என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்க்கண்ட் பள்ளிக் கல்வித்துறை மந்திரி உடல்நலக் குறைவால் காலமானார்
    X

    ஜார்க்கண்ட் பள்ளிக் கல்வித்துறை மந்திரி உடல்நலக் குறைவால் காலமானார்

    • ஜார்க்கண்ட் கல்வி மந்திரியாக பதவி வகித்து வந்த ராம்தாஸ் சோரன் காலமானார்.
    • அவரது மறைவை ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

    டேராடூன்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் கத்சிலா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்தாஸ் சோரன். மாநில பள்ளி கல்வி மந்திரியாக பதவி வகித்து வந்த ராம்தாஸ் சோரன், சமீபத்தில் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராம்தாஸ் சோரன் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவை ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தினார்.

    இதுதொடர்பாக, ஹேமந்த் சோரன் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இதுபோன்று எங்களை விட்டு விட்டு நீங்கள் இப்படி சென்றிருக்கக் கூடாது என பதிவிட்டுள்ளார். ராம்தாஸ் சோரனின் மகன் சோமேஷ் சோரனும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

    Next Story
    ×