search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜார்க்கண்ட்"

    • ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
    • இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்

    ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஜெய்பிரகாஷ் பாய் படேல், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் , ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலம் ஆகியோர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எனக்கு எனது பதவியை பற்றி கவலையில்லை. ஜார்க்கண்டை பாதுகாக்க வேண்டும். அதனால் தான் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    வரும் மக்களவை தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் படேல் நிறுத்தப்படலாம் என்று செல்லப்படுகிறது. 

    • மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

    குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மேற்கு வங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்யும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கூடுதலாக, மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறையின் செயலாளர்களும் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த மாவட்டங்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர்
    • கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    அரசியலில் இருந்து விலகுவதாக டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகளில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

    கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பாஜக எம்.பி கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "பருவ நிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதால், எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.


    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
    • பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் மோதியது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரெயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஜம்தாரா- கர்மாதாண்ட் வழித்தடத்தில் கல்ஜாரியா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    பாகல்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.

    தீ விபத்தால் அச்சமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

    சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, ௧௨ பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
    • "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது.

    இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநில மக்கள்தொகையில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திருட்டு கண்டுபிடிப்பு
    • ஆயுதங்களுடன் நிலக்கரி திருடர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தான்பாத்:

    ஜார்க்கண்ட் மாநிலம் தான்பத் மாவட்டத்தில் நிலக்கரி திருடும் கும்பலை தடுத்தபோது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    பாக்மரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெனிதிஹ் நிலக்கரி சேமிப்பு பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் நிலக்கரியை திருடுவதை பார்த்தனர். அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், நிலக்கரி திருட்டை தடுத்தனர். அப்போது நிலக்கரி திருடர்கள் திடீரென தாக்கத் தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 திருடர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆயுதங்களுடன் நிலக்கரி திருடர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
    • ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

     திருப்பூர்:

    ஆலப்புழா, மங்களூரு ரெயில்கள் புறப்படும், சென்று சேரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தினமும் மாலை 4:05 மணிக்கு கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 5:50 மணிக்கு சென்னை சென்று சேரும். இன்று முதல் இந்த ரெயில் மாலை 3:40 க்கு ஆலப்புழாவில் இருந்து புறப்படும். 20 நிமிடம் முன்பாக காலை 5:30 மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 10:33 க்கே வந்து விடும்.இதுவரை மதியம் 1:30 க்கு மங்களூருவில் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில் (12602) இனி மதியம் 1:55க்கு புறப்படும். சென்னைக்கு மறுநாள் காலை 5:35மணிக்கு பதில் மாலை 6:10மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 10:30மணிக்கு பதிலாக10:45 மணிக்கு வரும்.

    ெரயில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து எர்ணாகுளத்துக்கு நவம்பர் 14, 21, 28ந் தேதி சிறப்பு ெரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக நவம்பர் 17, 24, டிசம்பர் 1ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து ஹட்டியாவுக்கு ெரயில் இயக்கப்படும். இந்த ெரயில் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பயணித்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை கடந்து ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியா சென்று சேர்கிறது. 5 ஏ.சி., 11 படுக்கை வசதி, 3 பொது பெட்டி உள்ளிட்ட 22 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும். ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    கேரள மாநிலம், கோழிக்கோடு - கண்ணனூர் வழித்தடத்தில், தலசேரி - எடக்கோடு இடையே மின்வழித்தடம் சிக்னல் பராமரிப்பு மேலாண்மை பணி நடக்கிறது. இதனால் சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு இயக்கப்படும் ெரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று கோழிக்கோடு வரை மட்டும் இயக்கப்படும். வடகரா, தலச்சேரி, கண்Èர், கண்ணபுரம், பையனூர்,கொடிகுலம், காசர்கோடு வழியாக மங்களூரு செல்லாது. அதே நேரம், மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ெரயில் இயக்கத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பேருந்துகள் முலம் பயணம்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அமைத்துள்ளன. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வரும் நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தன் பெயரில் சோரன் பெற்றதாக அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியது.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றம் என்பதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அம்மாநில ஆளுநரிடம் பா.ஜ.க. மனு கொடுத்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களை ஆளுநர் ரமேஷ் பைஸ் கேட்டிருந்தார். இதையடுத்து சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பான தனது பரிந்துரையை ஜார்க்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும், ஜார்கண்ட் மாநில சட்டசபையை கலைத்து விட்டு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.

    இதனிடையே, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேர முயற்சியில் எதிர்க்கட்சியான பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. ஹவுராவில் கார் ஒன்றில் கட்டுக்கட்டாக பணத்துடன் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிடிப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை' திட்டம் அம்பலமாகி விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

    மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்த்ததுபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் சோரன் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை சோரன் அரசு மேற்கொண்டுள்ளது.

    இதையடுத்து தலைநகர் ராஞ்சியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் லக்கேஜ்களுடன் எம்எல்ஏக்கள் குவிந்தனர். அவர்களுடன் ஹேமந்த் சோரன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இரண்டு பேருந்துகள் மூலம் எம்எல்ஏக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

    குந்தி மாவட்டத்தில் உள்ள லத்ரது அணை பகுதிக்கு அமைச்சர்கள் மற்றும் ஏஎம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சென்ற  காட்சி வெளியானது. அங்குள்ள விருந்தினர் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 


    நாங்கள் வேறு இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும், எங்கு செல்வோம் என தெரியவில்லை என்றும் அமைச்சர் சத்யானந்த் போக்தா தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள் சத்தீஷ்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 49 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மட்டும் 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியில் 18 எம்எல்ஏக்களும், ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜகவிற்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அதற்கு பொறுப்பேற்க அக்கட்சியினர் நியமித்திருக்கும் இருவரின் பெயர்களை பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    தியோகார்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகார் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவ தான் போகிறது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி,  மணி சங்கர் ஐயர் மற்றும் சாம் பிட்ரோடா ஆகிய இரு நபர்களை நியமித்திருக்கிறது. இதில் ஒருவர், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டால், ‘ஆமாம் நடந்து விட்டது, அதற்கென்ன?’ என கேள்வி கேட்கிறார். இவர் தான் குஜராத்தில் தேர்தலின்போது என்னை அவதூறாக பேசினார். இப்போது மீண்டும் என்னை தாக்கி பேசுகிறார்.



    55 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் ஆட்சியில் செய்யமுடியாத முன்னேற்றத்தை, எங்கள் பாஜக ஆட்சி 55 மாதங்களில் செய்து முடித்திருக்கிறது. 5 ஆண்டுகளில் கரை படியாத நேர்மையான ஆட்சியினை பாஜக நடத்தி இருக்கிறது.  மேலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. நான் இதை கோவில் நகரமான தியோகார் பகுதியில் இருந்து கூறுவதை பெருமையாக கருதுகிறேன். 

    இது மட்டுமின்றி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான அரசை நடத்தும் பொறுப்பை தந்துள்ளனர். இதனால் மிகுந்த பெருமைக்குரியவன் ஆகிறேன். உங்கள் காவலாளியான நான் எப்போதும் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவதையே கடமையாக கொண்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    ×