search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Alliance"

    திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக சமூக வலைத்தளங்களில் போலியான அறிக்கையை பரவ விட்டது தொடர்பாக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், மே 23ம் தேதிக்குள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பெயரில் ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் அந்த அறிக்கை அச்சிடப்பட்டிருந்தது.

    தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கு ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவுடனும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இணைந்து முயற்சி செய்து வருவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.



    ஆனால் இந்த அறிக்கை போலியானது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உடனடியாக டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டது. “தலைவர் கே.எஸ்.அழகிரி பெயரில் போலியான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இதை போன்ற போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த டுவிட்டர் பதிவில் காங்கிரஸ் கூறியிருந்தது.

    அத்துடன், போலி அறிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், தொண்டர்களிடையே குழப்பத்தை  ஏற்படுத்துவதற்காகவும் இதுபோன்ற மோசடி அறிக்கையை பரவ விட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், இந்த போலி தகவலால் மோசமான விளைவுகள் நிகழ்வதற்கு முன் துரிதமாக நடவடிக்கை எடுத்து, போலி அறிக்கையை பரப்பியதன் பின்னணியில் உள்ளவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
    வன்னியர்களை இழிவு படுத்தி பேசிய பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #ramadoss #EzraSargunam #vanniyarissue

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியா என்ற அமைப்பின் பேராயர் எஸ்ரா சற்குணம், வன்னிய சமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார்.

    அதுமட்டுமின்றி, கிழட்டு சிறுத்தையான தாம் சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது என்றும் வன்னியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எஸ்ரா சற்குணத்தின் வார்த்தைகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஒவ்வாதவை; கண்டிக்கத்தக்கவை.

    எஸ்ரா சற்குணம் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மாறாக, உண்மை நிலை அறியாமல் பாட்டாளி மக்கள் கட்சியையோ, வன்னியர்களையோ இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.


    வன்னியர்களை இழிவு படுத்தி பேசியதற்காக அந்த மக்களிடம் எஸ்ரா சற்குணம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ்ரா சற்குணத்தைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    வன்னிய மக்கள் மீது மட்டும் ஒருசார்பாக அவதூறு பரப்பிக் கொண்டிருந்தால் வன்னியர் எதிர்ப்பு என்ற சாக்கடையில் அரசியல் லாபம் என்ற அரிசி பொறுக்குபவர்களாகவே அவர்களை சமுதாயம் பார்க்கும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ramadoss #EzraSargunam #vanniyarissue 

    தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #Ponparappi #pmk

    அரியலூர்:

    தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அரியலூரில் அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் 18 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைதேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.


    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணிராமதாஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதே வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தர்மபுரி உட்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டமிட்டனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராம வாக்கு சாவடியில் வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    மேலும் பா.ம.க.வினர் பானை சின்னத்தை போட்டு உடைத்தனர். ஆதிதிராவிடர் பகுதிக்குள் நுழைந்து பானை சின்னம் போடப்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்திருந்தனர். இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளன.

    பத்திரிகையாளர்கள் யார்? என்று தெரியாமல் தாக்கியுள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளரை பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன்.

    தமிழகம் முழுவதும் பா.ம. க.வினர் வன்முறையை தூண்டி வருகிறார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் வருகின்ற 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையிலும், அரியலூரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., அனைத்து தோழமைக் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு திருமாளவளவன் கூறினார்.

    பேட்டியின்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் கிட்டு, மேலிட பொறுப்பாளர் கோவேந்தன், துணை பொது செயலாளர் கனி அமுதன், மாவட்ட செயலாளர் செல்வநம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பா நந்தம், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் லூயிகதிரவன் உட்பட ஏராளமானோர் இருந்தனர். #thirumavalavan #Ponparappi #pmk

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
    நாமக்கல்:

    தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் நேற்று தி.மு.க. கூட்டணியின் திருச்செங்கோடு சட்டசபை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்செங்கோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு கொ.ம.தே.க. மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல் தலைமை தாங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ., ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வேட்பாளர் சின்ராஜை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.

    அப்போது அவர், லாரி தொழிலுக்கு இடையூறாக உள்ளது ஆள்பற்றாக்குறை. இதனை கருத்தில்கொண்டு ஒரு வண்டிக்கு 2 டிரைவர் இருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி, ஒரு டிரைவர் முறையை அமல்படுத்த பாடுபடுவோம் என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்பதற்கு தற்போது நடந்த செயல்வீரர்கள் கூட்டமே சாட்சி. இந்த கூட்டத்துக்கு தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் வருவது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

    திருமணிமுத்தாறு திட்டம் இந்த பாராளுமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டும். திருமணிமுத்தாறு திட்டத்திற்கு குரல் கொடுத்து கொண்டிருப்பவர்கள் நாங்கள். எதிர் அணியில் இருப்பவர்கள் எங்காவது திருமணிமுத்தாறு திட்டத்தை பற்றி குரல் கொடுத்து இருப்பார்களா?. பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் நேர்மையான அதிகாரியை நியமித்து கைது செய்ய வேண்டும். இந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக திருச்செங்கோட்டில் உள்ள பரமத்திவேலூர் சாலையில் தேர்தல் அலுவலகத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் திறந்து வைத்தார். 
    மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுவதாக திருமாளவன் தெரிவித்தார். #LSPolls #Thirumavalavan
    அரியலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை நாடே கவனித்து கொண்டிருக்கிறது. கொடநாடு பகுதியின் ஓரஞ்சாரத்தில் கூட எதிர்க்கட்சியினர் சென்றிருக்க வாய்ப்பில்லை.

    தேர்தல் பரபரப்பான ஒரு சூழலை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை திசை திருப்புவதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவதாக தெரிகிறது.

    தமிழகத்தில் தி.மு.க. அமைத்துள்ளது தான் வலுவான அணி. இது கொள்கை கூட்டணி. இந்த அணி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது என்பதை உணர்ந்த நிலையில் தமிழக முதல்வர் கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தி.மு.க.வை முடிச்சு போட்டு பேச முயற்சிக்கிறார். உண்மை எது? என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சட்டமும் அதனை விரைவில் வெளிக்காட்டும்.

    அதே போல் தமிழகத்தில் அமைந்துள்ள தி.முக. கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளார். காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை பெற்று வருகின்றது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுகிறார் என்பதை இதன் மூலம் நான் புரிந்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thirumavalavan
    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #thirunavukkarasar
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான, பலமான கூட்டணி அமைந்துள்ளது. ஒத்த கருத்துடைய தலைவர்கள் இடம் பெற்றுள்ள கூட்டணி 39 தொகுதிகளிலும், இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் பிரச்சனைக்காக போராடுகிற இந்த கூட்டணியில் நான் திருச்சியில் போட்டியிட தலைவர் ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மோடி எதுவும் செய்யவில்லை. மக்களுக்கு அவர் மீது வெறுப்பு தான் அதிகம் உள்ளது. ராகுல் தலைமையில் ஆட்சி அமையும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.



    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் விரைவில் வர இருக்கிறார். பிரியங்கா வருவது பற்றி ராகுல்தான் முடிவு செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #thirunavukkarasar
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் 27-ந்தேதி பிரசாரம் செய்கிறார். #LSPolls #MDMK #Vaiko
    சென்னை:

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்து வருகிறார்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் அவர் பிரசாரம் செய்யவில்லை. மீண்டும் 26-ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்

    அவரது பிரசார விவரத்தை ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இன்று மாலை 3.30 அளவில் கோவில்பட்டி தேவர் சிலை அருகில் வைகோ பேசுகிறார்.

    4.00 சாத்தூர்

    4.30 படந்தால்

    4.45 சுப்ரமணியபுரம் விலக்கு

    5.00 தாயில்பட்டி

    5.15 மண்குண்டாம்பட்டி

    5.45 வெம்பக்கோட்டை

    6.00 முத்துசாமிபுரம்

    6.15 ஆலங்குளம் முக்கு ரோடு

    6.30 டி.கரிசல்குளம்

    6.45 தொம்பக்குளம்

    7.00 கீழராஜகுலராமன்

    7.15 திருவேங்கடபுரம்

    7.45 வ.உ.சி. நகர்

    8.30 ராஜபாளையம் பொதுக்கூட்டம்.

    26.03.2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆம்பூர், பேரணாம்பட்டு , குடியாத்தம், வேலூர், மேல் விஷாரம், ஆற்காடு , ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலஜா, சோளிங்கர் பாணாவரம், மணப்பாக்கம், நெமிலி.

    27 மார்ச் 2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வட சென்னை பழனியாண்டவர் கோவில் தெரு, பெரம்பூர்.

    மத்திய சென்னை டாணா தெரு, புரசைவாக்கம், தென் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில், மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகர் பேருந்து நிலையம் அருகில் (ஜோன்ஸ் ரோடு).

    மார்ச் 28 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #MDMK #Vaiko
    ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார் என்று வைகோ தெரிவித்துள்ளார். #LSPolls #MDMK #Vaiko
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கணேச மூர்த்தி போட்டியிடுகிறார். ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #LSPolls #MDMK #Vaiko
    தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #parliamentelection #dmkalliance
    சென்னை:

    அதிமுக, திமுக தலைமையில் தமிழகத்தில் இரு மெகா கூட்டணிகள் இந்த முறை அமைந்துள்ளது. இந்த கூட்டணி போக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் கட்சியும் தனியாக களமிறங்குகிறது. பிற இதர கட்சிகளும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத மிகவும் முக்கியமான தேர்தலாக இது உள்ளது. அரசியல் கட்சிகள் வெற்றியை பெற தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களையும் அதிமுக கூட்டணி 5 இடங்களையும் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 52.20 சதவித வாக்குகளையும், அதிமுக, பா.ஜனதா., பாமக, தேமுதிக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 37. 20 சதவித வாக்குகளையும், மற்ற கட்சிகள் 10.60 சதவித வாக்குகளை கைப்பற்றும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும் கம்யூனிஸ்ட் கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் 22 இடங்களையும் தெலுங்கு தேசம் 3 இடங்களையும் கைப்பற்றும். தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 13 தொகுதிகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு தொக்தியிலும், பா.ஜனதா கூட்டணி 2 தொகுதியிலும், மற்றவை ஒரு தொகுதியிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #parliamentelection #dmkalliance
    பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று மாலை அறிவித்துள்ளார். #LSPolls #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன. தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.

    தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை திருமாவளவன் இன்று அறிவித்தார்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒரு தொகுதி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

    இதற்கிடையே, தி.மு.க. சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை அங்கு வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனையும் சென்று சந்தித்தார். அப்போது பொருளாளர் துரைமுருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை வெளியிட்டார்.


    அதன்படி, சென்னை வடக்கு - டாக்டர் கலாநிதி, சென்னை தெற்கு - தமிழச்சி தங்க பாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் - கதிர் ஆனந்த், தர்மபுரி - டாக்டர் செந்தில்குமார், திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி, சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன், நீலகிரி (தனி) - ஆ.ராசா, பொள்ளாச்சி - சண்முகசுந்தரம், திண்டுக்கல் - வேலுசாமி, கடலூர் - பண்ருட்டி ரமேஷ், மயிலாடுதுறை - சே.ராமலிங்கம், தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி (தனி) - தனுஷ்குமார், திருநெல்வேலி - திரவியம் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். #LSPolls #DMK #MKStalin
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 27 விவசாய சங்கங்களின் தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். #LSPolls #DMK
    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை 27 விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

    1. கு.செல்லமுத்து (தமிழக விவசாயிகள் சங்க கூட்டு நடவடிக்கை குழு)

    2. கே.பி.ராஜ்குமார் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)

    3. ஜி.எஸ்.தளபதி (இந்திய விவசாயிகள் சங்கம்)

    4. அக்ரி பசுமைவளவன் (விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்)

    5. இளங்கீரன் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)

    6. கிருஷ்ணன் (ஏரிநீர் பாசன சங்கம் மற்றும் பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)

    7. பொன்னுசாமி (தேசிய மயமாக்கப்பட்ட கடன்பெற்ற விவசாயிகள் சங்கம்)

    8. கோபாலகிருஷ்ணன் (தேசிய நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மரவள்ளி, மக்காச் சோளம் உற்பத்தியாளர்கள் சங்கம்).

    9. சரவணன் (இயற்கை வேளாண்மை சிறுதானிய உற்பத்தியாளர் சங்கம்)

    10. வெங்கடபதி (தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கம்)

    11. விஸ்வநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்)

    12. நல்லசிவம் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)

    13. ராமமூர்த்தி (கோத்தாரி கரும்பு விவசாயிகள் சங்கம்)

    14. ஜெனார்த்தன் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் இலத்தூர் ஒன்றிய கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)

    15. சுதர்சனம் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)

    16. சோழந்தூர் பாலகிருஷ்ணன் (சோழந்தூர் மற்றும் 72 கண்மாய்களின் பாசன சங்கம், ராமநாதபுரம்)

    17. செல்வக்குமார் (தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் துணைத் தலைவர், வி.வி.எம். சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)

    18. அமரேசன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை).

    19. ராஜேந்திரன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை)

    20. ரகுபதி (ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை).

    21. சுதர்சனம் (மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை).

    22. லோகநாதன் (பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)

    23. திருப்புலிவனம் திருவேங்கடம் (அனைத்து பயிர்கள் சாகுபடி உற்பத்தியாளர்கள் சங்கம்).

    24. சென்னியப்பன் (கரும்பு வளர்ப்போர் மற்றும் சர்க்கரை ஆலை முன்னேற்றச் சங்கம்).

    25. ஜெயபிரகாஷ் (டெல்டா அமைப்பு)

    26. மு.திருவேங்கடம் (அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம்)

    27. ஏழுமலை (காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கம்). #LSPolls #DMK
    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர். #LSPolls #CPI #DMK
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 
     
    இதற்கிடையே, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் வெளியிட்டார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. 

    இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவித்தார்.



    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள திருப்பூர் தொகுதியில் சுப்பராயனும், நாகை தொகுதியில் செல்வராஜும் போட்டியிடுவார்கள் என அறிவித்தார். #LSPolls #CPI #DMK
    ×