search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரோகம்"

    • தி.மு.க.-கூட்டணி கட்சிகள் தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்று செல்லூர் ராஜூ
    • வில்லாபுரம் ராஜா, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பாதயாத்தி ரையாக சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி கவுன்சிலர் கருப்பசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ கூறியதாவது:-

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு 7 வகையான அன்னதானம் வழங்கப்ப டுகிறது. அனைத்து மதத்தி னருடைய விழாக்களிலும் அ.தி.மு.க. சார்பில் அன்ன தானம் வழங்கப்படும். ஜாதி சமய வேறுபாடு இன்றி அ.தி.மு.க. இருந்து வருகிறது

    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்கும் முயற்சி கண்டனத்திற்குரியது. கர்நாடக துணை முதல்வர் வாய் கொழுப்போடு பேசி வருகிறார். அணை கட்டுவது குறித்து டி.கே.சிவக்குமார் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது.

    தமிழக மக்களுக்கு தி.மு.க. அரசு மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து துரோகம் இழைத்துள்ளது. அதன் கூட்டணி கட்சிகளும் உடந்தையாக உள்ளன.

    தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் என்னவென்று தெரியாமலே வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். ரூ.8 ஆயிரம் கோடி முதலீடு செய்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் ரூ.3 ஆயிரம் கோடி தான் கொண்டு வந்துள்ளார் என்கிறார்கள்.ஆனால் உண்மை நிலை என்னவென்று எங்களுக்கு தெரியும். பெருமளவிலான முதலீட்டை அவர் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை.

    கடந்த ஆட்சி காலத்தில் எங்களது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு சென்று பல்லாயிரம் கோடி முதலீட்டை தமிழகத்துக்கு கொண்டு வந்தார். வெளிநாடு பயணம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட்டார். தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெத்து பயணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×