என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 110032"

    சேலம் குரங்கு சாவடியில் சைக்கிளில் சென்றவர் கிரேன் மோதி பலியானார்.
    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 62).  இவர் இன்று காலை சேலம் குரங்குசாவடி தனியார் ஓட்டல் முன்பு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார் .

    தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். 
    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கட்டுமானத்துக்கு பயன்படும் பளுதூக்கி கிரேன் சாலையில் சென்ற வாகனங்களின் மீது அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். #Cranecollapse #CranecollapseinSeattle
    நியூயார்க்:

    அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாநிலத்தின் புறநகர் பகுதியான டவுண்ட்டவுன்  சியாட்டில் நகரில் 5-வது நெடுஞ்சாலை வழியாக நேற்று வழக்கம்போல் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன.

    பிற்பகல் சுமார் 3 மணியளவில் மெர்கெர் தெரு மற்றும் பேர்வியூ அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு இடையில் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கட்டுமானத்துக்கு பயன்படும் பளுதூக்கி கிரேன் திடீரென்று பயங்கர சப்தத்துடன் அறுந்து அவ்வழியாக சென்ற கார்களின்மீது வேகமாக விழுந்தது.



    இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, உயிரிழந்தனர். மொத்தம் 6 கார்கள் நசுங்கியதில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். #Cranecollapse #CranecollapseinSeattle 
    ×