search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JMM"

    • கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி அரசியல் பயணத்தை தொடங்கினார்.
    • டெல்லியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் கலந்து கொண்டார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவரது மனைவி கல்பனா. இவர் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கந்தே சட்டமன்ற தேர்தலுக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட இருக்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.ஏல்.ஏ. சர்பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் கந்தே தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, எம்டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பள்ளி கல்வியை முடித்த அவர், இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படிப்பை புவனேஸ்வரில் உள்ள கல்லூரிகளில் முடித்தார்.

    மார்ச் மாதம் 4-ந்தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தொடக்க தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது கல்பனா தனது அரசியல் பயத்தை தொடங்கினார். அப்போது, 2019-ல் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்ததில் இருந்தே எதிரிகளால் சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஜார்கண்ட் தனது கணவரை சிறையில் தள்ளிய சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார்.

    ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பின் கல்பனா டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    அமலாக்கத்துறை சம்மனை எதிர்கொண்டபோது, ஹேமந்த் சோரன் அவரது மனைவியை முதல்வராக்க முயற்சிக்கிறார் என பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹேமந்த் சோரன் மனைவியை முதல் மந்திரி ஆக்குவதற்கு அண்ணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • 2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன் எனவும் குற்றம் சாட்டினார்.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மீதான நில மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்போது சோரனின் மனைவி கல்பனாவை முதல் மந்திரி ஆக்குவதற்கு ஹேமந்த் சோரனின் அண்ணியான சீதா சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன். வளர்ந்து விட்ட தனது 2 மகள்களையும் ஹேமந்த் சோரன் கண்டு கொள்வதில்லை என சீதா சோரன் குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே, சீதா சோரன் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் சீதா சோரன் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவரை பாஜகவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    • பண மோசடி வழக்கு தொடர்பில் அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது.
    • முதல் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் சம்பாய் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

    அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்தார்.

    இந்த நிலையில் இந்த வருடத்தில ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 3 அல்லது 4 துண்டுகளாக உடையும் உன பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளா்.

    இதுதொடர்பாக நிஷிகாந்த் துபே கூறுகையில் "சோரன் குடும்பம் ஜெயலுக்கு போகும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். சில எம்.எல்.ஏ.-க்கள் தொடர்பில் இருப்பதாகவும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகியவை தங்கள் இருப்புகளை இழந்துவிடும் எனவும் டுவீட் செய்திருந்தேன்.

    நான் தவறாக டுவீட் செய்துள்ளதாக சிலர் நினைக்கின்றனர். எல்லோரும் என்னுடைய டுவீட்டை பாதுகாத்து வைத்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன். ஜார்கண்ட் மோர்ச்சா அல்லது காங்கிரசை பார்க்க முடியாது. 2024-ல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூன்று அல்லது நான்கு துண்டுகளாக உடையும்" என்றார்.

    • கைது நடவடிக்கையை தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
    • இதையடுத்து, சம்பாய் சோரன் முதல் மந்திரியாக நேற்று பதவி ஏற்றுள்ளார்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திவருகிறது.

    பதவி ஏற்றுக்கொண்ட சம்பாய் சோரன் 10 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    இதனால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடத்தமுடியாத வகையில், அவர்கள் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, திங்கட்கிழமை சட்டமன்றம் கூட்டப்பட்டு அன்றைய தினம் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பாய் சோரன் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், திங்கட்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி கோர்ட் அனுமதி

    அளித்து உத்தரவிட்டுள்ளது.

    • ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டமன்ற ஜேஎம்எம் கட்சியின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
    • 43-க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் சம்பாய் சோரன் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து தனக்கு 43 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதரவு கடிதத்தையும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

    அத்துடன் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமைக் கோரினார். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சம்பாய் சோர்ன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இன்னும் 10 நாட்களுக்குள் சம்பாய் சோரன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    ×