search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP"

    தமிழ்நாடு முழுவதும் 22 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். #TNPolice
    சென்னை:

    சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. விசுவநாத் ஜெயன் தரமணி சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தரமணி சரக உதவி கமி‌ஷனர் சுப்பராயன் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் மாதவரம் போக்குவரத்து குற்ற புலனாய்வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    தலைமையிடத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் பரங்கிமலை சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை மாவட்ட பெண்கள் குற்றப்புலனாய்வு பிரிவின் டி.எஸ்.பி. மகேந்திரன் மதுராந்தகம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    தர்மபுரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. சுப்பையா சத்தியமங்கலம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    காஞ்சீபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. கண்ணன் ராயபுரம் சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை மாவட்ட நில மோசடி விசாரணை பிரிவு டி.எஸ்.பி. இளங்கோவன் நாங்குநேரி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். #TNPolice
    அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. வீட்டில் நடைபெற்ற சோதனையால் தமிழகத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். #thirunavukkarasar #Congress
    அவனியாபுரம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட பந்த் வெற்றி என்பது மோடி அரசை தோற் கடிக்க பெற்ற வெற்றியாக நினைக்கிறேன்.

    இன்றைய தேதி வரை பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது அதன் விலையை மட்டும் உயர்த்தியதோடு அல்லாமல் அனைத்து போக்குவரத்து மற்றும் அத்தியாவாசிய பொருட்கள் விலைகளையும் உயர்த்தும்.

    அமைச்சர், டிஜி.பி போன்றவர்கள் வீட்டில் நடைபெற்றுள்ள சோதனையால் தமிழ்நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை என்பது மற்ற குற்றங்களுக்கு முன் உதாரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #Congress
    சி.பி.ஐ. சோதனையில் சிக்கிய அமைச்சர், டி.ஜி.பி. இருவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #GutkhaScam #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் இல்லங்களில் மத்திய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

    சென்னையில் உள்ள காவல்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கின்றனர்.

    தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குட்கா நிறுவனம் ஒன்றில் சென்னையில் கடந்த 2016 ஜூலை 8-ந்தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவ், வருமான வரித்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததை வருமான வரித்துறை சுட்டிக்காட்டியது.

    வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் காவல்துறை தலைவராகவும், பதவி உயர்வு பெற்ற அவலம் நடந்தது. ஊழல் கறைபடிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.



    இந்நிலையில் சி.பி.ஐ. சோதனையில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக காவல்துறைக்கு தீராத களங்கம் ஏற்படுத்தும் வகையில் லஞ்ச ஊழல் புகாருக்கு உள்ளான காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். குட்கா ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #GutkhaScam #Vaiko

    திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரி பேராசிரியைகள் பாலியல் புரோக்கர்களாக செயல்பட்டு மாணவிகளை மிரட்டிய ஆடியோ வைரலாகி வருகிறது. #ChennaiStudentharassment #AgriCollege

    திருவண்ணாமலை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நிர்மலாதேவியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில், நிர்மலா தேவி விவகாரத்தை போல் திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரி பேராசிரியைகளும் பாலியல் புரோக்கர்களாக செயல்பட்டு மாணவிகளை மிரட்டிய ஆடியோ வைரலாகி வருகிறது. பேராசிரியைகள் 2 பேரும் கல்லூரி விடுதி வார்டன்களாகவும் உள்ளனர்.

    அந்த ஆடியோவில் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகிய 2 பேரும் பேசியதாவது:-

    நீயா தான் உன் பிரச்சினையை கொண்டுபோன... உங்க அப்பாவை வரவழைத்து ஒரு கடிதத்தை எழுதி கொடுத்து விட்டு போகச்சொல். அப்படி கொடுத்தால் நீ இன்னும் 2 ஆண்டுகளில் படிப்பை முடித்துவிட்டு செல்லலாம்.

    இல்லையென்றால் நீயே எனக்கு படிப்பு வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விடு. இது உனக்கும், உன் அப்பாவுக்கும், டீனுக்குமான பிரச்சினை. உன் அப்பாவை கல்லூரிக்கு வரச்சொல். எத்தனை தகவலை நாங்கள் வெளியே கொண்டு போகாமல் இருந்திருக்கிறோம் தெரியாதா உனக்கு?

    மைண்ட்ட ஒரு இடத்துக்கு செட் பண்ணு...மரம் மாதிரி திமிரா நிற்காத. உனக்கு மரியாதை கொடுத்து பேசுனா கிறுக்கு மாதிரி இருக்க. உனக்கு என்ன வேணாலும் செய்றோம்.

    நீ ஒத்துக்கல, உன் பெற்றோர் வந்து கேட்டால் நீ இங்கு வரவே இல்ல. எங்கயோ ஓடிப்போய்டனு சொல்லிடுவோம். உன் வாழ்க்கையை நாசமாக்கி விடுவோம். உனக்கு எதிராக குரல் கொடுக்க எங்களிடம் பல ஆதாரங்கள் உள்ளன.

    போலீஸ் கேஸ் குடுப்பியா, எங்களை ஒன்னும் செய்ய முடியாது. ஒன்னு புரிஞ்சிக்க, பெரிய டி.ஜி.பி.யாலேயே எங்களை ஒன்னும் செய்ய முடியல. ஒன்னும் கிழிக்க முடியாது. எல்லாரும் கைய விரிச்சிடுவாங்க.

    உன்ன மாதிரி எத்தனை பொண்ணுங்கள நாங்க பாத்திருக்கோம். ஒழுங்க நீ கேட்டா, படிச்சி முடிச்சிட்டு போலாம். இல்லைனா, நீ படிக்கவே முடியாது. டீன் சொன்ன மாதிரி கேட்டுநட. இல்லைனா, எத்தன வரு‌ஷம் ஆனாலும் உன்னால படிச்சி முடிக்க முடியாது.

    இது ஒரு சின்ன வி‌ஷயம். சீக்கிரமா மறந்து போயிடும். கல்யாணம் பன்னிட்டு ஒரு குழந்தை பெத்துகிட்ட பிறகு நினைச்சு பாத்தா, இது ஒரு வி‌ஷயமாவே தெரியாது. சீக்கிரமா முடிவெடுத்து சொல். இவ்வாறு அவர்கள் மாணவியிடம் மிரட்டி பேசி உள்ளனர்.

    இதில், குறிப்பிட்டு மாணவியை பற்றிய ஆதாரம் உள்ளதாக பேராசிரியைகள் தெரிவித்துள்ளனர். அந்த ஆதாரம் எது சம்பந்தமானது என்பது தெரியவில்லை. மேலும் பல மாணவிகள் பற்றியும், டீன் குறித்தும் குறிப்பிட்டு பேசி உள்ளனர்.

    இந்த ஆடியோ பேச்சு உண்மையானதில்லை என்று புகாரில் சிக்கியுள்ள கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோவில் செட்டப் செய்து பேச்சுகள் இணைக்கப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

    இந்த ஆடியோ பேச்சின் உண்மை தன்மை குறித்தும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    மேலும், பேராசிரியர்கள் வார்டன்களாகவும் இருப்பதால், இரவு நேரத்தில் விடுதிக்கு உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் அடிக்கடி வந்து சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது. அப்போது, மாணவி மீதான மோகத்தில் ஆசைக்கு இணைங்க பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    தங்க பாண்டியனின் பாலியல் தொல்லையை மாணவி செல்போனில் ரகசியமாக ஆடியோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அதனை கல்லூரி முதல்வரிடம் கொடுத்து தங்க பாண்டியன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து, மாணவியை சமரசப்படுத்தும் முயற்சியில் பேராசிரியர்கள் மைதிலியும், புனிதாவும் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பேராசிரியரின் ஆசைக்கு இணங்கினால், உன் வாழ்க்கை செட்டில் ஆகிடும்.

    அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவாய். இதே கல்லூரியில் உனக்கு பேராசிரியர் வேலை வாங்கி தருகிறோம் என்று கூறி மூளைச்சலவை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவற்றையெல்லாம் பல முறை மாணவியை தனது செல்போனில் பதிவு செய்து ஆடியோ பேச்சுக்களை ஒருங்கிணைத்து புகாராக கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.  #ChennaiStudentharassment #AgriCollege

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அவரது இல்லத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #Karunanidhi #TNCM #ChiefSecretary
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    இதையடுத்து சற்றுமுன்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்தார். இந்த செய்தியும் தொண்டர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் டிஜிபி ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து. மாலை 5 மணியளவில் காவிரி மருத்துவமனையின் அறிக்கை வெளியாகும் என கூறப்படுவதால், அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. #KauveryHospital #Karunanidhi #TNCM #ChiefSecretary
    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்காலிகமாக டி.ஜி.பி.க்களை நியமிக்க கூடாது என காவல்துறை சீர்திருத்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி :

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்காலிகமாக டி.ஜி.பி.க்களை நியமிக்க கூடாது என பிரகாஷ் சிங் என்பவர் உச்சநீதிமன்றதில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘டி.ஜி.பி-க்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக புதிய டி.ஜி.பி.க்களின் பரிந்துரை பெயர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு (UPSC) அனுப்ப வேண்டும்.

    மத்திய பணியாளர் தேர்வு ஆணையம், தேர்வு செய்யும் அதிகாரிகளின் பெயர்கள் அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுக்கு அனுப்பப்பட்டு, அவர்களில் ஒருவரை டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், தற்காலிக டி.ஜி.பி.க்களாக யாரையும் நியமிக்க கூடாது எனவும், குறிப்பாக ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்களை டி.ஜி.பி.யாக நியமிக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 அரசு ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே ராஜேந்திரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன்பதில் இன்று பதில் தாக்கல் செய்தார். 

    அதில், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடினர். அவர்களை கலைக்க எடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஸ்டெர்லைட் வளாக குடியிருப்பில் இருந்த 150 குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது; அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    தூத்துக்குடியில் 18-ந்தேதி அமைதி பேரணி நடத்த அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் திருமாவளவன், தெகலான் பாகவி ஆகியோர் மனு கொடுத்தனர். #ThoothukudiShooting #Thirumavalavan
    அடையாறு:

    சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், அடக்குமுறைக்கான ஜனநாயகசக்தி என்ற பெயரில் வருகிற 18-ந்தேதி தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தூத்துக்குடியில் அமைதி பேரணி மற்றும் இரங்கல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கும் 6 பேரை விடுதலை செய்ய வேண்டும், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வேல்முருகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

    பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

    தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தூத்துக்குடி போராட்டத்திற்கு பிறகு பல்வேறு வழக்கு பதிவுகளும் கைது சம்பவங்களும் தொடர்ந்து நடந்துவருகிறது, இதுபோன்ற ஒடுக்குமுறைகளை கைவிட்டு, ஜனநாயகரீதியாக போராடுபவர்களை தண்டிக்கக்கூடாது. அவர்களுக்கான ஜனநாயக உரிமையை வழங்க வேண்டும். சிறையில் வேல்முருகனுக்கு போலீசாரால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    வருகிற 18-ந்தேதி தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தூத்துக்குடியில் அமைதி பேரணி மற்றும் இரங்கல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #ThoothukudiShooting #Thirumavalavan
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததையடுத்து டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டார். #sterliteplant #protest
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடுத்ததால் வன்முறை வெடித்தது. அதனையும் மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர்  ஒரே சமயத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்றபோது கடும் மோதல் வெடித்தது.



    போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதுடன் வாகனங்களையும் அடித்து நொறுக்கி  தீ வைத்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், டிஜிபி, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசப்பட்டது. மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பின்னர் இந்த கலவரம் குறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துவிடட்து. கூடுதல் பாதுகாப்புக்கு மற்ற பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் டிஜிபி கூறினார்.

    தூத்துக்குடியில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். #sterliteplant #protest
    சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது முகமூடியாக, பினாமிமுறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #MKStalin #gutkhascam
    சென்னை:

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவியில் உள்ள ஊழியர் சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதுடன், மிக மூத்த வழக்கறிஞரான முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கியை அந்த வழக்கில் ஆஜராக ஏற்பாடு செய்திருப்பதும் மிகுந்த ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

    ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருக்கும் அரசு ஊழியர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய முதுநிலை வழக்கறிஞரை நியமிக்க எங்கிருந்து பணம் வந்தது என்ற நியாயமான கேள்வியும் அய்யப்பாடும் இயல்பாகவே எழுகிறது.

    இந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஏற்கனவே “குட்கா டைரியில்” குற்றம் சாட்டப்பட்டிருப்பவர். அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகக் காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.

    குட்கா வழக்கு சி.பி.ஐ விசாரணைக்குச் சென்றால் சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் குட்கா வழக்கில் வசமாகச் சிக்கிக் கொள்ளநேரிடும் என்பதால், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சி.பி.ஐ விசாரணையைத் தடுக்கவும், காலம்தாழ்த்தவும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது “முகமூடியாக”, பினாமிமுறையில் பயன்படுத்தி, இந்த வழக்கினை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

    ஆகவே சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் அவர்களது பதவியில் எல்லா எதிர்ப்புகளையும் மீறி தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்வரை, குட்கா வழக்கு விசாரணைக்கு அனைத்துவகையான முட்டுக்கட்டைகளையும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் வரிசையாகப் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

    எனவே இவர்கள் இருவரும் தங்கள் பதவியிலிருந்து தாமே முன்வந்து விலகிக்கொள்ள வேண்டும் அல்லது முதலமைச்சர் இந்த இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்பது அவசர அவசியமாகிறது.

    குறிப்பாக குட்கா வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடப்பட்ட உடன், “வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், மேல்முறையீடு செய்யமாட்டோம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அமைச்சர் ஜெயக்குமாரின் அந்தக் கருத்துக்கு மாறாக, இப்போது சுகாதாரத்துறையில் உள்ள ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார் என்றால், வளமானதும் வலிமையானதுமான பெரிய இடத்துப் பின்னணி இல்லாமல், அரசின் முடிவை எதிர்த்து அப்படியொரு நடவடிக்கை எடுக்க ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு எப்படி துணிச்சல் வரும்?

    ஆகவே இந்த மேல்முறையீட்டின் திரைமறைவில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், தமிழகக் காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் முக்காடு போட்டு ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே பார்ப்போர் அனைவருக்கும் தெள்ளித் தெளிவாகத் தெரிகிறது.



    ஆகவே இந்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது “மேல்முறையீடு செய்யப் போவதில்லை” என்று தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட உறுதியான முடிவினைத் தெரிவித்து, குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

    அது மட்டுமின்றி முகுல் ரோகத்கி போன்ற மூத்த வழக்கறிஞரை நியமித்து தனக்காக வாதிட வைக்கும் அளவிற்கு, ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மடியில் கனம் இருப்போர்க்கு வழியில் நிச்சயம் பயம் இருக்கும் என்றுதானே மக்கள் எண்ணிப்பார்ப்பார்கள்!

    இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #gutkhascam
    ×