search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Alliance"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர்.
    • 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


    இந்நிலையில், நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், வருகிற 9-ந்தேதி காங்கிரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மற்றும் தமிழக குழுவினர் பங்கேற்ற நிலையில், 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.

    • காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
    • கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.

    இந்நிலையில், தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே வருகிற 3-ந்தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    • தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    • இரண்டு புது முகங்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கேட்டுள்ளார்கள்.
    • ஏற்கனவே இருக்கும் 8 எம்.பி.க்கள், புதிதாக 2 பேர் என்ற வகையில் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. மேலிடத்துடன் பேசி வருகின்றன.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் தேனியை தவிர மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இந்த தேர்தலிலும் கடந்த முறையை போல் 9 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

    அதேநேரம் இரண்டு புது முகங்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கேட்டுள்ளார்கள்.

    சிறுபான்மையினர் ஆணைய தலைவராக இருக்கும் பீட்டர் அல்போன்ஸ் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிகிறது. எனவே அவரும் சீட் கேட்டு பெறுவதில் தீவிரமாக உள்ளார். காங்கிரசை பொறுத்தவரை மூத்த தலைவர் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பேச்சாளர் ஆவார். எனவே அவரை போன்றவர்கள் பாராளுமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது.

    மேலும் மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தனது மகன் கார்த்திக்குக்கும் சீட் கேட்டுள்ளார். சேலத்தில் ஒரு தொகுதி வேண்டும் என்று அவர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

    ஏற்கனவே இருக்கும் 8 எம்.பி.க்கள், புதிதாக 2 பேர் என்ற வகையில் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

    இது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது:-

    தேனி தொகுதி கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோற்றது. எனவே அந்த தொகுதி கிடைப்பதில் பிரச்சினை இருக்காது. தங்கபாலு மகனுக்காக கூடுதலாக ஒரு சீட்டை கேட்கிறார்கள். அது எந்த சீட் என்பது தான் தெரியவில்லை என்றார்.

    • தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
    • கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லி செல்கிறார்கள்.

    நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை, 8 எம்.பி.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துதல், கூட்டணி விவகாரம், தேர்தலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அதே போல் இந்த தேர்தலில் வெற்றி பெறவும், வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக உழைக்க டெல்லி மேலிடம் அறிவுரைகள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள். இதற்கிடையில் ஒன்றிரண்டு முறை எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.

    எனவே நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதுபற்றியும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எல்லா தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களின் பட்டியலை தயாரிக்கும்படி கேட்டுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • தி.மு.க.-கூட்டணி கட்சிகள் தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்று செல்லூர் ராஜூ
    • வில்லாபுரம் ராஜா, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பாதயாத்தி ரையாக சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி கவுன்சிலர் கருப்பசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ கூறியதாவது:-

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு 7 வகையான அன்னதானம் வழங்கப்ப டுகிறது. அனைத்து மதத்தி னருடைய விழாக்களிலும் அ.தி.மு.க. சார்பில் அன்ன தானம் வழங்கப்படும். ஜாதி சமய வேறுபாடு இன்றி அ.தி.மு.க. இருந்து வருகிறது

    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்கும் முயற்சி கண்டனத்திற்குரியது. கர்நாடக துணை முதல்வர் வாய் கொழுப்போடு பேசி வருகிறார். அணை கட்டுவது குறித்து டி.கே.சிவக்குமார் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது.

    தமிழக மக்களுக்கு தி.மு.க. அரசு மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து துரோகம் இழைத்துள்ளது. அதன் கூட்டணி கட்சிகளும் உடந்தையாக உள்ளன.

    தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் என்னவென்று தெரியாமலே வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். ரூ.8 ஆயிரம் கோடி முதலீடு செய்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் ரூ.3 ஆயிரம் கோடி தான் கொண்டு வந்துள்ளார் என்கிறார்கள்.ஆனால் உண்மை நிலை என்னவென்று எங்களுக்கு தெரியும். பெருமளவிலான முதலீட்டை அவர் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை.

    கடந்த ஆட்சி காலத்தில் எங்களது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு சென்று பல்லாயிரம் கோடி முதலீட்டை தமிழகத்துக்கு கொண்டு வந்தார். வெளிநாடு பயணம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட்டார். தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெத்து பயணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நாளை மாலை நடக்கிறது.
    • கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்குகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற தி.மு.க. சார்பில் 11 அமைச்சர்கள் உள்பட 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் கடந்த 1 வாரமாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எதிர்க்கட்சி வேட்பாளர்களை விட சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்போடு தி.மு.க.வினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்கள் அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நாளை (1-ந்தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்குகிறார். மாநகர மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் வரவேற்கிறார். எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொஹிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான், மக்கள் நீதி மய்யம் தேர்தல் பொறுப்பாளர் அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், 3-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்வது குறித்தும், தலைவர்கள் பிரசாரம் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது.

    முடிவில் மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறுகிறார்.

    • பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில் கவர்னர்கள் பேசுகின்றனர். இது மாநில உரிமைகளை மீறுவதாகும்.
    • தற்போது தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சென்னை:

    சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.

    அப்போது நிருபர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். எங்களுக்கு அனுமதி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில் கவர்னர்கள் பேசுகின்றனர். இது மாநில உரிமைகளை மீறுவதாகும்.

    தற்போது தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நேரத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து கொண்டது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும் கருணாநிதி 96-வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 3-ந் தேதி 4 மணிக்கு நடக்கிறது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. போட்டியிட்ட 19 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    இதையடுத்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும் கருணாநிதி 96-வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) 4 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வரவேற்கிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித்தலைவர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    திருப்பூர்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    திருப்பூர் தொகுதியில் 15,29,836 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,15,610 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் போட்டியிட்டார். அவர் 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4,15,357 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் 43 ஆயிரத்து 816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதன் 42 ஆயிரத்து 189 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.எஸ்.சந்திரகுமார் 64 ஆயிரத்து 657 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தோற்கடித்தார்.
    திருச்சி:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் திருச்சி தொகுதியில் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் களமிறங்கினார்.

    திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 1,61,999 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் 1,00,818 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத் 65 ஆயிரத்து 286 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்தராஜா 42 ஆயிரத்து 134 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 4,42,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    மதுரை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 4,42,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியன் 3,06,256 வாக்குகள் பெற்றார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் 84 ஆயிரத்து 656 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 85 ஆயிரத்து 046 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 42 ஆயிரத்து 576 வாக்குகளும் பெற்றனர். 
    ×