search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி கடை"

    • சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இவர் அந்த மாநகராட்சி வணிக வளாகத்தில் வியாபாரிகள் சங்க பொருளாளராகவும் உள்ளார். சம்பவத்தன்று இரவு பாண்டியன் கடையை அடைத்து விட்டு கீழ்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தை எடுக்க வந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    இதில் பாண்டியன் மண்டை உடைந்தது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்டது தொடர்பான தகராறில் அவரை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து பாண்டியன் தஞ்சை நகர கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜவுளி கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கைதான இருவர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மதுரை

    மதுரை வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அந்த பகுதியில் ஜவுளி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது 2 பேர் வந்தனர். அவர்கள் சரவணனிடம் மாமூல் கேட்டனர். அவர் தர மறுத்தார்.

    ஆத்திரமடைந்த 2 பேரும் ஜவுளிக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் கடை மீது கல் வீசி தாக்கினர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் ஜவுளி கடையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த பைப் குமார் (42), திருமங்கலம் ஆனந்தன் தெரு சிவராஜா(43) ஆகியோரை கைது செய்தனர்.

    கைதான இருவர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜவுளிக்கடையில் அதிகளவில் விற்பனை நடைபெற்றது.
    • இன்று 2-வது நாளாக ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    கரூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கரூர், குளித்தலை, சேலம், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட 5 இடங்களில் கிளைகள் உள்ளது.

    இந்நிலையில் கரூர் மற்றும் சேலத்தில் உள்ள கிளைகளில் நேற்று காலை திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கடை உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர்.

    சேலம் 4 ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்த ஜவுளிக்கடையின் கிளையில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை, பிற்பகலை தாண்டியும் நீடித்தது. மொத்தம் 4 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகை புரிந்து சோதனைகளில் ஈடுபட்டனர்.

    ஜவுளிக்கடையின் ஒவ்வொரு தளங்களாக சென்று சோதனை நடத்திய அவர்கள், முறையாக வருமான வரி கட்டியுள்ளார்களா? அதற்குரிய ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜவுளிக்கடையில் அதிகளவில் விற்பனை நடைபெற்றது. ஆனால் அதற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாகவே வருமான வரித்துறை சோதனையில் இறங்கி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக கடை அடைக்கப்பட்டு உள்ளே சோதனை நடந்து வரும் நிலையில், ஜவுளி எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • சம்பவத்தன்று ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ தேவி (45). இவரது கணவர் தாமோதரன் (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    தாமோதரன் ஈரோடு நகரில் உள்ள கண்ணகி வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு தலையில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனைவி ஸ்ரீதேவி கடையை கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உணவருந்த ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டின் படுக்கை அறையில் பேன் மாட்டும் கொக்கியில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ஸ்ரீதேவி அவரை மீட்டு அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார்.
    • படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    ஈரோடு, ஆக. 26-

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை சின்ன பிடாரியூரைச் சேர்ந்தவர் கதிரேசன் (38). இவரது மனைவி ரமாதேவி (34). இவர்களுக்கு 11 மற்றும் 9 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கதிரேசன் சென்னிமலை பெரியார் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். ரமாதேவி அவருக்கு உதவியாக ஜவுளி கடையை கவனித்து வந்தார். கதிரேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டுக்கு சென்ற கதிரேசன் மாலை 5 மணி ஆகியும் ஜவுளி கடைக்கு வரவில்லை.

    இதையடுத்து ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது ரமாதேவி இனிமேல் குடித்துவிட்டு ஜவுளி கடைக்கு வரவேண்டாம் என கூறியதாகத் தெரிகிறது.

    அதைக்கேட்ட கதிரேசன் உடனடியாக படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    உடனடியாக ரமாதேவி கதிரேசனின் சகோதரர் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து படுக்கையறை ஜன்னலை உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று கதிரேசனை மீட்டுப் பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரமாதேவி அளித்த புகாரின்பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை ஜவுளி கடையில் கண்காணிப்பு காமிரா திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை

    நாகமலை புதுக்கோட்டை யை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி உமா மகேசுவரி (வயது 39). இவர் சின்னக்கண்ணு நகரில் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் கடையை மூடி விட்டுச் சென்றார். மர்ம நபர்கள் கடைக்கு வெளியே பொருத்தப்பட்டு இருந்த 2 கண்காணிப்பு காமிராக்களை திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார்.

    இதன்படி சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தரம் மேற்பார்வையில், நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் நாகமலை புதுக்கோட்டையில் வசிக்கும் 2 பேர் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் நாகமலை புதுக்கோட்டை கதிரேசன் மகன் விக்கி என்ற விக்னேஷ் (22), திருவள்ளுவர் தெரு சங்கர் கணேஷ் (30) ஆகியோரை கைது செய்தனர்.

    விக்னேஷ் மீது நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×