search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம்"

    • பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. 168 பயணிகள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். விமானி பரிசோதித்தபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

    இன்று மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் தவித்தபடி இருந்தனர்.

    • பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.
    • பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

    ஜெர்மனியில் இருந்து பாங்காக்கை நோக்கி எல்எச்772 லுஃப்தான்சா விமானம் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் பயணித்த ஜெர்மன்- தாய்லாந்தை சேர்ந்த கணவர்- மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் தம்பதி இடையே வாக்குவாதமாக தொடங்கிய பிரச்சனை அதுவே பெரிய தகராறாகவும் மாறியுள்ளது. இதனால், கணவரின் நடத்தையால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி மனைவி விமானியின் உதவியை நாடினார்.

    இதை அடுத்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. முன்னதாக, பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில், லுஃப்தான்சா விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது. பின்னர், கணவரை விமானத்திலிருந்து இறக்கப்பட்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்கநரகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் அந்த நபர் விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த நபர் இந்திய பாதுகாப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவாரா அல்லது ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்படுவாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.

    லுஃப்தான்சா விமானம் அதன் டயர்கள் குளிர்ந்தவுடன் தாய்லாந்திற்கு புறப்படும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    • முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

    இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.

    போர் விமான பயணித்திற்கு பிறகு பிரதமர் மோடி தனது அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேஜஸ் போர் விமானத்தில் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் உள்நாட்டுத் திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும், நமது தேசிய திறன் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை 6.25 மணியளவில் விமானம் புறப்படதயாராக இருந்தது. அதில் 154 பேர் பயணம் செய்ய இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு முன்னதாகவே பாதுகாப்பு சோதனை அனைத்தையும் முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

    ஆனால் எதிர் முனையில் வர வேண்டிய விமானம் தாமதமானதால் டெல்லி விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 8 மணி வரையில் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பின்னர் இரவு 9.25 மற்றும் 10 மணியளவில் விமானம் புறப்படும் என்று அடுத்தடுத்து தெரிவித்தும் விமானம் புறப்படவில்லை.

    இதேபோல் சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு, அகமதாபாத் செல்ல வேண்டிய அதே நிறுவன மற்றொரு விமானமும் இரவு 10 மணி வரையில் புறப்படவில்லை. இதனால் அந்த விமானத்தில் பயணம்செய்ய இருந்த 162 பயணிகளும் டெல்லி பயணிகளுடன் சேர்ந்து போராட்டம் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் உள்நாட்டு விமான முனையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து 6.25 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக, இரவு 10.35 மணிக்கும், இரவு 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம் இரவு 10.50 மணிக்கும் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • பள்ளி மாணவர்கள் விமானத்தை நேரில் பார்க்க வேண்டும் என ஆசிரியைகளிடம் தெரிவித்துள்ளனர்.
    • நாட்டுப்புற கலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 130 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக சித்ரா மற்றும் ஆசிரியைகளாக சிவசங்கரி, லதா, ரேவதி ஆகிய 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் தஞ்சை, பிள்ளையார்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    விமானம்

    இந்த நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் விமானத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை ஆசிரியைகளிடம் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் செய்தனர். ஆனால் அவர்களுக்கு விமானத்தை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.

    இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைய கூடாது என முடிவெடுத்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தனர்.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், பள்ளி கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு, மாணவர்களின் பெற்றோர் என அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருந்தனர். மேலும் முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார் மற்றும் உட்கட்டமைப்புக்கு அரசு சார்பில் நிதி அளிக்கபட்டது. தற்போதைய முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பள்ளியின் வளர்ச்சிக்கு பக்க பலமாக உள்ளார். இதையடுத்து பள்ளி சுவரில் விமானம், ரெயில், கப்பல், ஆம்னி பஸ் போன்றவற்றின் வரைப்படத்தை ஓவியர் நரசிம்மன் மூலம் தத்ரூபமாக வரைய செய்தனர். இதேப்போல் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள், தண்ணீர் சேமிப்பு, நாட்டுப்புற கலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன.

    ஆசிரியைகளின் இந்த அசத்தல் செயலால் மாணவ-மாணவிகள் சுவரில் வரையப்பட்டுள்ள விமானம், ரெயில், கப்பல் போன்றவற்றில் ஏறுவது போல பள்ளி உள்ளே செல்கிறார்கள். பின்னர் அவற்றில் இருந்து இறங்குவது போல பள்ளியில் இருந்து வெளியே செல்கின்றனர். இதேப்போல் செயற்கை க்கோள், விவசாயம் உள்பட பல்வேறு ஓவியங்களை பார்த்து அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கின்றனர்.

    இது தவிர மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்பட பல்வேறு தேச தலைவர்களின் ஒவியம், அவர்கள் போதித்த வாசகம் ஆகியவையும் வரையப்பட்டுள்ளதால் மாணவர்களின் தேசப்பக்தி வளர்ச்சி அடைகிறது. மேலும் பள்ளி முகப்பு தோற்றத்தில் மகிழ்ச்சியான பிரபஞ்சத்திற்கு வரவேற்கிறோம் என்றும், ஒவ்வொரு வகுப்பறைக்கும் மகிழ்ச்சி வகுப்பறை, நம்பிக்கை, தேனீக்கள், நேர்மை வகுப்பறை என ஓவியமாக எழுதி பெயரும் சூட்டப்பட்டுள்ளது. தனியார் பள்ளியை மிஞ்சியது

    இந்த தத்ரூப ஓவியம் மூலம் படிப்போடு பொது அறிவையும் மாணவர்கள் வளர்த்து கொள்கின்றனர். ஆசிரியர்களின் இந்த செயலால் பிள்ளையார்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியானது தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் உள்ளது என்றால் அது மிகையல்ல. மேலும் மாணவர்களின் விருப்பத்தை விதியாசமான முறையில் தத்ரூபமான ஓவியங்களால் நிறைவேற்றிய தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • இதே போல் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளும் அரிய வகை உயிரினங்கள் கடத்தி செல்கின்றனர்.
    • அப்போது 14 பயணிகள் உரிய அனுமதியின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    கே.கே.நகர

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உள்பட பல பொருட்களை கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

    இதே போல் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளும் அரிய வகை உயிரினங்கள் கடத்தி செல்கின்றனர்.

    அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்வ தற்காக நேற்று காலை ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 14 பயணிகள் உரிய அனுமதியின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க வில்லை.

    இதே போல் இன்றும் 17 பயணிகள் சிக்கினர். அவர்களிடம் சுங்கதுறை அதிகாரிகள் உடமைகளை தவிர்த்து செல்ல விரும்பி னால் பயணம் செய்யலாம் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 5 பயணிகள் மட்டும் விமா னத்தில் பயணம் செய்தனர். மீதமுள்ள 12 பயணிகளும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    நேற்று 14 பயணிகளும் இன்று காலை 12 பயணிகளும் என மொத்தம் 26 பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • டெல்அவிவ் சென்றபோது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • விமானம் ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    புதுடெல்லி:

    போர் நடந்து வரும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்டு வர ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக சிறப்பு விமானங்கள் அனுப்பி அவர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.

    இந்தியர்களை மீட்பதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து டெல்அவிவ் சென்றது. இந்த விமானம் நேற்று நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது.

    ஆனால் டெல்அவிவ் சென்றபோது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த விமானம் ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்ட பின் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரை இறங்க முடியாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • 5 மணி நேரத்துக்கு பின்னர் 9.20 மணிக்கு விமானம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டு சென்றது.

    கோவை,

    வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.

    இந்த விமானம் நேற்று நள்ளிரவு ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். அதிகாலை 3 மணியளவில் விமானம் கோழிக்கோட்டிற்கு வந்தது. அப்போது அங்கு மோசமான வானிலை நிலவியது.

    இதன் காரணமாக விமானத்தை தரை இறங்க முடியாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விமானி விமானத்தை கோவை விமான நிலையத்துக்கு திருப்பினார். அதிகாலை 4 மணிக்கு விமானம் கோவை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

    பின்னர் விமானத்தை விட்டு இறங்கிய பயணிகள் விமான நிலையத்தில் உள்ள ஒய்வு அறையில் ஒய்வு எடுத்தனர். பின்னர் வானிலை சரியான பின்னர் 5 மணி நேரத்துக்கு பின்னர் 9.20 மணிக்கு விமானம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டு சென்றது.

    • விமான சேவைகளில் சற்று பாதிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • டெல்லி, அபுதாபி, ஐதராபாத் உள்பட 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, கோவை, அபுதாபி, புனே, ராஞ்சி, ஐதராபாத், கொல்கத்தா உள்பட 10 விமனங்கள் பலத்த மழை பெய்தால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. வானிலை சீரானதும் வட்டமடித்து பறந்த கொண்டிருந்த ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்ட வேண்டிய டெல்லி, அபுதாபி, ஐதராபாத் உள்பட 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தால் விமான சேவைகளில் சற்று பாதிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
    • புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று அந்த விமானம் வழக்கம்போல் துயாய்க்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் என்று 176 பேர் பயணித்தனர்.

    விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, சரக்கு பெட்டி இருந்த பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த பணியாளர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானத்தை தரையிறக்க கோழிக்கோடு விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டார்.

    ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தில் சில ஓடுபாதைகளில் பணிகள் நடைபெற்று வருவதால், துபாய் விமானத்தை அங்கு உடனடியாக தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    பின்பு அதிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்பு விமானத்தில் வந்த புகை கட்டுப்படுத்தப்பட்டது. புகை வந்தது உடனடியாக கவனிக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரிய அளவில் விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டது.

    மேலும் விமானத்தில் இருந்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமானத்தில் செல்ல இருந்த 164 பயணிகளும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்தனர்.
    • டெல்லி செல்ல இருந்த மற்ற விமானங்களில் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்டது.

    சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை 6 மணியளவில் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 164 பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கும், பின்னர் காலை 9 மணிக்கும் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்திரகோளாறு சரிசெய்யப்படாதால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த 164 பயணிகளும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்தனர்.

    மேலும் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த மற்ற விமானங்களில் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்டது.

    • காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.
    • கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    தெய்வங்கள்கூட மிக்க வைராக்கியத்துடன், தாங்கள் நினைத்ததைச் சாதிக்கின்றனர்.

    ஊண், உணவு, உறக்கம் இழந்து, தவமாய் தவமிருந்து தாங்கள் அடைய வேண்டியதை அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இதற்கு உதாரணமாய்த் திகழும் தெய்வம் மாங்காடு காமாட்சி அம்மன்!

    காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.

    கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    நினைத்ததைச் சாதித்துப் பெற்றாள் இந்த அம்மன்.

    ×