகடருக்கு அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கலெக்டர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார் அதில் , மல்லியம்பத்து ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து செலவுச் சீட்டுகள் இல்லாமலும் , உரிய ஆவணங்கள் இன்றியும் , போலியான ரசீதுகள் மூலம் ரூ l.74 லட்சம் கையாடல் செய்து முறைகேடு நடந்துள்ளது.

    ஊராட்சி தலைவராக பதவி ஏற்ற போது எடுத்த உறுதிமொழியினை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டு உள்ளதால் இக்குறைகளுக்கு விளக்கம் கோரப்படுகிறது. 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 203 ன் கீழ் ஊராட்சி தலைவரின் செக் பவர் பறிக்கப்பட்டது. உரிய விளக்கம் அளிக்காததால் 205 ன் கீழ் ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கு புறம்பானதாகவும் , பொது மக்களுக்கும் பொது நிதிக்கும் அரசு நிதிக்கும் தொடர்ந்து ஊறு விளைவிக்கும் விதமாக அமையும் என்பதால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பொது நலன் கருதியும் திருச்சி மாவட்டம் , அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த மல்லியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவா விகனேஷ்வரன் என்பவரை 1994 ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 , உட்பிரிவு 11 - ன்படி , 15.11.2022 முதல் மலலியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என அந்த கடிதத்தில் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

    • ஆதார் எண் இணைப்பதிலும் வாக்காளர்கள் ஆர்வம்
    • வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் பணி கள் முடிவ டைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், விளவங் கோடு, பத்மநாப புரம், கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், இங்கு மொத்தமாக 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருப்பதாக வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியாகும் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

    மாவட்டத்தில் 1695 வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. பெயர் சேர்த்தல் மட்டுமின்றி நீக்கம் செய்தல் திருத்தம் போன்ற பணிகளும் முகாமில் செய்யப்பட்டன. எனவே பலரும் முகாமில் பங்கேற்றனர்.

    புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆர்வத்துடன் வந்தனர். இதனால் அனைத்து முகாம்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைக்க ஏற்கனவே அறிவு றுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பலரும் ஆதார் எண்ணை இணைத்து வரு கின்றனர். குமரி மாவட் டத்தில் இதுவரை 69 சதவீதம் பேரே வாக்கா ளர் பட்டி யலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்ப திலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நாளை(13-ந் தேதி)யும் இந்த முகாம் நடக்கிறது,

    • 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    • குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தது என கூறி

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் மற்றும் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுண்ணாம்புக்கல் மற்றும் கிராவல் மண் எடுத்து செல்லக்கூடிய லாரிகள் அதிவேகத்தில் செல்வதாகவும், அதிக பாரம் மற்றும் தார்ப்பாய் போடாமல் செல்வதாகவும் தொடர்ந்து வந்த புகாரின் பேரில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் அப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மேலப்பழுவூர் அருகே சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தபோது அதிக பாரம் ஏற்றிக்கொண்டு தார்ப்பாய் போடாமல் வந்தது தெரிய வந்தது. மேலும் சுண்ணாம்புக்கல் எடுத்து செல்வதற்கான உரிய அனுமதி இல்லாததை அறிந்த கோட்டாட்சியர் லாரியை பறிமுதல் செய்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    அதேபோல் பூண்டி கிராமத்தின் வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்ததில், அதிகபாரம் ஏற்றிக்கொண்டு தார்ப்பாய் போடாமல் வந்தது மற்றும் உரிய அனுமதி இல்லாதது தெரியவந்தையடுத்து அந்த லாரியையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இது குறித்து மேலப்பழுவூர் கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் பூண்டி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரிடம் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளுக்கும் அபராதம் விதித்து லாரியை விடுவித்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய அனுமதி இன்றி பாரம் ஏற்றி வந்தது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை என அறிந்த அரியலூர் கோட்டாட்சியர் முறையான புகார் அளிக்காதது, குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தது என கூறி 2 கிராம நிர்வாக அலுவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்

    ×