வாகனம் மோதி புள்ளிமான் பலி

வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது. புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
வாகனம் மோதி புள்ளிமான் பலி
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கண்மாய் பகுதியில் இருந்து 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் இரை தேடி வந்தது. அந்த கண்மாய் வழியாக வந்து சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் காயமடைந்து பரிதாபமாக இறந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் பிரபாகரன் தலைமையில் வனக்காப்பாளர் ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் காயமடைந்து இறந்து கிடந்த புள்ளிமானை மீட்டு ரெட்டியபட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் முத்துச்செல்வி முன்னிலையில் புள்ளிமான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com