search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமையாளர்"

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழப் பெருவிளை கோவிலடி விளை பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 47).

    இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.விஜயன் நாகர்கோவில் இந்து கல்லூரி பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பேட்டரி கடை வைத்துள்ளார்.

    புனிதா நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று காலை விஜயன் வழக்கம் போல் கடையை திறப்பதற்காக கடைக்கு வந்துள்ளார்.இரவு விஜயன் வீட்டிற்கு செல்லவில்லை.

    இதையடுத்து அவரது மனைவி புனிதா அவரது செல்போனை தொடர்பு கொண்டு உள்ளார். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இரவு கணவர் வீட்டுக்கு வராததால் இன்று காலையில்புனிதா செட்டிகுளத்தில் உள்ள கடைக்கு வந்துள்ளார்.

    அப்போது கடையின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது. பூட்டு போடவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷட்டரை திறந்து கடைக்குள் சென்றபோது விஜயன் தூக்கில் பிணமாக தொங்கினார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புனிதா கதறி அழுதார்.

    பின்னர் இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விஜயன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். விஜயன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கடைக்குள் பேட்டரி கடை அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ தேவி (45). இவரது கணவர் தாமோதரன் (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    தாமோதரன் ஈரோடு நகரில் உள்ள கண்ணகி வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு தலையில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனைவி ஸ்ரீதேவி கடையை கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உணவருந்த ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டின் படுக்கை அறையில் பேன் மாட்டும் கொக்கியில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ஸ்ரீதேவி அவரை மீட்டு அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார்.
    • படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    ஈரோடு, ஆக. 26-

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை சின்ன பிடாரியூரைச் சேர்ந்தவர் கதிரேசன் (38). இவரது மனைவி ரமாதேவி (34). இவர்களுக்கு 11 மற்றும் 9 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கதிரேசன் சென்னிமலை பெரியார் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். ரமாதேவி அவருக்கு உதவியாக ஜவுளி கடையை கவனித்து வந்தார். கதிரேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டுக்கு சென்ற கதிரேசன் மாலை 5 மணி ஆகியும் ஜவுளி கடைக்கு வரவில்லை.

    இதையடுத்து ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது ரமாதேவி இனிமேல் குடித்துவிட்டு ஜவுளி கடைக்கு வரவேண்டாம் என கூறியதாகத் தெரிகிறது.

    அதைக்கேட்ட கதிரேசன் உடனடியாக படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    உடனடியாக ரமாதேவி கதிரேசனின் சகோதரர் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து படுக்கையறை ஜன்னலை உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று கதிரேசனை மீட்டுப் பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரமாதேவி அளித்த புகாரின்பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் பயன் அடைந்து வருகின்றனர்.
    • சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில் குறித்து தவறான செய்திகளை புகார் மனுவாக கொடுத்து வருகின்றனர்

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட ஜல்லி கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் கல்குவாரி மற்றும் கிரசர் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றும்,சுற்றுச் சூழல் மற்றும் கனிம வளத் துறை அனுமதி பெற்றும், குவாரியிலிருந்து உரிய நடைச்சீட்டு பெற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரி தொழில் செய்து வருகின்றோம். கல்குவாரியிலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள சாலை பணி, அரசு கட்டிட பணி மற்றும் இதர அத்தியாவசிய கட்டிட பணிகளின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. அனைவரும் அரசிற்கு செலுத்தும் பர்மிட் கட்டணம், சீனியரேஜ் தொகை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டண தொகையையும் செலுத்தி வருகிறோம். சட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்து வருகிறோம். மேலும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய் பல கோடி கடன் பெற்று மாத தவணைகள் செலுத்தி வருகிறோம். இத்தொழில் மூலம் நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் அரசு அலுவலகங்களுக்கு சென்று கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில் குறித்து தவறான செய்திகளை புகார் மனுவாக கொடுத்து வருகின்றனர்.கல் குவாரி உரிமையாளர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறாக பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்தும், மேலும் எங்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். இதனால் எங்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. சட்டபூர்வமாக உரிமம் பெற்று தொழில் செய்து வரும் எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பணம் பறிக்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் என்கிற போர்வையில் மிரட்டல் போக்கை கையாளுகின்றனர். அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2019 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.70 லட்சம் மதிப்பில் நூல் வாங்கி உள்ளார்.
    • நூல் தரத்தில் வேறுபாடு மற்றும் குறைபாடு.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது40). இவர் அதே பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜவுளிநிறுவனத்திற்கு தேவையான நூலை ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுக்குரிப் பேட்டையில் செயல்பட்டு வரும் இடுப்பிலபாடு காட்டன் மில்லில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.70 லட்சம் மதிப்பில் நூல் வாங்கி உள்ளார். இதில் ரூ.44 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நூல் தரத்தில் வேறுபாடு மற்றும் குறைபாடு ஏற்பட்டதால் இது குறித்து நூல் மில்லுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் முறையாக பதில் தராததால் மீதி தொகை ரூ.26 லட்சத்தை தராமல் நிறுத்தி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் நூல் வியாபார இடைத்தரகர்கள் அர்பித் ஜெய் மற்றும் சின்னசாமி ஆகியோருடன் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார், வெங்கடகிருஷ்ணா, வெங்கடேஷ்வரலூ மற்றும் ஆந்திரா மாநில போலீஸ் கோபி உள்ளிட்ட 6 பேர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து வருவதாகவும், இடுப்பிலபாடு காட்டன் மில்லில் நூல் கொள்முதல் செய்ததில் ரூ.26 லட்சம் பல்லடத்தை சேர்ந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் தமிழ்செல்வன் தராததால் சிலுகுரிப்பேட் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், கோர்ட் உத்தரவுப்படி பிடிவாரண்ட் பெற்று உரிமையாளர் தமிழ்செல்வனை போலீஸ் உதவியுடன் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து தமிழ்செல்வனுக்கு பல்லடம் போலீசார் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து ஆஜரான தமிழ்செல்வன் கோர்ட் உத்தரவு குறித்து சந்தேகம் அடைந்து தனது வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே கோர்ட்டு ஆர்டர் போலியாக தயாரிக்கப்பட்டதை கண்டறிந்த வழக்கறிஞர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து உஷாரான போலீசார் புகார் கொடுக்க வந்த 3பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதற்குள் ஆந்திர போலீஸ் கோபி அங்கிருந்து தலைமறைவானார்.

    பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பிடிபட்ட 3 பேரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டதில் போலியாக கோர்ட்டு ஆவணங்கள் தயாரித்து இது போன்று வராக்கடன்களை வசூலிக்க தொழில் அதிபர்களை அழைத்துச்சென்று மிரட்டி பணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்தனர்.மேலும் தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போன்று வசூலிக்க போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதும், பல்லடத்தில் மட்டும் 5 தனியார் நிறுவனங்களில் இது போன்று வராக்கடனை வசூலிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து போலி கோர்ட்டு ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட குண்டூரை சேர்ந்த முடலபடி ரவிக்குமார், குண்சாலா வெங்கடகிருஷ்ணா, டாகிபார்த்தி வெங்கடேஷ்வரலு ஆகியோரை கைது செய்து பல்லடம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நூல்மில் உரிமையாளர் பிரம்மநாயுடு, மேலாளர் சத்தியநாராயணராவ், ஆந்திர போலீஸ் கோபி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சாத்தூரில் நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.14.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக ஒரு பெண்ணை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 34). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இருக்கன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வி (38), கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள காரக்காடு பகுதியைச் சேர்ந்த பைசல் ஆகியோர் நிதி நிறுவனத்துக்கு வந்தனர். அங்கு வைரமுத்துவிடம் எங்களுக்கு சொந்தமான 458 கிராம் தங்க நகை, சாத்தூர் அரசு வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு மறு அடகு வைக்க பணம் உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர்.

    இதை நம்பி வைரமுத்து ரூ.14.5 லட்சத்தை 2 பேரிடமும் கொடுத்துள்ளர். மேலும் அவர்களுடன் பாலாஜி என்பவரை வைரமுத்து அனுப்பி வைத்துள்ளார்.

    பைசல், மாரிச்செல்வி வங்கிக்கு செல்வது போல் நடித்து பாலாஜியை ஏமாற்றி பணத்துடன் தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த வைரமுத்து மோசடி தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    2 தனிப்படைகளை அமைத்து போலீசார் கேரளா மற்றும் தென்காசிக்கு சென்று 2 பேரையும் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை தென்காசியில் பதுங்கி இருந்த மாரிச்செல்வியை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்த 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் மாரிச்செல்வியை சாத்தூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முக்கிய குற்றவாளியான பைசலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வீடு விற்பனை செய்வதற்காக கோவையைச் சேர்ந்த தரகரை அணுகினர்.
    • தரகர் பெயருக்கு பவர் எழுதிக் தரப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமா கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(வயது 53). இவரது மனைவி மல்லிகா(48) .இந்த நிலையில் முத்துசாமியின் தாயார் அருக்காணி அம்மாள் அவருக்கு சொந்தமான வீட்டை முத்துசாமி பெயரில் எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

    இதனால், வீட்டை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து மருத்துவ செலவுகளை செய்து கொள்ளலாம் என குடும்பத்தார் முடிவு செய்து, வீடு விற்பனை செய்வதற்காக கோவையைச் சேர்ந்த தரகர் கோபிநாத் என்பவரை அணுகினர். கோபிநாத் தனது பெயரில் பவர் எழுதிக் கொடுத்தால் உடனடியாக விற்றுத் தருகிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெயருக்கு பவர் எழுதிக் தரப்பட்டது. இதன் பின்னர் பலமுறை கோபிநாத்தை தொடர்புகொண்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டின் பத்திரத்திற்கு வில்லங்க சான்று போட்டு பார்த்த போது, கோபிநாத், முத்துசாமிக்கு சொந்தமான வீட்டை ரூ. 35 லட்சம் ரூபாய்க்கு சத்யன் என்பவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த பத்திரப்பதிவு மோசடிக்கு முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லை என போலியான மருத்துவ சான்றிதழ் தயாரித்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து முத்துசாமி குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகார் திருப்பூர் மாவட்ட நில மோசடி புகார் பிரிவுக்கு மாற்றப்பட்டு இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மளிகை கடை உரிமையாளர் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் கொங்கு நகரை சேர்ந்தவர் பீட்டர் (46). இவர் மணிக்கூண்டு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    இன்று காலை பீட்டர் தனது 2 மகள்களை அழைத்து கொண்டு அய்யப்பன் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் மகள்களை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அய்யப்பன் நகர் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி பீட்டர் மீது மோதியது.

    இதில் நிலைகுலைந்த அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.

    பின்னர் பலியான பீட்டரின் உடலை மீட்டு பரிேசாதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
    • விவசாயி இறந்துகிடந்தது குறித்து வீட்டின் உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் அருகே தாளக்கரையில் சுதா என்பவரது வீட்டில் விவசாயி செல்வராஜ் என்பவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தகவல் அறிந்த செல்வராஜின் மனைவி மற்றும் அவர்களது உறவினர்கள் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் அடிப்படையில் நெல்லூர் போலீசார் சுதாவை கைது செய்து செல்வராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் செல்வராஜ் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்

    • மொடக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் கேபிள் கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவரது மனைவி கோகிலா. இவர்கள் பெருந்துறையில் கேபிள் கடை வைத்து நடத்தி வந்தனர்.

    கார்த்திகேயனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்அவர் தனது பெற்றோரிடம் சொத்தில் பங்கு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். கடன் தொல்லையால் கார்த்திகேயன் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் வண்ணாம் பாறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மனைவியுடன் வந்து தங்கி இருந்ததார். இதையடுத்து கோகிலா அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த கார்த்திகேயன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம் நெத்திமேட்டில் கந்து வட்டி கேட்டு மிரட்டல் நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு கே.பி. கரட்டை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 45). ஜவ்வரிசி வியாபாரியான இவர் நேற்று அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் தொழிலை மேம்படுத்த நெத்திமேட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை அணுகினேன். அப்போது நிதி நிறுவன உரிமையாளரான ராஜவேல் பாபுவிடம் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.2 லட்சம் ரூபாயை கந்து வட்டிக்கு வாங்கினேன், மாதம் 26 ஆயிரம் வீதம் 10 தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்தினேன்.

    பணத்தை பெற்ற அவர் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு வந்தார். தர மறுத்த நிலையில் கடந்த 9-ந் தேதி மிரட்ட ல் விடுத்தார். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறி இருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக ராஜவேல்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×