search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collision"

    • முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது.
    • பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையம் அருகே, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக பஸ் பின்புறமாக மோதியதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதில் பஸ்ஸில் பயணம் செய்த 4 பயணிகள் உள்பட, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குழந்தைகள் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில், அனுசுயா (63), பாருண் (29), நவீன் (23), ஹென்சா (1), ஷிவா பாத்திமா (7), நவ்ஷத் (30), யமுனா (8), ஆகியோர் விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

    இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் அதிவேகமாக பஸ்சை இயக்கி விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது. ஓட்டுனர்களின் அலட்சியத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
    • கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது.

    கொல்லிமலை:

    ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

    கொண்டை ஊசி வளைவு

    சுமார் 9 மணியளவில் அரியூர்நாடு பஞ்சாயத்து கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.

    சிகிச்சை

    விரைந்து வந்த வாழவந்தி நாடு போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செம்மேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீ

    சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.   

    • வாகனம் மோதி பேக்கரி கடை ஊழியர் பலியானார்.
    • 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி அருகேயுள்ள தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 58). இவர் கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கூத்தியார்குண்டை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் ராம்குமார் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • போக்குவரத்து பாதிப்பால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.

    ஊட்டி,

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    பஸ்சில் சுரேஷ் என்பவர் டிரைவராகவும், மனோகரன் என்பவா் நடத்துநராக பணியில் இருந்தனர்.

    ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை மணிகண்டன் என்பவா் ஓட்டி வந்தார்.

    குன்னூா்-பா்லியாறு அருகே பஸ் சென்றபோது, டிப்பா் லாரியும், அரசு பஸ்சும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் யாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டதால், அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா், வாகனங்களை அப்புற ப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.

    இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் சுமாா் 1 மணி நேரம் கழித்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் குறித்து குன்னூா் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • வாழைதார் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி நள்ளிரவு 12 மணிக்கு சேலம் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.
    • தொப்பூர்-வெள்ளாறு செல்லும் வழியில் உள்ள சின்னம்கம்மம்பட்டியில் மினிலாரி சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    மேட்டூர்:

    ஈேராடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாழைதார் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி நள்ளிரவு 12 மணிக்கு சேலம் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது சேலம் மாவட்டம் தாரமஙகலம் அருகே உள்ள செலவடை பகுதிைய சேர்ந்த வல்லரசு (23), கார்த்திக் (26) ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிந்தனர்.

    தொப்பூர்-வெள்ளாறு செல்லும் வழியில் உள்ள சின்னம்கம்மம்பட்டியில் மினிலாரி சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான வல்லரசு, கார்த்திக் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முத்துசாமி (46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் சென்றது.
    • இதில் காரை ஓட்டி வந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த லோக நாதன் (வயது 53) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    ராசிபுரம்:

    சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு ஒரு லாரி சென்றது. சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் சென்றது.

    அப்போது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. மேலும் சிறிது தூரம் தரதர வென காரை இழுத்துச் சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

    இதில் காரை ஓட்டி வந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த லோக நாதன் (வயது 53) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் கார் அப்பளம் போல் நொறுங்கி யதால் லோக நாதனின் உடல் காருக்குள் சிக்கிக் கொண்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் மற்றும் பொக்லைன் எந்திர உதவியுடன் லோகநாதனின் உடல் காரில் இருந்து மீட்கப்பட்டது.

    உயிரிழந்த லோகநாதன், சேலம் இரும்பாலையில் சீனியர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நாமக்கல்லில் உள்ள அவரது நண்பரை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றபோது விபத்துக்கு உள்ளாகி இறந்தது குறிப்பி டத்தக்கது. இதனிடையே இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றும் சிக்கியதா கவும், அதில் வந்த 2 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தில் இறந்த லோகநா தனின் உடலை பிரேத பரி சோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த தூசூர் நடுவீதி பகுதியைச் சேர்ந்த வர் பெரியசாமி சாலப்பள்ளம் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.
    • அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கர மாக மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த தூசூர் நடுவீதி பகுதியைச் சேர்ந்த வர் பெரியசாமி (வயது 50). இவர் நேற்று திருச்சி ரோடு, சாலப்பள்ளம் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கர மாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெரிய சாமி படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர், லேசான காயங்க ளுடன் தப்பி னார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பிச்சார்ட்ஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம்புதூர் ராஜராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 63).

    இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பிச்சார்ட்ஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், பலத்த காயமடைந்தார். இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது

    திருப்பூர் : 

    திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்து நேற்று இரவு 11.30 மணி அளவில் வெளியேறியது. அப்போது பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த பாலு (வயது 45) என்பவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் தாராபுரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி., காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் மத்திய பஸ் நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கோவை, உடுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்தும் இடம், பயணிகள் நடந்து செல்வதற்காக நடைமேடை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பயணிகள் நடைமேடையை பயன்படுத்தாமல் பஸ் நிலைய வளாகப்பகுதியிலேயே நடந்து செல்கின்றனர். மேலும் பஸ் நிலையம் மற்றும் சில இடங்களில் இரு சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே இரு சக்கர வாகனங்களை வாகன நிறுத்தத்தில் நிறுத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது மட்டுமின்றி பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக வருவதால் நடந்து செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர். பஸ் நிலையத்திற்குள் நுழையும் போதும், வெளியே செல்லும் போதும் பஸ்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. மேலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பஸ் நிலைய முன்பகுதி, மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும், வாகனங்கள் தாறுமாறாக செல்வதை தடுக்கவும் போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குமாரபாளையம் அருகே கார் மோதி தந்தை- மகன் படுகாயமடைந்ததில் ஆத்தூரை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஓட்டமெத்தை பகுதியை  சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). கட்டிட கூலித் தொழிலாளி. 

    இவர் நேற்று மாலை  மோட்டார்சைக்கிளில் தனது தந்தை லோகவசீகரன், (57), என்பவரை பின்னால்  உட்கார வைத்துக்கொண்டு சேலம்-கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு பிரிவு அருகே கே.பி.டி பெட்ரோல் பங்க் முன்பு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் செந்தில்குமார், லோகவசீகரன் ஆகிய, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று இருவரையும் மீட்டு  குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    விசாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பூபாலன்  (24), என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை  கைது செய்தனர்.
    குமாரபாளையத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் நாகம்மா(வயது 55),கூலி தொழிலாளி. இவர் கே.ஓ.என் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை  கடந்தார். 

    அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் நாகம்மா பலத்த காயமடைந்தார். இதைய–டுத்து அவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், மோட்டார்சைக்கிளில் வந்த வட்டமலை பகுதியை சேர்ந்த ராஜா  என்பவரை கைது செய்தனர். 
    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×