என் மலர்
இந்தியா
- கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர்.
- விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
காதலில் விழுந்தவர்கள் அதில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாளுவது சகஜமான விஷயம் தான். அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் காதலிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் மனதையும் கவர வேண்டும் என்று நினைப்பர்.
அப்படி நினைத்த ஒருவர், தான் காதலித்த பெண்ணின் மீது நண்பன் மூலமாக மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தி உள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையால், விபத்தை வாலிபர் திட்டமிட்டு அரங்கேற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி மம்மூத்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன்(வயது24). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதுகுறித்து அந்த பெண்ணிடம் ரஞ்சித்ராஜன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணோ பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனதை கவர்ந்து, அதன் மூலமாக இளம்பெண்ணை காதலிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தார். தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினரை கவர, விபத்து நாடகத்தை சினிமா பாணியில் அரங்கேற்ற திட்டமிட்டார்.
அதாவது தான் காதலிக்கும் பெண்ணை ஏதாவது ஒரு வாகனத்தை விட்டு மோதச்செய்து, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதன் மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்குவதே அவரது திட்டம் ஆகும்.

கைதானவர்கள்
இதுகுறித்து தனது நண்பரான கோன்னி பையனமான் பகுதியை சேர்ந்த அஜாஸ்(19) என்பவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து விபத்தை எங்கு வைத்து நடத்துவது? எப்படி அரங்கேற்றுவது? என்று இருவரும் திட்டமிட்டனர்.
ரஞ்சித் ராஜன் மற்றும் அஜாஸ் வெவ்வேறு கார்களில் செல்வதும், அஜாஸ் தனது காரால் ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதுமே அவர்களது திட்டமாகும். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர். பின்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித்ராஜன் காதலிக்கும் பெண்ணை, அஜாஸ் தனது காரில் பின்தொடர்ந்து சென்றார். பத்தினம்திட்டா அருகே உள்ள வாழமுட்டம் பகுதிக்கு சென்றதும் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது காரால் அஜாஸ் மோதினார்.
பின்பு அவர் சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். கார் மோதிய வேகத்தில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டார். அதில் அவரது கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு காரில் ரஞ்சித் ராஜன் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார்.
அவர் காயமடைந்து கிடந்த தான் காதலிக்கும் பெண்ணை மீட்டு, தனது காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய ரஞ்சித்ராஜனின் நண்பர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்துக்கு ரஞ்சித் ராஜன் உடனடியாக வந்தது எப்படி? என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்தது.
இதனால் இந்த விபத்து தற்செயலாக நடந்திருக்காதோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அஜாஸ் மற்றும் ரஞ்சித் ராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இறுதியில் ரஞ்சித்ராஜன் தனது நண்பருடன் சேர்ந்து விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரஞ்சித்ராஜன் மற்றும் அஜாஸ் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணின் மீது காரால் மோதச்செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி சனிக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி ஜனாதிபதி திரவு பதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந்தேதி காலை 11 மணிக்கு மத்திய பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும்.
இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே பிப்ரவரி 1-ந்தேதி 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு இன்று முடிவு செய்கிறது.
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? அல்லது 2-ந்தேதிக்கு மாற்றப்படுமா? என்பது தெரிய வரும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி சனிக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 1999-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாக பிப்ரவரி 27-ந்தேதி யஸ்வந்த் சின்கா பட் ஜெட்டை தாக்கல் செய்தார். மாலை 5 மணிக்கு பதிலாக 11 மணிக்கு பட் ஜெட் உரை வாசிக்கப்பட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி ஜனாதிபதி திரவு பதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாள் 29-ந்தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகும்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு 3 வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். அதை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
2-வது கட்ட அமர்வு 4 வாரங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சபரிமலையில் நடத்தப்படும் பிரதான வழிபாடுகளில் ஒன்று நெய்யபிஷேகம்.
- மோசடி குறித்து தேவஸ்தான குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2019-ம் ஆண்டு முதல் நடந்த தங்க அபகரிப்பு தொடர்பாக கேரள ஐகோர்ட்டின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது நடப்பு சீசனில் சபரிமலையில் நெய்விற்பனை செய்ததில் ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-
சபரிமலையில் நடத்தப்படும் பிரதான வழிபாடுகளில் ஒன்று நெய்யபிஷேகம். பக்தர்கள் நடத்தும் நெய்யபிஷேகத்தின் போது சேகரிக்கும் நெய்யில் சிறிய அளவு அபிஷேகம் நடத்தும் பக்தர்களுக்கு வழங்கப்படும். மீதம் நெய் 100 கிராம் வீதம் பாக்கெட்டுகளில் அடைத்து ரூ.100 வீதம் கவுண்ட்டர்களில் விற்பனை செய்யப்படும்.
அவ்வாறு 16 ஆயிரம் பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்ட தொகை ரூ.16 லட்சம் இதுவரை தேவஸ்தான கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி குறித்து தேவஸ்தான குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடந்து வரும் இந்த தொடர் கொள்ளை, மோசடி சம்பவங்கள் பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே கடந்த சீசனில் சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிமுகம் செய்த ஐயப்பன் உருவம் பதித்த நாணயங்கள் சபரிமலையில் திருடப்பட்ட தங்கத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு சன்னிதானத்திலேயே விற்பனை நடத்தி இருப்பது சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.
- மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவது தேசத்துரோகமாகக் கருதப்படாது என இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பேஸ்புக்கில் பாகிஸ்தான் கொடி மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் படங்களை பதிவேற்றியதாகக் கூறி அபிஷேக் சிங் பரத்வாஜ் என்பவர் மீது இமாச்சலப் பிரதேச போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்ததாகவும், பாகிஸ்தான் நபருடன் உரையாடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அபிஷேக் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்போது பேசிய நீதிபதிகள், "இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் வீணானது என்றும், இரு நாடுகளும் பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
மேலும், அவரது சமூக வலைதளப் பதிவுகளில் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் எதுவும் இல்லை.
மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல" என்று தெரிவித்தனர்.
- மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
- பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது.
இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவால் உருவாக்கப்பட்டவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்கத்தின் கங்காசாகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காகப் பயன்படுத்தும் செயலிகள் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவால் உருவாக்கப்பட்டவை.
தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலிகள் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானவை.
இவை முழுக்க முழுக்க பாஜகவின் ஐடி செல் கண்காணிப்பில் இயங்குகின்றன. தேர்தல் ஆணையம் அனைத்தையும் தவறாகச் செய்கிறது. உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகப் பட்டியலிடுகிறார்கள்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது. மக்களின் குரலாக நான் நீதிமன்றம் செல்வேன்" என்று தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வழிமறித்த மூன்று பேர் சிறுமியை தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
- 3 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவில் விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் நாயரா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, திங்கள்கிழமை மதியம் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றுள்ளார்.
சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வழிமறித்த மூன்று பேர் சிறுமியை தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் கூற அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு முகவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.
- 'ஹனி டிராப்' மூலமாகவோ அல்லது பண ஆசை காட்டியோ ரகசியங்களை வாங்குகிறார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்குப் பகிர்ந்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பஞ்சாபின் எல்லைப்பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு முகவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.
அவர்களுக்கு இந்திய ராணுவ நிலைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உளவு அமைப்புகள் இந்திய இளைஞர்களைக் குறிவைத்து பெண்ணாசையை தூண்டும் 'ஹனி டிராப்' மூலமாகவோ அல்லது பண ஆசை காட்டியோ ரகசியங்களை வாங்குவது அதிகரித்து வரும் நிலையில் சிறுவன் சிக்கியுள்ளான்.
சிறுவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் பாகிஸ்தான் எண்களுடன் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- வங்கதேச ஊடுருவல்காரர்கள் என அழைத்து, 8 தொழிலாளர்களையும் சூழ்ந்துகொண்டு லத்திகளால் கடுமையாகத் தாக்கினர்.
- இதில் ஒரு தொழிலாளியின் கை எலும்பு முறிந்ததுடன், மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மேற்கு வங்க தொழிலாளர்கள் 8 பேர் மீது பஜ்ரங் தளம் அமைப்பினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 இஸ்லாமியத் தொழிலாளர்கள், ராய்ப்பூரில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வந்தனர்.
நீண்ட நாட்களாகத் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி நிலுவைத் தொகையை அவர்கள் கேட்டபோது, பேக்கரி நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த பஜ்ரங் தளம் அமைப்பினர் வந்து, அவர்களை வங்கதேச ஊடுருவல்காரர்கள் என அழைத்து, 8 தொழிலாளர்களையும் சூழ்ந்துகொண்டு லத்திகளால் கடுமையாகத் தாக்கினர்.
இதில் ஒரு தொழிலாளியின் கை எலும்பு முறிந்ததுடன், மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகப் பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானாவிற்கு அநீதி இழைத்ததாக கேசிஆர் மீது ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு.
- தெலுங்கானாவிற்கு அநீதி இழைத்த அவரை தூக்கிலிட வேண்டும் என ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார்.
ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு அநீதி இழைத்ததாக பிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேக ராவ் மற்றும் அவரது மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், அநீதி இழைத்த இருவரையும் தூக்கில் போட தகுதியானவர்கள் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும் என பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ராம ராவ் கூறுகையில் "உண்மையில் யாரை தூக்கிலிட வேண்டும். ராகுல் காந்தி வாரங்கலுக்கு வந்தார். அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். ரைத்து பாண்டு (Rythu Bandhu) கீழ் கேசிஆர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் 15 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்றார்கள். அவர்கள் கொடுத்தார்களா?. அவர்கள் இரண்டு பயிர்களுக்கு கொடுக்கவில்லை. தற்போது அவர்கள் 15 ஆயிரத்திற்குப் பதிலாக 12 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.
அனைத்துப் பயிர்களுக்கும் ரூ.500 போனஸ் வழங்குவது, குத்தகை விவசாயிகளுக்கு ரைத்து பாண்டு திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட மற்ற வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுகிறதா?.
அப்படியானால், யாரைத் தூக்கிலிட வேண்டும்? ரேவந்த் ரெட்டியை அல்ல. அவரை நம் மீது திணித்த ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும். வாரங்கலில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ராகுல் காந்தி 70 லட்சம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். அவரை ஒரு திறந்தவெளி சந்தையில் தூக்கிலிட வேண்டும்.
இவ்வாறு ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
- அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது.
- காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் வெனிசுலா அதிபர் மதுரோவின் கைது குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர்,
50 சதவீத வரியுடன் வர்த்தகம் செய்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. நடைமுறையில், இது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை, குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதியைத் தடுப்பதற்குச் சமமாகும். முன்பு அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது. நாம் மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கும், அதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன." என தெரிவித்தார்.

பிரித்விராஜ் சவான்
தொடர்ந்து மதுரோ கைது குறித்து பேசிய அவர்,
"அப்படியானால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. வெனிசுலாவில் நடந்தது போன்ற ஒன்று இந்தியாவில் நடக்குமா? திரு. ட்ரம்ப் நமது பிரதமரைக் கடத்திச் செல்வாரா?" என தெரிவித்தார்.
இவரின் இந்த கருத்துகள் விமர்சனங்களையும், கேலி, கிண்டல்களையும் பெற்றுவருகிறது. சமூக வலைதளத்தில் இவரின் இந்த கருத்துகளை பலரும் நகைச்சுவை செய்தாலும், பாஜகவினர் இந்த கருத்துக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
"காங்கிரஸ் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கீழ்த்தரமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான் இந்தியாவின் நிலையை வெனிசுலாவுடன் வெட்கமின்றி ஒப்பிடுகிறார். 'வெனிசுலாவில் நடந்தது இந்தியாவில் நடக்குமா?' என்று கேட்பதன் மூலம், காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது. ராகுல் காந்தி பாரதத்தில் குழப்பத்தை விரும்புகிறார். ராகுல் காந்தி பாரதத்தின் விவகாரங்களில் வெளிநாட்டினரின் தலையீட்டை நாடுகிறார்!" என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- கிரிமினல்கள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள், தற்போது விரக்தியடைந்துள்ளனர்.
- அவர்களுடைய தீய திட்டம் ஒன்றன்பின் ஒன்றாக தகர்க்கப்பட்டு வருகின்றன.
2020 டெல்லி வன்முறை சதி வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதனைத்தொடர்ந்து டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியானது. கோஷம் எழுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லி மாநில அமைச்சர் கபில் மிஸ்ரா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில் "பாம்புகள் நசுக்கப்படுகின்றன. பாம்பு குட்டிங்கள் அலறுகின்றன. கிரிமினல்கள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள், தற்போது விரக்தியடைந்துள்ளனர்.
ஏனென்றால், அவர்களுடைய தீய திட்டம் ஒன்றன்பின் ஒன்றாக தகர்க்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கிரிமினல்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது.
- அத்துடன் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இன்னும் மாநில அந்தஸ்து வழங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சரான ஜாவித் ராணா, லடாக் ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாவதற்கான நாள் வெகுதொலையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜாவித் ராணா கூறுகையில் "லடாக் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாவதற்கான நாள் வெகு தொலையில் இல்லை என நான் நம்புகிறேன். இதைத் தவிர இந்திய அரசுக்கு மாற்று வாய்ப்பு ஏதுமில்லை.
நீங்கள் (மத்திய அரசு) ஒரு பகுதியை பாகிஸ்தானுக்குக் கொடுத்தீர்கள். கில்ஜித்-பால்டிஸ்தானும் பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு லடாக்கைப் பிரித்தீர்கள். இப்போது நம்மிடம் இருப்பது ஜம்மு- காஷ்மீர் மட்டும்தான். இந்த நிலத்தை பிரித்தவர்களே, இப்போது கனக் மண்டியை (ஜம்முவில் உள்ள ஒரு பகுதி) கூட ஒரு மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள்" என்றார்.






