ஜவுளி கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை

சம்பவத்தன்று ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜவுளி கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ தேவி (45). இவரது கணவர் தாமோதரன் (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

தாமோதரன் ஈரோடு நகரில் உள்ள கண்ணகி வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு தலையில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனைவி ஸ்ரீதேவி கடையை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று உணவருந்த ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டின் படுக்கை அறையில் பேன் மாட்டும் கொக்கியில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ஸ்ரீதேவி அவரை மீட்டு அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com