என் மலர்tooltip icon

    இந்தியா

    மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரனுக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு
    X

    மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரனுக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு

    • ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் கடந்தாண்டு காலமானார்.
    • ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரான ஷிபு சோரனுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் கடந்தாண்டு காலமானார்.

    81 வயதான ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார். எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் இறக்கும்போது ராஜ்யசபா எம்.பியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×