search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேபி நட்டா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, 'மோடியுடன் நீங்கள், உங்களுடன் மோடி' என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.
    • இன்று இந்திய தேசம் முழுவதும் உரத்த குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் தங்களது X கணக்கில், 'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை இணைத்துள்ளனர்.

    முன்னதாக தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, 'மோடியுடன் நீங்கள், உங்களுடன் மோடி' என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் இன்று இந்திய தேசம் முழுவதும் உரத்த குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

    இதே போல் 2019 மக்களவை தேர்தலிலும் சவுக்கிதார் மோடி என்ற வாசகத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பாஜகவினர் சேர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அதில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ்,"நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் இல்லை. ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது. அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது" என தெரிவித்திருந்தார்;

    பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்த நிலையில், நான் மோடியின் குடும்பம் என்ற வாசகத்தை பாஜகவினர் இன்று தனது X கணக்கில் இணைத்துள்ளனர்.


    • குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.
    • மத்தியபிரதேசத்தில் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தேர்வானார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    இதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தில் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்

    இந்நிலையில், ஜே.பி.நட்டா இன்று குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மதன் ரத்தோர், சுனிலால் காசியா ஆகியோரும் எம்.பி. ஆக போட்டியின்றி ராஜஸ்தானில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மகேந்திரஜீத் சிங் மாளவியா இன்று பாஜகவில் சேர்ந்தார்.
    • அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி மறுத்ததால் தான் வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மகேந்திரஜீத் சிங் மாளவியா இன்று பாஜகவில் சேர்ந்தார்.

    நேற்று (பிப் 18) டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த மாளவியா, இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

    இன்று ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில், ராஜஸ்தான் பாஜக பொறுப்பாளர் அருண் சிங், மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

    பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தெற்கு ராஜஸ்தானின் முக்கிய பழங்குடி தலைவராக இருந்த மாளவியா பாஜகவில் சேர்ந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    பாஜகவில் இணைந்த பின்னர் பேசிய மாளவியா, "பழங்குடியினர் பகுதியில் பாஜக மற்றும் மோடியைத் தவிர வேறு யாரும் வேலை செய்ய முடியாது. மோடி அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதால்தான் பாஜகவில் சேர முடிவு செய்தேன்" என்று கூறியுள்ளார்.

    மேலும், "அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி மறுத்ததால் தான் வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    மாளவியா 2008 முதல் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் 2008 முதல் 2013 வரையிலும், மீண்டும் 2021 முதல் 2023 வரையிலும் கேபினட் அமைச்சராக இருந்துள்ளார். 1998-ல் பன்ஸ்வாரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்தது பாஜக.
    • மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவானும் போட்டியிட வாய்ப்பு.

    குஜராத், மகாராஷ்டிராவில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க., வெளியிட்டது.

    இதில், குஜராத்தில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாநிலங்களவை எம்.பி., ஆகிறார்.

    இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த அசோக் சவான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார்.   

    • வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார்.
    • பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா நேற்று சென்னை வந்தார். தங்கசாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதன் பிறகு அவர் டெல்லி புறப்படும் முன்பு தோழமைக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்காகவே வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார். நட்டாவை சந்திக்க அவர் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை நட்டா அழைக்கவில்லை.

    பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமை பெறவில்லை.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ்.சை சந்தித்து பேசினால் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அடுத்தடுத்த பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படலாம் என்று கருதப்பட்டது. இதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை நட்டா சந்திக்காமல் சென்றார் என்று கூறப்படுகிறது.

    • காட்டாங்குளத்தூரில் நடக்கும் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
    • ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ஜனதாவின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக இருந்தது. அதன் பின்னர் மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக பயண நிகழ்ச்சி வகுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அவர் திடீரென பயண திட்டத்தை மாற்றியுள்ளார். காலை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஜே.பி.நட்டாவிற்கு பதில் மாநில செயலாளர் அண்ணாமலையும், பொறுப்பாளர் தேசிய விநாயகமும் கலந்து கொள்கிறார்கள்.

    மாலை 5 மணிக்கு நட்டா டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அதன் பிறகு அமைந்தகரையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    • தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.
    • தமிழகத்தில் பா.ஜனதா மேற்கொள்ளும் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் ஜே.பி.நட்டா கேட்டறிய உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பணிகளை வேகப்படுத்தி உள்ளன. தமிழக பா.ஜனதா சார்பில், 'பூத்' கமிட்டி அமைக்கப்பட்டு, அவற்றை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டுகிறது.

    இந்த நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவரின் இந்த பயணம், அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது, தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

    முதலாவதாக, சென்னை அடுத்த காட்டாங்குளத்தூர் அருகே பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் தமிழக பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, சமூகவலைதள பிரசார பிரிவு, மகளிர் அணி, இளைஞரணி, சட்டம் பிரிவு உள்பட 38 குழுக்களையும் ஜே.பி.நட்டா சந்தித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

    தமிழகத்தில் பா.ஜனதா மேற்கொள்ளும் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேட்டறிய உள்ளார். மேலும், தேர்தல் வியூகங்கள் வகுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு குழுக்களுக்கு அவர் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின்போது, கூட்டணி குறித்தும் விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு, சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ஜே.பி.நட்டா பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார்.

    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-இல் நடைபெறுகிறது.
    • கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பிரபலங்கள், தலைவர்களுக்கு அழைப்பு.

    அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேரடியாக கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் கும்பாபிஷேக நிகழ்வை ஜந்தேவாலன் கோவிலில் இருந்து பார்க்க இருக்கிறார்.

    இது குறித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பிற்காக அறக்கட்டளைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

     


    "500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்படும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி முடிந்ததும், எனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்காக விரைவில் அயோத்திக்குச் செல்வேன். ஜனவரி 22-ம் தேதி, ஜந்தேவாலன் கோவில் முற்றத்தில் இருந்து கும்பாபிஷேக விழாவைக் காண இருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளும் பா.ஜ.க.வின் பல நடவடிக்கைகளை ஆதரித்து வருபவர் கங்கனா
    • எந்த தொகுதி என்பது முடிவாகவில்லை என்றார் கங்கனாவின் தந்தை

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத் (36). இவர் 4 தேசிய விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் வென்றவர்.

    நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவு செய்து வரும் கங்கனா, ஆளும் பா.ஜ.க.வினரின் பல நடவடிக்கைகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஆதரித்து வருபவர்.

    அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    கங்கனாவிடம் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் உள்ளதா என கேட்கப்பட்ட போது, "பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசி இருந்தால் போட்டியிடுவேன்" என தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    இந்நிலையில், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வின் சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுவார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது தற்போது உறுதியாகவில்லை" என கங்கனாவின் தந்தை அமர்தீப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஹிமாச்சல் பிரதேச மாநில பிலாஸ்பூர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டார். தனது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் ஒத்து போவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

    கடந்த 2008ல் தமிழில் வெளியான "தாம் தூம்" எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.
    • தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை வரவேற்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா.

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டசபை தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

    அதன்படி, மிசோரமில் வரும் நவம்பர் 7ம் தேதி அன்றும், சத்தீஸ்கர் (2 கட்டங்கள்) - நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 அன்றும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதி அன்றும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி அன்றும் தேர்தல் நடைபெறுகிறது.

    மேலும், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை வரவேற்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, 5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜே.பி.நட்டா அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயல்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.
    • அங்கு அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

    சென்னனை:

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறவும், இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறவும் பா.ஜ.க. தீவிரமாக வேலை செய்து வருகின்றது.

    இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி செல்கிறார்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி தனித்தனியே சந்தித்து, பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது.
    • தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது

    போபால்:

    230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி இந்தாண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த மாதம் 17-ந்தேதி 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதியஜனதா வெளியிட்டு அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது.

    பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரசும் தயாராகிவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த ஆட்சி 2 ஆண்டு காலமே நீடித்தது. 2020-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

    இதனால் காங்கிரஸ் ஆட்சியும் கவிழ்ந்தது.

    இதையடுத்து சிவராஜ் சிங் சவுதான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. தொடர்ந்து அக்கட்சி ஆட்சியில் நீடித்து வருகிறது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதியஜனதா உள்ளது.

    அதே சமயம் இழந்த ஆட்சியை மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் மலர வைப்பதில் அக்கட்சி தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதற்கு பலனாக சமீபத்தில் பல பாரதியஜனதா தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மறுபடியும் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான ராஜேஷ் குப்தா ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காங்கிரசில் சேர்ந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் சில தலைவர்கள் விலகியதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று பாரதியஜனதா ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் வெற்றி வியூகம் குறித்தும், பாரதிய ஜனதா வெற்றிக்காக பாடுபடுவது குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×