ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் காலமானார்

81 வயதான ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை 3 முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார்.ஷிபு சோரன் எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் காலமானார்
Published on

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

81 வயதான ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார். எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.

ஷிபு சோரனின் மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் தனது தந்தையின் மரணச் செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். அவரது பதிவில், "அன்பான டிஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com