search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collision"

    • பாக்யா திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார்.
    • அல் ரசீது நிலைதடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பாக்யா (வயது 31). இவர் திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மகள் சாய்னாவுடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு, மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, கும்பகோணம் சுவாமி மலையை சேர்ந்த அல் ரசீது (20) என்பவர், தனது நண்பர் முகமது இஷாத் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது நிலை தடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார். இதில் பாக்கியா, அவரது மகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்த வர்கள் 4 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாக்யா வின் சகோதரர் பாக்கியராஜ் காரைக்கால் நகர போக்கு வரத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
    • பலத்த காயமடைந்த முகேஷ் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சோ்க்கப்பட்டார்.

    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டம், பாப்பாகோவில் சமத்துவ புரத்தைச் சோ்ந்தவர் பழனிவேல். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மகன் முகேஷ் (வயது 26).

    நாகையில் உள்ள ஸ்டூடி யோவில் போட்டோ கிராபராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 4-ந் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் கொளப்பாடு கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.

    பின்னா் அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் திருப்பூண்டி காரைநகா் அருகே வந்தபோது குறுக்கே வந்த மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த முகேஷ் நாகை அரசு மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

    இங்கு நேற்று முகேஷ் மூளைச்சாவு அடைந்ததாக அவரது பெற்றோரிடம் மருத்து வா்கள் தெரிவித்தனா்.

    மேலும், உடல் உறுப்பு தானம் பற்றியும் குடும்பத்தினரிடம் கலந்தாலோ சிக்கப்பட்டது.

    இதற்கு பெற்றோா் ஒப்புதல் தெரிவித்ததைத் தொடா்ந்து முகேஷின் கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.

    பின்னா் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய ஒதுக்கீட்டின்படி, சிறுநீரகங்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்தி ரிக்கும், கல்லீரல் பெரம்பலூரிலுள்ள தனியாா் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டன.

    • 5 ரோடு -4 ரோடு செல்லும் வழியில் உள்ள செல்வம் ஓட்டல் முன்பு சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த 28-ந்ேததி அதிகாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
    • அந்த சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே 5 ரோடு -4 ரோடு செல்லும் வழியில் உள்ள செல்வம் ஓட்டல் முன்பு சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த 28-ந்ேததி அதிகாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பஸ் டயர், வாலிபரின் இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியது. இதனால் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்த தும் பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி யதில், டிரைவர் கவனக்குறை வாக பஸ்சை ஓட்டி வந்ததாக ெதரிய வந்தது. பஸ் மோதி பலியான வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இத னால் உடலை, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. பலியானவர் கருப்பு நிற ேராஸ் கலர் கட்டம் போட்ட சட்டை அணிந்தி ருந்தார். நீல கலர் கட்டம் போட்ட லுங்கி அணிந்தி ருந்தார். அவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி பள்ளப்பட்டி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்த வாலிபர் பிணமாக கிடக்கும் காட்சி.

    • வேனில் வந்த 14 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    • இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    கோவை,

    கர்நாடக மாநிலத்தில் இருந்து 20 பயணிகள் வேனில் மருதமலை, பேரூருக்கு சுற்றுலா வந்தனர். அப்போது கே. ஜி மில் சாலை அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஜீப் மீது மோதியது. இதில் வேனில் வந்த 14 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    ஜீப்பில் வந்த மில் தொழிலாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இந்த விபத்தினால் கோவை வடவள்ளி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    • ஆம்னி பஸ் மோதி வியாபாரி பலியானார்.
    • நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள குரண்டிபட்டியை சேர்ந்த வர் ராஜாங்கம் (வயது 65), கோழி வியாபாரம் செய்து வந்த இவர், இன்று அதிகாலை மேலூருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டி ருந்தார். அதே சாலையில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்றது.

    அந்த பஸ் எதிர்பாராத விதமாக ராஜாங்கத்தின் மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி, தனிபிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அவர்கள் ராஜாங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அவர்கள் விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சங்கரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.
    • புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கண்மாய் பகுதியில் இருந்து 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் இரை தேடி வந்தது. அந்த கண்மாய் வழியாக வந்து சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் காயமடைந்து பரிதாபமாக இறந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் பிரபாகரன் தலைமையில் வனக்காப்பாளர் ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் காயமடைந்து இறந்து கிடந்த புள்ளிமானை மீட்டு ரெட்டியபட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் முத்துச்செல்வி முன்னிலையில் புள்ளிமான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

    • சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை ெரயில்வே மேம்பாலத்தில் 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் காரும், லாரி யும் பயங்கரமாக மோதியது.
    • கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கிறிஸ்டோபருக்கு கால், உடல் துண்டானது.

    கருப்பூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்டரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 26 ). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் மற்றும் அதே பகுதி சேர்ந்த முத்து மகன் பெரிய நாயகம், (வயது 24) உள்பட மொத்தம் 5 பேர் இன்று காலையில் கிருஷ்ணகிரியில் இருந்து கோவை செல்வ தற்காக சொகுசு காரில் சேலம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.

    கார் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை ெரயில்வே மேம்பாலத்தில் 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் காரும், லாரி யும் பயங்கரமாக மோதியது.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கிறிஸ்டோபருக்கு கால், உடல் துண்டானது. மேலும் வயிற்றில் இருந்து குடல் வெளிேய வந்தது. மற்றொரு வாலிபர் பெரியநாயகத்திற்கு தலை, கால், அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த மற்றவர்களும் படுகாயம் அடைந்தனர்.

    கவலைக்கிடம்

    அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், போலீசார் சேர்ந்து 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்டோபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த விபத்து நடந்த பகுதி சேலம் -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் பஸ் பயணிகள், அலுவலகத்திற்கு செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தை வேடிக்கை பார்ப்பதற்காக ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி, ஓமலூர் தீய ணைப்பு நிலைய ஆய்வாளர் ( பொறுப்பு) குப்புசாமி, மற்றும் போலீசார் போக்கு வரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
    • இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள சாணத்திகல்மேட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சிவகாமி (50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சிவகாமி இரவு தனது வீட்டின் அருகே ரோட்டை கடந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் எதிர்பாராத விதமாக சிவகாமி மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் சிவகாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    குமாரபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் கீர்த்திராஜா,(வயது 27). தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் மதியம் குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, அப்போது சாலையில் வந்த  கார் இவர் மீது மோதியதில் கீர்த்தி ராஜா பலத்த காயமடைந்தார். 

    அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதை குறித்து  குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தில் கரை ஒட்டி வந்தவர் வையப்பமலையை சேர்ந்த காளிதாஸ் (46), என்பது தெரியவந்து.

    தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே சென்டர் மீடியனில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
    சேலம்:
     ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  இருந்து நேற்றிரவு ஒரு லாரி இரும்பு
    லோடு ஏற்றி கொண்டு  விழுப்புரம்  மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு புறப்பட்டது. 

     இந்த லாரி  நள்ளிரவில் சேலம் பட்டர்பிளை மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் வி.புதூரை  சேர்ந்த  நாகராஜ் என்பவர்   ஒட்டி வந்தார். அப்போ து  திடீரென லாரி டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்து  தாறு மாறாக ஓடியது. 

    பின்னர் சாலையில் நடுவில் உள்ள  சென்டர்  மீடியனில் மோதிய படி   நின்றது.   தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார்   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர்  லாரியை மீட்டனர்.  
    சேலம் குரங்கு சாவடியில் சைக்கிளில் சென்றவர் கிரேன் மோதி பலியானார்.
    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 62).  இவர் இன்று காலை சேலம் குரங்குசாவடி தனியார் ஓட்டல் முன்பு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார் .

    தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். 
    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே பிராஞ்சேரியில் சாலை விபத்தில் தொழிலாளி பலியானார்.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள பிராஞ்சேரி நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(வயது 53). கட்டிட தொழிலாளி.

    இவரது மகன் சுபாஷ் ராஜ்(19). இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கூலி வேலைக்கு சென்றுவந்தார். சம்பவத்தன்று இரவு கயத்தாறுக்கு வேலைக்கு சென்றிருந்த அவரை அழைத்து வருவதற்காக வெங்கட்ராமன் மொபட்டில் சென்றுள்ளார்.

    கயத்தாறில் மகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார். சன்னது புதுக்குடி சாலையில் வந்தபோது  எதிரே வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.  

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த சுபாஷ் ராஜிக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் ராைஜ மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த வெங்கட்ராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த கங்கைகொண்டானை சேர்ந்த மாரியப்பன்(45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×